உள்விதி மனிதன்
சமமனிதக் கொள்கை
பாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள்விதி மனிதன்
INNER MAN GIVES HOLY LIFE
INNER MAN GIVES HOLY LIFE
என் பிரியமுள்ள மனிதா! இந்த உள்விதி மனிதனை பார்பதற்கு அல்லது இருப்பதை உணர்வதற்கு ஆகாரம் இல்லாமல், உறக்கமில்லாமல் ஆண்டுக்கணக்கில் உடலை மறந்து, உலகத்தை மறந்து ஏன் தன்னையே மறந்து யாரும் தொந்தரவு கொடுக்காதவாறு காட்டிலோ, மலையிலோ தவத்தை மேற்கொண்டால் தான் நான் கிடைப்பேன் என்று அரிய பெரிய ஞானிகள், மகான்கள், முனிகள் சொல்லியிருப்பதை ஏட்டிலும், புத்தகத்தில் வாயிலாகவும், உனது முன்னோர்கள் சொன்னதின் மூலமாகத் தெரிந்து கொண்டிருப்பாய். அவைகள் உண்மையா? அப்படியென்றால் இன்று எத்தனைபேர் அப்படி இருக்கின்றார்கள்? என்கிற சந்தேகம் உனக்கு வரலாம். அந்த சந்தேகத்தை இந்த உள்விதி மனிதன் தீர்த்துவைக்க விரும்புகிறேன்.
என் இனிய மனிதா! அவைகள் உண்மை தான்! ஆனால் அவைகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களுக்குத் தான் பொருந்தும். ஆனால் காலத்தின் வேகம், மனித அறிவின் ஆற்றல், அறிவியல் முன்னேற்றம், மனப்பக்குவம், எதையும் அறிந்துகொள்ளும் ஆவல், அறிந்ததை உடனே உலகுக்கு அறிவிக்கும் தகவல் பரிமாற்றத்தின் அபரிதமான வளர்ச்சி போன்றவைகள் வளர வளர என்னை தெரிந்து கொள்ளும் காலத்தின் அளவு மிகவும் சுருங்கிவிட்டன. இந்த பரப்பரப்பான உலகில் என்னை அறிய சிறிது நேரமே போதும். என்ன ...?? இதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கின்றதா! நீ நினைத்தால் உடனே செய்ய முடியும். அதுவும் நீ இருக்கும் இந்த இடத்தில் இருந்து கொண்டு!
பெருமை மிக்க மனிதா! இந்த உள்விதி மனிதனைப் பற்றிய விழிப்புணர்வு இது நாள் வரை மறைவாக, இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று, இப்போது முதல் இந்த உள்விதி மனிதனைப் பற்றிய உண்மைகள் நீ கட்டாயம் தெரிந்து கொண்டேத் தீர வேண்டுமென்பதற்காகவே இவ்வளவு தெளிவாக பொறுமையாக விவரித்துக் கொண்டிருக்கின்றேன். நீ தெரிந்து கொண்டால் தான் நான் படைத்த இந்த அதிசய, அற்புத உலகத்தை அழிவிலிருந்து காக்க முடியும். பல மகான்களின் கனவுகளும் பூர்த்தி அடையும். இனிமேல் நீ என்னை நன்றாகப் புரிந்து கொள்வாய். புரிந்துகொள்ளும்வரை உன்னை விடவும் மாட்டேன். அதற்குரிய மனப்பக்குவம், உடல் பக்குவம், ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவும் உனக்கு வந்துவிட்டது. என்னை அறிய மும்முரமாக முழு மனதுடன் கூடிய சிறிய முயற்சியும், பழகுவதற்குச் சிறிது பயிற்சியும் இருந்தால் போதுமானது.
பாசமுள்ள மனிதா! இந்த உள்விதி மனிதனை அறிந்தால் என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்பது புரிகின்றது. அதாவது நீயும், உனது முன்னோர்களும் தேடித்தேடி கிடைக்காத நிரந்தர மகிழ்ச்சியை உன்னைத் தேடி வந்து எப்போதும் உன்னிடத்தில் குடிகொண்டிருக்கும்படி செய்யப் போகிறேன். என்னை அறிந்த பிறகு உனக்கு வரப்போகும் நம்பிக்கை இந்த உலகத்தையே சொர்கமாக மாற்றும் ஆற்றல் கிடைத்துவிடும். எனக்காக நீ நான் சொல்கிறபடி நடக்க வேண்டாம். உனக்காக உனது நன்மைக்காக இந்த உள்விதி மனிதனுடன் வா. அதற்குண்டான வழியை உனக்கு காட்டுகிறேன்.
பெருமை கொண்ட மனிதா! சம்சாரத்திலிருந்து விலகி, பந்தபாசத்தைத் துறந்து தான் முக்தி நிலை அடையமுடியுமென்று சிலர் சொல்கிறார்கள். அவர்களின் கூற்றில் உண்மையில்லை என்று தான் நான் சொல்லுவேன். சம்சார பந்தம் என்பது என்னால் மனித குலத்திற்கு அளித்திருக்கும் விதி. அதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டிய புண்ணிய காரியமாகும். நான் உனக்குள் இருந்துகொண்டு உன்னைக் 'காத்தல்' வேலையை செய்துகொண்டு வருகிறேன். இந்த உலகில் பெருகிவரும் ஜனத்தொகையில் என்னால் ஒரே நேரத்தில் அனைவரையும் தனித்தனியாக காத்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே தான் நல்ல சிந்தனை உனக்களித்து, சம்சார பந்தங்களை ஏற்படுத்தி, குடும்ப பந்தத்தை உருவாக்கி ஒருவருக்கொருவர் காத்துக்கொள்ளும்படி செய்து இருக்கிறேன். அந்த பந்தத்தில் இருப்பவர்கள் அவர்களுக்குள் இரத்த உறவுகளை, நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டு உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களைப் பற்றிக் காக்கும் அக்கறை உள்ளவர்களாக ஒரு உணர்வை வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.
பண்புமிக்க மனிதா! அந்த உறவுகளெல்லாம் நான் கொடுத்திருக்கும் அனுபவத்தையும், செல்வத்தையும், இன்பத்தையும் கொடுத்து அவர்களைச் சந்தோஷத்தில் மிதப்பதற்கு உதவியாக இருக்கவே நான் உன்னுடன் இருக்கிறேன். அதை விட்டுவிட்டு என் பெயரைச் சொல்லி என்னை உணர்வதற்குச் சம்சாரப்பந்தத்தை துறந்து தான் உணரவேண்டும் என்று எண்ணுவது மிகப்பெரிய தவறு என்பதை புரிந்துகொள்.
நல்ல எண்ணமுள்ள மனிதா! இந்த உள்விதி மனிதனை உணர அனைத்தையும் மறக்கவேண்டும். பிறகு உனது கடமையைச் செய்யாமல் எனது கடமையைச் செய்யவேண்டும் என்பது சரியே இல்லை. உன்னிடத்தில் எண்ணற்ற எண்ணங்களும், செயல்களுக்கான அறிவுகள் இருக்கும்போது அவைகளையெல்லாம் யாராலும் ஒருகாலும் மறக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆக்க மற்றும் அழிப்பது எல்லாம் உன் கையில் தான் இருக்கின்றது. என்னை உணர்வதற்கு சராசரியானச் செயலே போதும். நூல்கள் பலவற்றை கரைத்து குடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
உண்மையான மனிதா! இந்த உள்விதி மனிதனைச் சில நிமிடங்கள் நினைத்தாலே போதுமானது. ஏனென்றால் எனக்கு இருக்கும் அனுபவத்தில் நீ ஒரு கோடு போட்டால் நான் ரோடே போட்டுவிடுவேன். நீ ஆரம்பித்து வைத்தால் உன்னை தூண்டிகொண்டும், ஊக்கப்படுத்தியும் தினமும் ஞாபகபடுத்தி அந்தச் செயலை முடிக்கும்படி செய்துவிடுவேன். நீயும் கூட கேள்விபட்டிருப்பாய். ஒரு செயலை செய்ய ஆரம்பித்தாலே அந்த செயல் பாதி முடிந்துவிட்டது என்று அர்த்தம். ஆனால் அந்த செயல் நன்மை தரும் செயலாக இருக்கவேண்டும்.
இரக்கமுள்ள மனிதா! முக்தி அடைவதற்கு சம்சாரிகளுக்குத் தடை ஏதுமில்லை. அப்படி சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டால் அவர்களின் குடும்பத்தை யார் கவனிப்பது? அவருடைய கடமைகளை யார் செய்வது? நீ தான் செய்யவேண்டும். உனது குடும்பத்திற்கு உனது ஆயுள் முழுவதும் நீ தான் வழிகாட்டியாக நீயல்லாமல் வேறு யார் தான் இருப்பார்கள். உனது சுய நலத்திற்காக பேராசைப்பட்டு எனக்கு சேவை செய்வதற்கு உனது குடும்பத்தை பிரிந்து வந்தால் உன் எண்ணம் மற்றும் செயல் முற்றுப் பெறாது. மனிதா! செல்வங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என்கிற நினைவு உனக்குள் ஓடிக்கொண்டிருக்கும். அதற்காக குறுக்கு வழியில் செல்வதற்கும் துணிந்து விடுகின்றாய்! இந்த உள்விதி மனிதனை நீ உணரவேண்டுமானால் எனக்கு கோடிக்கணக்கான ரூபாய், தங்கம், வைரம், வைடூரியம் போன்ற காணிக்கைகள் தேவையில்லை. உனது அன்பு கலந்த தூய்மையான எண்ணங்களும், நன்மை தரும் செயல்களுமே என்னை ஆட்கொள்ளும் வழி.
நல்ல சிந்தனை கொண்ட மனிதா! இந்த உலகத்தில் போலி மற்றும் வறட்டுக் கௌரவத்திற்காக என்னை ஆட்கொள்வதற்கு பலவழிகளில் செலவு செய்து பலரிடத்தில் சிபாரிசு பெற்று பல ஆயிரம் ரூபாய்களை கொட்டி ஆரவாரம் செய்கிறார்கள். அவைகள் வெறும் வெத்து வேட்டு. அதைப் பெற்றுக்கொண்டு சிலர் பரவசம் ஏற்படும்படி உணர்வுகளைத் தூண்டி ஆசியும் அருளும் வழங்குகிறார்கள். அந்த போலியான நடிப்பை உண்மையென்று நம்பி அவர்களிடத்தில் நீ கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை காணிக்கையாக செலுத்துகிறாயே, இது உனக்கே நல்லதாகத் தெரிகின்றதா! உன்னுடைய கஷ்டத்தை இந்த உள்விதி மனிதன் மனதில் வைத்துக்கொண்டு உனது வயிற்றுப் பசியை போக்க என்னாலான உதவியாக சொற்பமான பணத்தையும் நல்ல ஆரோக்கியமான உடலும் தருகிறேன். அதையும் நீ போலி ஆசாமிகளிடம் கொடுத்து ஏமாறுகிறாயே? அந்தச் செயலை இக்கணமோடு நிறுத்திக்கொள். அது உனக்கு மேலும் மேலும் துயரத்தைக் கொடுக்கும். நிம்மதியை இழக்கச் செய்யும்.
சத்திய மனிதா! சிலர் பரவசமாகப் பேசுவார்கள், காட்சி அளிப்பார்கள்! அந்தப் பரவசமெல்லாம் அந்த கணம் மட்டுமே உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த இடத்திலிருந்து உனது சொந்த இடத்திற்கு வந்தால் மீண்டும் நீ உனது பழைய நிலையை அடைந்து புலம்ப ஆரம்பித்துவிடுகிறாய். அதனால் அதில் உனக்கு லாபம் இருப்பதாக உணருகின்றாயா! அந்தப் பரவசம் ஒருவித மயக்கமே! மனிதா! என்னை வைரத்தால், தங்கத்தால் அபிஷேகம் செய்தால் அது எனக்குள் ஒட்டுமா! ஒட்டாது அல்லவா! அப்படியென்றால் அவைகள் யாருக்குப் போய்ச் சேருகின்றது? அப்படிச் சேராத இடத்தில் சேருகின்றதால் கெடுதலே உண்டாகும். அதற்கு நீ உடந்தையாக இருப்பதை நான் தடுத்து நிறுத்தி உன்னை இலவசமாக நல்ல எண்ணங்களின் மூலம் பிறப்பில்லா பெருவாழ்வு கொடுத்து முக்தியை பெற்று தருவதே இந்த உள்விதி மனிதனின் நோக்கம். அதற்கான ஆரம்பமே இது தான். நீ என்றும் நல்லவன். நீ சம்சார கடமை செய். அதன் மூலம் நான் உனக்கு முக்தி தருகிறேன்.

முக்தியை இலவசமாக அடையக்கூடிய வழி உன்னிடத்தில்...
உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்...
Everyone must read this series.
ReplyDelete