Pages

Friday, 19 October 2012

பாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும் - FROM TODAY THIS WORLD FILL WITH GOOD LIVES

கடவுள் எப்போதும் என் பக்கம்

 ( சம மனித கொள்கை) - 


பாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் 
உலகமாக மாறும் -
FROM TODAY THIS WORLD FILL WITH  GOOD LIVES


என் இனிய மனிதா! இந்த உள் மனிதனின் சொல்வாக்கு தொடர்கிறது. இதுநாள் வரையில் யாருக்கும் எளிதில் கிட்டாத இந்த அருமையான இத்தகைய சந்தர்ப்பம் உனக்கு என்மூலமாக கிடைத்திருக்கிறது. நீ இல்லாத இடத்திலெல்லாம் என்னைத் தேடி அலையும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. அதில்லாமல் இனிமேலும் நான் உன்முன் பிரசன்னமாவது தள்ளிப் போனால் உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளி இன்னும் அதிகமாகி காலம் காலமாய் சந்திக்க முடியாமல் போய்விடும். நான் உனக்கு கொடுக்க நினைக்கும் மகிழ்ச்சியும் கிடைக்காமல் போய்விடும். என்னை நன்றாக பயன்படுத்திக் கொள். அது இனி உன் கையில் இருக்கின்றது. எனது ஆன்ம ஓட்டத்தின் மகிமையை சுற்றி வளைத்து போசாமல், கடைசி வரையில் உன்னை குழப்பி தெளிவில்லாமல் ஒரு ஒப்புக்காக உன்னிடம் ஒரு தலையாட்டை பெற விரும்பவில்லை. ஏனென்றால் திருப்பி நான் என்ன சொன்னேன் என்று உன்னால் சொல்ல முடியாது. அதற்கு தான் உனக்கு எளிமையாக வகையில் புரிந்து கொள்வதற்காகவே உன்னுடலில் நடக்கும் செயலைக் கொண்டே விளக்குகிறேன்.


என் அன்பு மனிதா! ஒரு குறிப்பிட்ட மக்களின் மகிழ்ச்சிக்காக இந்த உலகத்தை நான் படைக்கவில்லை. எல்லோருக்கும் பொதுவாக ஒரே மாதிரியாகத் தான் படைத்திருக்கிறேன். ஆனால் அனைத்தும் கற்றுத் தேர்ந்த உண்மையான நன்மை நோக்கம் கொண்ட ஞானிகளும், யோகிகளும், அறிஞர் பெருமக்களும், சேவை மற்றும் தொண்டு செய்ய நினைப்பவர்களும் இந்த மனிதகுலத்தை சீர்படுத்துவதில் அக்கறை கொள்ளாமல் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தால் யாருக்கு என்ன லாபம்? அவர்களின் அறிவையும் , ஆற்றலையும் மக்கள் குலம் மகிழ்ச்சியடைவதற்கு உபயோகப்படாவிட்டால் அவர்கள் அடையும் பேறுதான் என்ன? எல்லோரும் சிறக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறித்தித் தான் காலம் சென்ற கவிஞர் 'எல்லோரும் எல்லாமே பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ' என்று தன வாழ்கை கனவை பாடல் மூலம் சொல்லியிருக்கிறார். அதற்காக அனைவரிடத்திலும் உள் மனிதனாக இருக்கிறேன்.பாட்டுடன் நில்லாமல் , நான் முயற்சி செய்து அனைவரையும் மகிழ்ச்சியுடன் வாழவைக்க வேண்டுமல்லவா! அது தானே எனது பிரதான கடமை.


என் பாசமுள்ள மனிதா! தனக்கு தெரிந்ததை மறைத்து வைப்பது பெரிய பாவமாகும். அதை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது அதைவிட பாவமாகும்! அதாவது அணுகுண்டை விட அழிவு தரக்கூடிய கல்வியை அல்லது  செயலையா தரப்போகிறீர்கள்? இப்படியே எத்தனைக் காலம் தான் நடுத்தர மற்றும் அடித்தட்டு மனிதர்களை மேல் தட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக பலவழிகளில் அவர்களுடைய  பலவீனத்திற்க்குத் தகுந்தாற்ப் போல் பயமுறுத்தி அவகளுக்கு உதவி ஏதும் செய்யாமல், ஏதோ ஒருவழியில் அடிமைபடுத்தி நான் அனைவருக்கும் பொதுவாக படைத்த உலகத்தை அந்த உயர்ந்த மக்கள் மட்டும் அனுபவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது? 


என் பிரியமுள்ள மனிதா! இதுநாள் வரை பல மகான்கள், முனிகள், அறிஞர்கள், அறிவில் சிறந்த சான்றோர்கள் அனைவரும் உனக்கு சொல்ல நினைத்ததை தான் நான் இப்போது சொல்கிறேன். தனிப்பட்ட ஒரு மனிதனின் சுய லாபத்திற்காக எப்படியெல்லாம் உன்னை திசை திருப்பி பணம் பறிக்கிறார்கள். ஜாதகம் என்கிற பெயரில், ஜோதிடம் , எண் ஜோசியம், பெயர் ஜோசியம், வாஸ்து சாஸ்திரம், பரிகாரங்கள் என்று பல வழிகளில் உன்னறிவையும், ஆற்றலையும் அவர்கள் வசம் கொடுத்து உன்னை நீ கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாக மாறிக்கொண்டு இருக்கிறாய். அவர்களுக்கு உன் வாழ்கையை கணிப்பதற்கு அதிசய சக்தி இருந்தால் அவர்களை இப்படி சோதித்த்துப் பார். நீயே ஒரு ரூபாய் நாணயத்தை பத்து முறை சுண்டு. ஒவ்வொரு முறையும் பூ அல்லது தலை என்று அவர்களால் சரியாக சொல்ல முடியுமா? ஆனால் உன்கையில் இருப்பதால் நீ அதைப் பார்த்து  உன்னால் சரியாக சொல்ல முடியும். ஏனென்றால் அதன் விடை உன்னிடத்தில் இருக்கின்றது. இதையே சரியாக சொல்ல முடியாதபோது ஆயிரம் கேள்விகள் கொண்ட உன் வாழ்க்கைக்கு எவ்வாறு அவர்கள் பதிலளிப்பார்கள்? இதை நீ கட்டாயமாக ஆழமாக சிந்திக்க வேண்டும். உன்னுள் இருக்கும் கேள்விகளுக்கு  விடை உன்னுள்ளே இருக்கின்றது. அது தான் இந்த உள் மனிதன். 


மதிப்பு மிக்கமனிதா! உயர்மட்டத்தில் இருப்பவர்கள் விழாக்கள் நடத்தும் போது அதன் பலன் முழுவதும் அடித் தட்டு மக்களுக்கு சேருகிறது. அதாவது மன்னர்கள் , அரசர்கள் காலத்தில் விழாக்கள் அனைத்தும் ஏழைகளின் நன்மைக்காக , அவர்களின் மகிழ்ச்சிக்காக நடந்தது. இன்றோ அது தலைகீழாக நடக்கிறது. தலைவர்களின் நன்மைக்காக, மகிழ்ச்சிக்காக மக்களிடம் பலவகையில் நன்கொடை, வரிகள் என்று மக்களிடத்தில் வசூல் செய்தல்லவா நடத்துகிறார்கள். இதிலிருந்து யாருக்கு யாரிடத்தில் அக்கறை என்று புரிந்ததா! இனி மேலும் நீ ஏமாறுவதை நிறுத்திக் கொள். அதை தெரிந்துகொள். விழித்துக்கொள். உனக்காக நீ தான் பாடுபட வேண்டும். நானும் நீயும் கை கோர்த்து நன்மை தரும் செயல்களை செய்ய ஆரம்பிப்போம். எனக்கும் உனக்கும் உள்ள இந்த உறவு இரத்த உறவாக இருப்பதால் அதை எனது ஜீவ (இரத்த) ஓட்டத்தின் மூலம் உனக்கு உணர்த்துகிறேன். உனது ஆன்ம ஓட்டம் ஓயும்வரை தொடரும்.


சிறந்த மனிதா! இப்போது இந்த மனிதனின் உணர்வுகளை ஒரு சிறிய செய்முறை உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். உன் கண்களை மூடிக்கொள். எல்லாம் இருட்டாக இருப்பதை உணர்கின்றாயா! இப்போது உன்கையை கண்களை மூடிக்கொண்ட வாறு மேலே தூக்கு. கை மேலே செல்வதை பார்க்கவில்லை. ஆனால் மேலே உயர்ந்திருக்கிறது. ஆனால் அதை உன்னால் உணர முடிகின்றதல்லவா! அதேபோல் ஒரு காலை தூக்கிக் கொள். அதுவும் உணர முடிகின்றதல்லவா! இப்போது கண்களை திறந்துபார். என்ன காண்கிறாய். கைகள் உயர்ந்து இருப்பதையும், கால் தூக்கிக்கொண்டு இருப்பதையும் பார்க்கமுடிகின்றதா! இன்னும் சில நிமிடத்திற்கு கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தால் எனது ஆனம் ஓட்டத்தை நன்றாக உணரமுடியும். உன் கண்களை திறந்து கொண்டால் வெளியில் நடக்கும் செயலை பார்க்க முடியும். அதேபோல் நீ கண்களை மூடிக்கொண்டு இருந்தால் உன் உணர்வுமூலம் உனக்குள் இருக்கும் இந்த உள் மனிதனின் உணர்வும் ஆற்றலும் உனக்கும் எனக்குமுள்ள பந்தம் தெளிவாக புலப்படும்.


பிரிய மனிதா! ஒவ்வொரு செயலும் எனது  ஜீவ ஓட்டத்தின் வல்லமையால் நடைபெறுகின்றது. அந்த வல்லமை நல்லவழியில் பயன்படும்போது ஆன்ம சக்தி பலமடங்கு பலம் பெறுகின்றது. அதனால் உனது குறிக்கோளும் எளிதாக நிறைவேறும். உன்னைப்போல் பல நல்லவர்களைக்கொண்டு பல நல்ல செயல்கள் செய்யும்போது இந்த உலகம் தானாகவே நல்லவர்கள் வாழும் உலகமாகவே மாறிவிடும்.


பண்புள்ள மனிதா! இப்போது முதல் இனிவரும் காலத்தில் இந்த உலகம் உன்னைப் போல் சத்தியத்தை விரும்பும், தர்மவழியில் , நல்ல எண்ணங்கள் மற்றும் செயல்களைச் செய்யும் கைகளில் ஒப்படைக்கப் படும். அதற்கு எப்போதும் தயாராக இரு. அதற்கான சமிஞ்ஞை இப்போது கிடைத்திருக்கின்றது.

நன்மைக்காக வாழ்!

நல்லவர்களுக்காக வாழ்!


அனைவரின் நன்மைக்காக வாழ்!

மகிழ்ச்சி கொடுப்பதற்கு வாழ்!


நம் பந்த பிணைப்பிற்க்காக வாழ்!  

            

உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

No comments:

Post a Comment