Pages

Saturday 2 February 2013

KNOW YOUR GOOD CHARACTERS LEADS TO SUCCESS - உனக்கு வெற்றி தரும் குணங்கள் - PUTHU KAVITHAI - MADURAI GANGADHARAN

           உனக்கு வெற்றி தரும் குணங்கள் -
KNOW YOUR GOOD CHARACTERS LEADS TO SUCCESS
                                    
                              PUTHU KAVITHAI
                            மதுரை கங்காதரன் 

 

இயற்கையில் இருக்கு ஆயிரம் விந்தை 
அது மனித வாழ்கையின் தந்தை.

கற்றுத் தரும் பாடமோ கோடி 
வருகின்ற அனுபவமோ கோடி கோடி 

இயற்கை மரம் விலங்குகளுக்கு ஓர் அற்புத குணம் 
வெற்றி மனிதனுக்கு வேண்டும் அந்த குணங்கள்  

உயர பறக்கும் கழுகின் கூர்மையான பார்வை 
வாழ்கையில் உயர துடிக்கும் உனக்கு வேண்டும்.

  

நன்றியுள்ள நாயின் குணம் 
உனக்கு உதவியவர்களுக்கு சொல்ல உதவும்.

காட்டில் உள்ள சிங்கத்தின் வீரம் 
உனக்கு தலைமை பண்பை வளர்க்க தேவைப்படும்.

சிறுத்தையின் நான்கு கால் பாய்ச்சல்  
உன் வேலையின் வேகத்தை கூட்டச் சொல்கிறது.

நரியின் தந்திரமான குணம் 
உனக்கு பகைவர்களிடமிருந்து காக்க உதவுகிறது.

 

தேனியின் ஓயாத உழைப்பு 
உன்னையும் வாழ்கையில் உழைக்கச் சொல்கிறது.

எறும்பின் சேமிப்பும் சுறுசுறுப்பான குணம் 
உனது வாழ்கையில் கடைபிடிக்க வேண்டுமென்கிறது.

கொக்கின் காத்திருப்பு குணம் 
உனக்கு பொறுமையை கற்றுத் தருகிறது.

யானையின் கம்பீரமான வலிமை குணம் 
உனக்கு மனஉறுதி வேண்டுமென்பதை உணர்த்துகிறது.

பசு கன்றுக்கு காட்டும் அன்பு 
உனது வாழ்விலும் வேண்டுமென்பதை சொல்கிறது.

 

ஜோடி புறாவின் இணை பிரியாத குணம் 
உன் மண வாழ்வில் பிரியாத குண வேண்டுமென்கிறது.

கவரிமானின் கெளரவம் காக்கும் குணம் 
உனது வாழ்வும் கௌரவமாக இருக்க உணர்த்துகிறது.

அன்னத்தின் பிரித்தெடுக்கும் குணம்  
உன் வாழ்வில் நல்லது தீயது அறிந்து செய்க என்கிறது.

காக்கையின் கரைந்துண்ணும் குணம் 
உனது வாழ்வில் ஒற்றுமையை கடைபிடிக்கச் சொல்கிறது.  

பூனையின் சப்தமில்லாத நடை 

உனக்கு அமைதியைக் கற்றுத் தருகிறது.

கங்காருவின் தாய்மை குணம் 
உனது வாழ்விலும் இருக்க வேண்டுமென்கிறது.


சூரியனின் பிரகாசம் தரும் குணம் 
உனது வாழ்வும் மங்காத ஒளி வேண்டுமென்கிறது.

சந்திரனின் குளுமையான ஒளி 
உனது இதயத்திற்கு வேண்டுமென்கிறது.

கனிகளைக் கொடுக்கும் மரங்கள் 
உனக்கு தன்னலம் கருதா தியாகத்தை உணர்த்துகிறது.

மழையைத் தரும் மேகங்கள் 
உனக்கு வள்ளல் தன்மையை கற்றுத் தருகிறது.

  

இத்தனை நல்ல குணங்களை மாற வேண்டிய நீ 
அத்தனை குணங்களில் நடிக்க கற்றுக்கொண்டாயே.

நடிப்பவர்கள் என்னமோ நன்றாய் வாழுகின்றார்கள் 
நல்ல குணங்களை உடையவர்கள் வாடுகிறார்கள்.

நடிப்பதை எப்போது நிறுத்தப்போகிறாய்?
நல்ல குணங்களை எப்போது பெறப்போகிறாய்.?

நல்ல குணம் நடிப்புக்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறதே 
உண்மையில் நீ கடைபிடித்தால் வெற்றி பல பெறுவாய் 

நல்ல குணமாக நாம் மாற்றிக்கொள்வோம் 
வாழ்கையில் வெற்றிகளை பல குவிப்போம்.

  


                                                 நன்றி 


                                   

                                            வணக்கம்.

  



1 comment:

  1. Very excellent points to prove man should learn from animals. It remembers a song man is half animal. Revolution theory says man is from animal probably chimpanzi a kind of monkey and lion. Therefore naturally man possess more animal instincts and character. Only the six sense differs him.

    ReplyDelete