Pages

Saturday, 7 July 2012

2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும் அனுபவ வாழ்கை பொன் வரிகள்



   அனுபவ   வாழ்கைப்  பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்




2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும் 





பலர் கூடியிருக்கும்  'தன்னம்பிக்கை பயிற்சி' வகுப்பில் புதிதாக ஒரு 2000 ரூபாய் நோட்டு ஒன்றை காட்டி 'இந்த நோட்டு எவ்வளவு பேருக்கு பிடிக்கும்' என்று கேட்டேன். கிட்டத்தட்ட அனைவரும் கையைத் தூக்கினர். அதே நோட்டை கசக்கி பல  மடிப்புகளோடு காட்டினேன். மீண்டும் அனைவரும் 'பிடிக்கும்' என்று கையைத் தூக்கினர். பிறகு அதே நோட்டை கீழே போட்டு மிதித்து அழுக்கோடு  காட்டினேன்.  மீண்டும் அனைவரும் 'பிடிக்கும்' என்று கையைத் தூக்கினர்.  

'நோட்டு கசக்கப்பட்டு பழசு ஆகிவிட்டதே , ஏன் பிடிக்கின்றது ' என்று கேட்டேன்.

'ஐயா , நோட்டை கசக்கினாலும் , அடித்தாலும் , மிதித்தாலும், அழுக்கானாலும் அதோட மதிப்பு குறையாது , அது கிழிந்தால் மட்டுமே அதன் மதிப்பு இழக்கும்'  என்றார் .  


'சரியாகச் சொன்னீ ர்கள்' என்றேன் 

அதுபோல 

தன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, அவமானம்,தோல்வி (அதாவது கசக்குதல், மிதித்தல்) வந்தாலும் தன்னிடம் தன்னம்பிக்கை , உழைப்பு, அறிவு, துணிவு, முயற்சி (அதாவது மனது கிழியும் வரை) இருக்கும் வரை தன்னை யாராலும் மதிப்பிழக்கச் செய்ய முடியாது.  

***************************************



இன்னும் வரும் 
    

ANUPAVA VALKAI PON VARIGAL - MADURAI GANGADHARAN

இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 



இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

6 comments:

  1. Boosts a positive energy into mind effortlessly. Sincere thanks

    ReplyDelete
  2. அன்பு கங்காதரன்
    இதில் கிடைக்கும் பொருள் சரியானதே. ஆனால் இந்தப் பொருளை விளக்க உபயோகப்படுத்தப்பட்ட சாதனம்???

    இப்படித்தான் ஒரு பெரிய ஜவுளி சாம்ராஜ்யத்தின் வேலையாட்களுக்கு பயிற்சி நடத்தும்போதுஇதே மாதிரி நான் 500 ரூபாய் தாளை உபயோகப்படுத்தினேன்.
    கைத்தட்டல் பலமாகவே கிடைத்தது.

    ஆனால், அவர்கள் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவிலை. மன்னிப்புத்தான் கேட்கமுடிநதது.

    "நம் நாட்டுத் தந்தையின் உருவப்படம் போட்டிருப்பதே அவருக்கு மதிப்பு கொடுக்கத்தான்; அந்த நோட்டுத்தாளை கசக்கும்போது, காலில் போட்டு மிதிக்கும்போது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை இவ்வளவுதானா? அவர் உருவப்படம் இல்லாத ஒரு தாளை தேர்ந்ததெடுக்கக்கூடாதா?" என்று அவர்கள் கேட்டபோது கூனிக்குறுகிப்போனேன்.

    என்னை "வளர்த்த" அவர்களுக்கு நன்றி.
    Prof Punch

    ReplyDelete
  3. என்னுடைய 29, May, 2013 தேதியிட்ட கருத்துக்குப் உங்கள் பதில் கிடையாதா?
    Prof Punch
    Director: talent consultancy
    kamalapunch@gmail.com

    ReplyDelete
  4. "பணமும் மனமும்" -ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்:-ஆலோசகர் மதுரை திரு.கங்காதரன்.

    பலர் கூடியிருக்கும் 'தன்னம்பிக்கை பயிற்சி' வகுப்பில் புதிதாக ஒரு 1000 ரூபாய் நோட்டு ஒன்றை காட்டி 'இந்த நோட்டு எவ்வளவு பேருக்கு பிடிக்கும்' என்று கேட்டேன். கிட்டத்தட்ட அனைவரும் கையை தூக்கினர். அதே நோட்டை கசக்கி பல மடிப்புகளோடு காட்டினேன். மீண்டும் அனைவரும் கையை தூக்கினர். பிறகு அதே நோட்டை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, பிறகு அந்தக் குப்பைத்தொட்டியிளிருந்து எடுத்து, முகர்ந்து பார்த்து நாற்றம் வீசுவதோடு அழுக்காகிவிட்டது என்று கூறி அனைவரிடமும் காட்டினேன். அப்போதும் அனைவருக்கும் அந்த நோட்டு பிடிக்கும் என்று, மீண்டும் அனைவரும் கையை தூக்கினர்.

    'நோட்டு கசக்கப் பட்டு, குப்பையின் நாற்றம் வீசும் நிலையில் அழுக்ககிவிட்டதே, இந்த நிலையிலும் உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது ' என்று கேட்டேன்.

    'ஐயா , நோட்டை கசக்கினாலும் , அழுக்கானாலும், குப்பைத்தொட்டியில் விழுந்தாலும் அதோட மதிப்பு குறையாது , அது கிழிந்தால் மட்டுமே அதன் மதிப்பு இழக்கும்' என்றார் .

    'சரியாகச் சொன்ணீ ர்கள்' என்றேன், அதுபோல
    தன் திறமையின் மதிப்பை (1000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, அவமானம்,தோல்வி (அதாவது கசக்குதல், மதியாமல் தூக்கி எறிதல் போன்ற நிலை) வந்தாலும் தன்னிடம் தன்னம்பிக்கை , உழைப்பு, அறிவு, துணிவு, முயற்சி இருக்கும் வரை (அதாவது மனது (கிழியாமல்) உடைந்து போகாமல் இருக்கும் வரை) தன்னை யாராலும் மதிப்பிழக்கச் செய்ய முடியாது. .....இது ஆலோசகர் மதுரை திரு.கங்காதரன் அவர்களின் அனுபவ வாழ்கை பொன் வரிகள்.

    ReplyDelete