Pages

Tuesday, 29 January 2013

SEE YOUR OPPORTUNITY IS VERY NEAR - உங்கள் பக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்

உங்கள் பக்கத்திலே அருமையான 
வாய்ப்பு இருப்பதை பாரீர் - 


SEE YOUR OPPORTUNITY IS VERY NEAR 


              
அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

                                

எரியக்கூடிய ஒரு மெழுவர்த்தி தானாகவே எரிந்துவிடாது. அது எரிவதற்கு வாய்ப்புகளைத் தேடுகின்றது. அதோ அதற்கு வாய்ப்பு தீக்குச்சியின் சுடர் வடிவத்தில் வருகின்றது. மேலும் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் உதவிகொண்டு தொடர்ந்து எரிகின்றது. அதுபோல 

                      

உலகில் பலர் எப்பொழுதும் வாய்ப்புகளைத் தேடும் வண்ணம் இருக்கின்றனர். சிலர் தேடிப்போன வாய்ப்புகள் கிடைக்காதபோது கிடைக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுகின்றனர். அதிலும் சில காலங்களே அவர்களால் தாக்கு பிடிக்க முடிகின்றது. அப்புறம் என்ன பழைய குருடி ! கதவை திறடி ! என்ற கதை தான். என்ன தான் விஷயங்கள் ஆயிரம் இருந்தாலும், அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருந்தாலும், சலிக்காத உழைப்பு இருந்தாலும், விடாத முயற்சிகள் அடங்கிய மெழுகுவர்த்தி நன்றாக எரிகின்ற போதும்  அவர்கள் எதிர்கொள்ளும் தோல்விகள், விமர்சனங்கள், தடைகள், கஷ்டங்கள், பிரச்சனைகள் போன்றவைகள் ஒரு கண்ணாடி ஜாடியாக அதன்மேல் கவிழும் போது தொடர்ந்து அந்த மெழுவர்த்தி எரிவது அணைந்து விடுகின்றது! 

          

அதற்கு காரணம் என்ன? மெழுவர்த்தி எரிவதற்கு பிராணவாயு என்கிற ஆக்ஸிஜன் தேவை. ஆனால் கண்ணாடி ஜாடிக்குள் குறைந்த அளவே ஆக்ஸிஜன் இருப்பதால் அது சீக்கிரமே அணைந்துவிடுகின்றது. உண்மையில் எரிவதர்க்கான ஆக்ஸிஜன் அந்த ஜாடி அளவே தான் உள்ளதா?  

                  

இதோ அணைந்த மெழுகுவர்த்தி கண்ணாடியை விட்டு வெளியில் வரும்போது தான் அது உணர்கிறது. உலகம் சுற்றிலும் ஆக்ஸிஜன் இருக்கிறது என்று. அது நாள் வரை கிணற்றுத் தவளையாய் இருந்ததை நினைத்து வேதனைபடுகிறது. 

 

அதாவது ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை இருவர் வாசிக்கிறார்கள். ஒருவர் தோல்வி அடைகிறார். மற்றொருவர் அதே வாக்கியத்தை தனக்கு சாதகமாக்கி வெற்றி பெறுகிறார். அந்த வாக்கியம் தான் இது.

                           

முதல் வாக்கியத்தின் அர்த்தம் - OPPORTUNITY IS NO WHERE - அதாவது வாய்ப்பு எங்கும் இல்லை என்பது. அதனால் முதலாமவன் தோல்வியைத் தழுவினான்.

            

அதே வாக்கியத்தை இரண்டாமவன் எப்படி வாசிக்கிறான் என்றால் - OPPORTUNITY IS NOW HERE - அதாவது 'W' எழுத்தை சற்று முன்னாலும் 'H' என்ற இடத்தில் பிரிந்ததும் வாசிக்கிறான்- இப்போது இதன் அர்த்தம் முற்றிலும் வெற்றிக்குச் சாதகமாக 'வாய்ப்பு இங்கு இருக்கிறது' என்று மாறிவிடுகின்றது.


வெற்றியாளர்கள் பலர் நேற்று வரை முகவரி இல்லாமல் தான் இருந்தனர். ஆனால் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டு இருப்பதன் ரகசியம் இதோ.. அதாவது மெழுகுவர்த்தியாய் எரிந்துகொண்டிருக்கும் போது அவர்கள் தோல்வி என்கிற கண்ணாடி ஜாடி மூடும் போதெல்லாம் அதை உடைத்தோ அல்லது அந்த ஜாடியைவிட்டு வெளியில் வந்து வேறு ஒரு நல்ல வாய்ப்பை அமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் 'தன்னால் முடியும்' என்கிற உறுதியோடும் 'முயலாமை, இயலாமை' போன்றவற்றை துரத்திவிட்டு கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியோடு தான் வெற்றியை நிலைநாட்டி வருக்கின்றனர்.    


           

வாய்ப்பு இங்கு இல்லை என்று முடங்கி, 
ஒதுங்கி விடாதீர்கள்.
அதோ உலகம் சுற்றிலும் வாய்ப்பு இருக்கின்றது. உங்களைப் போன்றவர்களுக்காக காத்திருக்கின்றது. பிடித்துக் கொள்ளுங்கள். கெட்டியாக.. விடாதீர்கள்!!


நன்றி ! வணக்கம்.

1 comment: