Pages

Thursday 27 September 2012

உள்விதி மனிதன் பாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்- I DON'T WANT GOLD AND OTHER THINGS

உள்விதி மனிதன் 
 சம மனிதக் கொள்கை 


(EQUAL HUMAN POLICY)
பாகம்: 6  எனக்கு பொன், பொருள் வேண்டாம்-
I DON'T  WANT GOLD AND OTHER THINGS  


இனிய மனிதா! உனது உள்விதி மனிதன் பேசுகிறேன். என்னை தங்கத்தால் சிலை செய்கிறாய்! அவ்வளவு பகட்டுக்கு ஆசைப்பட்டவனா நான்? என்னை பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்கிறாய்! புஷ்பம் கொண்டு அர்ச்சனை செய்கிறாய்! அவைகளெல்லாம் என்னை குதுகலப்படுத்தும் என்றா நினைக்கிறாய்? எனக்கு தங்கம், வைரம், வைடூரியம், பணத்தால் கொண்டு காணிக்கையினைச் செலுத்துகிறாய்? அவ்வளவு பேராசை பிடித்தவன் என்று கருதுகிறாயா? இன்னும் மேலாக எனக்கு சில உயிர்களை பலி கொடுக்கிறாய்! நான் ஒரு கொடூரக்காரன் என்றா நினைக்கிறாய்?



தவறான பாதையில் நீ நினைக்கும் காரியங்கள் கை கூட வேண்டுமென்று நினைத்து இவைகளெல்லாம் செய்கிறாயா? அதற்கு நான்  ஒருபோதும் துணை போகமாட்டேன்!  உதவியும் செய்யமாட்டேன். நீ மனமுருகி என்னை தினமும் இடைவிடாது நினைத்தாலே போதுமானது. பிறரிடம் பணம் வாங்கி என்னை எளிதில் சிறப்பு வழியில் பார்க்க அனுமதிக்கிறாய்! அதற்கு நான் சம்மதிப்பேனா? நான் என்ன சித்ரவதைப்  பிரியனா? சந்தனம், ஜவ்வாது போன்ற வாசனைப் பொருட்களை தடவுகிறாயே ! நான் என்ன அலங்காரப் பிரியனா? பலவகை ருசிகொண்ட உணவைப் படைக்கிறாய்! நான் என்ன சாப்பாட்டு ராமனா? என்னை அருகில் பார்ப்பதற்கு ரூபாய் 100 , 1000 வாங்கிக்கொண்டு பக்கத்தில் அமர்ந்து பார்க்க வைக்கிறாய்! அப்போது அவர்கள் பக்கத்தில் நான் இருப்பேன் என்றா நினைக்கிறாய்? இவைகளெல்லாம் சிலர் சுயநலம் கருதி பிறரை கஷ்டப்படுத்தும் செயலேயன்றி என்னை மகிழ்விக்கும் செயலே அல்ல. 



இரக்கமுள்ள மனிதா! அனைவரையும் ஒரே மாதிரியாகத் தான் நான் படைத்திருக்கிறேன் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன்! நான் அனைவரிடத்தில் இருக்கிறேன். நீ எவ்வாறு என்னை அன்புடன், தூய மனதுடன், நன்மை செய்யும் எண்ணமுடன் என்னை மதிக்கின்றயோ அல்லது வணங்குகின்றாயோ அதுவே எனக்கு அதிக அளவில் சந்தோஷம் தரும். என்னை பணத்தால், பொன் பொருளால் ஆட்கொள்ள இயலாது. நல்ல மனத்தால் நல்ல எண்ணங்களால் , பிறர்க்கு நன்மை தரும் செயலால் தான் என்னை ஜெயிக்கமுடியும். 

நான் உன்னிடத்தில் பொன், பொருள் வேண்டும் என்று கேட்டிருக்கின்றேனா? நான் என்ன ஏழையா ? அல்லது இல்லாதவனா? நான் தானே  நீ அனுபவிக்க எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததை மீண்டும் உன்னிடத்தில் அதை எதிர்பார்ப்பேனா? அவைகள் உனக்கு தான் வேண்டும். அவற்றை நான் அடியோடு விரும்பேன். எனக்குத் தேவை ! பிறரை  அன்போடு நடத்தும் செயல் ஒன்றே!



பிரிய மனிதா! இந்த பொன் பொருளில் எனக்கு ஆசை இருந்திருநதால் நீ இறக்கும்போது உன்னுடனே  நீ தேடிய செல்வங்களை அனைத்தும் கொண்டுவரும்படி செய்து அத்தனையும் உன் மூலமே அப்போதே  வாங்கியிருப்பேன். நான் ஏன் அவ்வாறு செய்யவில்லை? நான் படைத்தது அனைத்தும் இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் அனுபவிக்கவேண்டுமென்பதற்காவே தான் நீ இறக்கும்போது அவற்றை விட்டுவிட்டு என்னுடன் நீ மட்டும் வரும்படி செய்துள்ளேன். இப்போது புரிகின்றதா?




பொன், பொருள் கொண்டு என்னை அணுகுவதை விட்டுவிட்டு தூய மனம் கொண்டு அணுகினால் அதுவே போதுமானது.
  
  இன்னும் வரும் ....  புதிய ஆன்மீகத் தொடர் 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை     

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com  

1 comment: