அறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள் -

KNOW YOUR UNKNOWN LIFE LESSONS

புதுக்கவிதை - PUTHU KAVITHAI

வெற்றியின் அளவு குறையாது
நம்பிக்கை இருக்கும் வரை.
காதலின் வேகம் நிற்காது
கல்யாணம் முடியும் வரை.
பக்தியின் ஆர்வம் அலைமோதும்
கடவுள் தரிசனம் கிடைக்கும் வரை.
வியாபாரத்தின் வெற்றி கிடைக்கும்
வாடிக்கையாளர்கள் உள்ள வரை.
ஆசிரியரின் மதிப்பு இருக்கும்
பாடங்கள் சொல்லிக்கொடுக்கும் வரை.
படிப்பில் மேல் கவனம்
மதிப்பெண்கள் எடுக்கும் வரை.
உறவுகளின் மீது பாசம் மலரும்
விரிசல் இல்லாத வரையில்.
நட்பு நீடிப்பின் அளவு தொடரும்
கடனில்லா, ரகசியம் காக்கும் வரை.
நிறுவனத்தின் வெற்றி உறுதி
தொழிலாளர்கள் உழைப்பு காட்டும் வரை.
அரசாங்கத்தின் வெற்றி கிட்டும்
மக்களின் ஆதரவு இருக்கும் வரை.
ஏமாற்றுபவர்களின் காலம் பொற்காலம்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை.
உன்னைச் சுற்றும் நட்புக் கூட்டம்
உன்னிடம் பணம் உள்ள வரை.
பணக்காரர்களின் ஆதிக்கம் பெருகும்
முட்டாள்கள் முதலீடு செய்யும் வரை.
வல்லரசுகளின் வாழ்வு சொர்க்கம்
அடிமை நாடுகளை சுரண்டும் வரை.
விலைவாசியின் ஏற்றம் இருக்கும்
கறுப்புப் பணம் கைப்பற்றும் வரை.
ஏழைகளின் பணக்கார கனவு
தூக்கத்தில் இருக்கும் வரை.
பெற்றோர்களின் தயவு வேண்டும்
பிள்ளைகளை படித்து ஆளாக்கும் வரை.
இன்பத்தின் அளவு கூடும்
அன்பும், பணமும் இருக்கும் வரை.
கூட்டம் உன்னைத் தேடிவரும்
உன்னிடம் புன்னகை இருக்கும் வரை.
துன்பத்தின் அளவு அதிகமாகும்
திருப்தி இல்லாமல் இருக்கும் வரை.
சொர்கத்தின் வாசல் திறந்திருக்கும்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் வரை.

நன்றி

வணக்கம்

KNOW YOUR UNKNOWN LIFE LESSONS
புதுக்கவிதை - PUTHU KAVITHAI
வெற்றியின் அளவு குறையாது
நம்பிக்கை இருக்கும் வரை.
காதலின் வேகம் நிற்காது
கல்யாணம் முடியும் வரை.
பக்தியின் ஆர்வம் அலைமோதும்
கடவுள் தரிசனம் கிடைக்கும் வரை.
வியாபாரத்தின் வெற்றி கிடைக்கும்
வாடிக்கையாளர்கள் உள்ள வரை.
ஆசிரியரின் மதிப்பு இருக்கும்
பாடங்கள் சொல்லிக்கொடுக்கும் வரை.
படிப்பில் மேல் கவனம்
மதிப்பெண்கள் எடுக்கும் வரை.
உறவுகளின் மீது பாசம் மலரும்
விரிசல் இல்லாத வரையில்.
நட்பு நீடிப்பின் அளவு தொடரும்
கடனில்லா, ரகசியம் காக்கும் வரை.
நிறுவனத்தின் வெற்றி உறுதி
தொழிலாளர்கள் உழைப்பு காட்டும் வரை.
அரசாங்கத்தின் வெற்றி கிட்டும்
மக்களின் ஆதரவு இருக்கும் வரை.
ஏமாற்றுபவர்களின் காலம் பொற்காலம்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை.
உன்னைச் சுற்றும் நட்புக் கூட்டம்
உன்னிடம் பணம் உள்ள வரை.
பணக்காரர்களின் ஆதிக்கம் பெருகும்
முட்டாள்கள் முதலீடு செய்யும் வரை.
வல்லரசுகளின் வாழ்வு சொர்க்கம்
அடிமை நாடுகளை சுரண்டும் வரை.
விலைவாசியின் ஏற்றம் இருக்கும்
கறுப்புப் பணம் கைப்பற்றும் வரை.
ஏழைகளின் பணக்கார கனவு
தூக்கத்தில் இருக்கும் வரை.
பெற்றோர்களின் தயவு வேண்டும்
பிள்ளைகளை படித்து ஆளாக்கும் வரை.
இன்பத்தின் அளவு கூடும்
அன்பும், பணமும் இருக்கும் வரை.
கூட்டம் உன்னைத் தேடிவரும்
உன்னிடம் புன்னகை இருக்கும் வரை.
துன்பத்தின் அளவு அதிகமாகும்
திருப்தி இல்லாமல் இருக்கும் வரை.
சொர்கத்தின் வாசல் திறந்திருக்கும்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் வரை.
நன்றி
வணக்கம்
No comments:
Post a Comment