இவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்.....
ஹி.....ஹி .....சிரிப்புக்காக
JOKES : IF THOSE ARE READ A NEWS..
மதுரை கங்காதரன்
நடிகை :
"நடிகையை செய்திய வாசிக்க கூப்பிட்டது தப்பா போச்சு "
"ஏன்? அதுக்கென்ன?"
" 'டப்பிங் 'க்கு ஆள் வேணும்னு அடம்பிடிக்கிறாங்க! "
"? ? ? "
************************************************************************
கல்லூரி மாணவன்:
"செய்திகளை ஏங்க சின்ன பேப்பர்லே எழுதுறீங்க?"
" பிட் பேப்பர்லே எழுதினாத் தான் வாசிக்க வரும்ன்னு காலேஜ் பையன் கண்டிசன் போடுறான்!.."
*************************************************************************
பள்ளி ஆசிரியை :
" ஏன் மேஜை மேலே பிரம்பும் , ஆறு பசங்க இங்கிருக்காங்க?"
"கையிலே ஒரு பிரம்பும் இந்த பசங்க இருந்தாத்தான் செய்திகள் வாசிக்க முடியும்ன்னு சொல்லிட்டார்!"
**************************************************************************
பாடகர் :
" இது 'செய்திகள்' வாசிக்கிற நேரம் தானே. ஏன் 'மெல்லிசை ' நிகழ்ச்சி போல மியூசிக் வாத்தியக்காரங்க இருக்காங்க? "
" மியூசிக் பேக் - கிரவுண்ட் இருந்தாத்தான் அந்த பாடகருக்கு செய்தி வாசிக்க வருமாம்!"
****************************************************************************
டைரக்டர் :
"செய்திகள் வாசிக்கிறதுக்கு முன்னாடி 'சாட் ஒன் டேக் ஒன்' ன்னு சொல்றீங்க? "
"செய்திகள் வாசிக்க வந்தவர் ஒரு டைரக்டர் , அப்படி சொன்னாத் தான் செய்தியை வாசிக்க ஆரம்பிப்பார்! "
****************************************************************************
ரிடையர்டு ஜட்ஜ் :
"இப்போ செய்திகளை வாசிக்க கிடைச்சவர் ஒரு ரிடையர்டு ஜட்ஜ் . அந்த சுத்தியலாலே 'ஆர்டர், ஆர்டர் ன்னு ' மேஜை மேலே ரெண்டு தட்டு தட்டின பிறகு தான் அவர் வாசிக்க ஆரம்பிப்பார்!"
****************************************************************************
நர்ஸ் :
"ஹலோ நர்ஸ் ! நிகழ்ச்சி அடுத்தது தானே ! இப்போதிலிருந்து இங்கே ஊசியும், தெர்மா மீட்டரும் எதுக்கு? "
" ஒண்ணுமில்லே! இன்னைக்கு செய்திய வாசிக்கப் போவது ஒரு நர்ஸ். அவங்களுக்கு இவைங்க இருந்தாத் தான் பயமில்லாம செய்தி வாசிக்க முடியுமாம்! "
****************************************************************************
டாக்டர்:
"நீங்களும் ஆப்ரேசன் செய்யலாம்' நிகழ்ச்சி அடுத்த வாரம் தானே. இப்போதே இந்த ஆப்ரேசன் செட் அப் எதுக்கு?"
" செய்தி வாசிக்க போறவர் ஒரு டாக்டராம். நல்லவேளை நோயாளி வேண்டுன்னு கேட்காம விட்டாரே!?"
****************************************************************************
பஸ் டிரைவர்:
" ஒவ்வொரு செய்தி 'பிரேக் ' கும் ஏங்க விசில் ஊதுறாங்க ? "
"செய்தி வாசிக்கிறவரு ஒரு பஸ் டிரைவராம் . விசில் அடிச்சாத் தான் செய்தி வாசிக்கிறதை நிறுத்துரார் "
****************************************************************************
அரசியல்வாதி :
"இந்த சோடா பாட்டில் , பொன்னாடை எதுக்கு?"
"இது இருந்தாத் தான் செய்திய பேசுவேன்னு ஒத்த கால்லே நிக்கிறார்!"
****************************************************************************
குழந்தை:
"'சேட்டை செய்யும் மழலைகள் சமாளிக்க ' நிகழ்ச்சி இன்னும் முடிவாகள்ளே, இப்போ ஏன் ஐஸ் கிரீமும் ,சாக்லேட்டும் "
"அதுவா! இப்போ செய்தி வாசிக்கப் போறது ஒரு குழந்தையாம். அது அழாமே வாசிக்கிறதுக்கு!"
****************************************************************************
No comments:
Post a Comment