Thursday, 16 August 2012

பாகம் - 2 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று -லாபம் தரும் வழிகள்


லாபம் தரும் வழிகள் 

தொழில் நிர்வாக வழிகாட்டி 
பாகம் - 2 

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.

 சென்ற  பாகம் - 1 ல்  வாடிக்கையாளர்களின் திருப்தியின் முக்கியத்துவம் மற்றும் ஒரு நிறுனத்தின் / தொழிலில் இருக்கும் ஊழியர்கள் எவ்வாறு தரம் மிகுந்த பொருட்களை உற்பத்தி செய்து, தங்களின் நேர்த்தியான சேவைகள் மூலம் எவ்வாறு வாடிக்கையாளர்களை கவர்ந்து வியாபாரத்தை பெருக்குவதற்கு உதவி செய்கிறார்கள் என்பதை பார்த்தோம்.

இனி பாகம் - 2

நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளிகள் விரும்புவது :

                               

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு அந்நிறுவனம் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு, வேலை உத்திரவாதம், நிறுவனம் பற்றிய நம்பிக்கை, சரியானபடி நடத்துதல், அவர்களுக்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகள், உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் 'தொழிலாளிகள்  நிறுவனத்தின் ஒரு அங்கம்' என்பதை எப்பவுமே மனதில் கொண்டு அவர்களின் பிறந்த நாள், மணநாள் மற்றும் அவர்களின் குடும்ப விசேஷங்களில் முடிந்த வரை தவறாது பங்குகொண்டு அவர்களைச் சிறப்பிக்கவேண்டும். இதன் மூலம்   அவர்களின்  நன்மதிப்பை பெறுவதோடு நிறுவனத்தின் முன்னேற்றத்திக்காக எதையும் செய்யும் மனோபாவமும் வளர்க்கப்படுகிறது. அவ்வாறு ஒரு நிறுவனம் நடந்து கொள்ளும்போது உற்பத்தி தானாக உயருவதற்கு வழி பிறப்பதோடு  நிறுனத்தின் வெற்றியும்  உறுதி செய்யப்படுகிறது.

             

இந்த முதலாளி (அதிகாரி) - தொழிலாளி கூட்டு முயற்சியினால்   தொழிலாளிகளும் உற்பத்தியில் கவனம் செலுத்தி தரமிக்க பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து  'நிறுவனத்தில் இலக்கை சாதிக்கவேண்டும்' என்கிற துடிப்பு தானாகவே வரச் செய்துவிடுகிறது. தொழிலாளிகளின் கவனமும் சிதறாமல்,  நிறுவனத்திற்கு விசுவாசமாக இருந்து கொண்டு தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தின் மேல் அதிக கவனமும் அக்கறையும் செலுத்துகின்றனர்.. அதற்காக சில நிறுவனங்களில் வேலைகள்  ஆரம்பிக்கும்போது  தியானம், மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்துவிட்டுத்தான் வேலையில் அமருகிறார்கள். இன்னும் சில நிறுவனங்களில் மெல்லிய வாத்திய இசை ஒலிபரப்புகிறார்கள்.  இதனால் மனமும் எண்ணமும் புத்துணர்ச்சி பெறுவதால் அவர்கள் வீண் கவலை தரும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமலும் கவனச்சிதறல்கள் எற்படாமலும் செய்துவிடுகிறது. தொழிலாளிகளும் அவர்கள் இஷ்டப்பட்டு மகிழ்ச்சியுடன் வேலை செய்வதால் தரம் உயருகின்றது. நல்ல தரமான பொருட்கள் கொடுப்பதால் வாடிக்கையாளர்களின் திருப்தி அதிகரிக்கின்றது. கூடவே  வியாபாரமும் தானாக பெருகுகின்றது.

            

              சரியான உதாரணம் சொல்லவேண்டுமென்றால் 


வரப்பு உயர நீர் உயரும் 
நீர் உயர நெல் உயரும் 
நெல் உயர குடி உயரும் 
குடியுயர கோன் உயரும் 
கோன் உயர்ந்தால் நாடுயரும் 
நாடுயர்ந்தால் உலகு உயரும்.


தொழிலாளிகளை நாம் நன்றாக பார்துக்கொண்டோமானால் தானாகவே நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும். அதைவிட்டுவிட்டு தொழிலாளி குறைந்த அளவு ஊதிய உயர்வு கேட்க்கும்போது 'இந்த தொழிலாளிகளுக்கு நான் அடிபணிவதா?' என்று பெரிய கௌரவ பிரச்சனையாக   எடுத்துக்கொண்டு ' இவர்கள் மிக அதிக சம்பளம் மற்றும் வசதிகள்' கேட்கிறார்கள்'   என்று வெளியே அனுப்பிவிட்டு புதிய தொழிலாளியை கூடுதல் சம்பளத்தில் அமத்தினால் 'உள்ளதும் போச்சுடா' என்று புலம்ப வேண்டியது தான்.

நிறுவனத்தின் முதலாளிகள் மற்றும்
 பெரிய அதிகாரிகளின் நிலை :

கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தின் முதலாளி பெரும்பாலும் நல்ல சிந்தனையுடனே இருக்கிறார்கள். தங்களது தொழிலாளிகளை நல்லமுறையில் வைத்துக்கொண்டு வியாபாரத்தை பெருக்க வேண்டுமென்று ஆசைபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கீழ் செயல்படும் அதிகாரிகளின் எண்ணப்போக்கு சற்று பின்தங்கியே இருக்கின்றது எனலாம். புதிய எண்ணங்களை புகுத்த விருப்பப்படாமல் அரைத்த மாவையே அரைப்பதுதான் சிறந்த வழி மற்றும் வேலைக்கு பாதுகாப்பானது ' என்று நினைக்கிறார்கள். அதாவது புதிய' முயற்சி செய்து தோல்வியடைந்துவிட்டால் தங்களது பெயர் கெட்டுவிடும் ' என்கிற எண்ணமே மேலோங்கி இருக்கின்றது. 

அதேபோல் நிறுவனத்தின் இலட்சியம், கொள்கையை கடைநிலை ஊழியர்கள் வரை தெரிவிக்காமல் தங்களிஷ்டப்படி சில மேலதிகாரிகள் நடந்து நடந்து கொள்கின்றனர். தன்னை மீறி யாரும் முன்னேறக் கூடாது அல்லது மேலே போகக்கூடாது என்றும், தன்னை எதிர்த்துப் பேசக்கூடாது என்றும் ஒரு சர்வதிகாரி போல் நடந்துகொள்கின்றனர். அதையெல்லாம் அறிந்து- ஆராய்வதற்கு நேரமில்லாத முதலாளிகள்/அதிகாரிகள்  தனக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளின் பேச்சை பெரும்பாலும் நம்பி அதற்குத் தகுந்தாற்ப் போல் செயல்படுகின்றனர். 

இன்னும் சில நிறுவனங்களில் மேலதிகாரிகள் பெரும்பாலும் வயது முதிர்ந்தவராக இருப்பதாலும், சுயநலத்தோடு செயல்படுததாலும், இன்றைய நடைமுறைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளாத குணமுள்ளவர்களாகவும், புதிய கருத்திற்கு இடமளிக்காததாலும், தொழிலாளிகளை பலவகைகளில் ஊக்குவித்து அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவரும் பயிற்சிகளை கொடுக்கதவர்களாகவும் இருக்கின்றனர். வெகு சிலர் மேற்கூறியதை நன்றாக யோசித்து இன்னும் சிறப்பாக செயல்படுத்தி நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் புதிய பெரிய சாதனைகளுடன் அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள்  நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் பாலமாக இருந்துகொண்டு பல வெற்றிகளை நிறுவனத்திற்கு பெற்று தருகிறார்கள். அந்த மாதிரியான நிறுவனம் ஐ.எஸ்.ஒ 9001:2008 சர்வதேச  தர நிர்ணய அமைப்பு கொடுக்கும் சான்று பெற்று இருந்தால் உலகளவில் இன்னும் மிகச்சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றது.

இன்றைய மாறிவரும் சூழ்நிலைகள் :

                             

இன்றைய காலகட்டத்தில் ஒருவனின் சூழ்நிலை, வசதிகள், அத்தியாவசிய தேவைகள், நாகரீக தேவைகள், பகட்டுத்தேவைகள் நொடிப்பொழுதில் மாறிவருகின்றன. நேற்று வரை கேட்பாரற்று கட்டாந்தரையாய் இருந்த நிலம், சில மாத இடைவெளியில் அழகிய பிளாட்டாக மாற்றப்பட்டு , அபார்ட்மென்ட்களை  கட்டி போக்குவரத்து நெரிசல் இடமாக மாறிவருகின்றது. புதிய இடம், புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை. இப்படித்தான் இன்றைய அவசர வளர்ச்சியும், கோலமுமாகும். இத்தனை மாறுதலுக்கும் ஈடுகொடுத்து தங்களை மாற்றிக்கொண்டால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் . மாறுவதற்குத் தயாராக இருக்கும் மனிதர்களால் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்வில் வெற்றிகாணுகிறார்கள். சாதனையும் சரித்திரமும் படைக்கிறார்கள்.  

  

உதாரணமாக இன்று வரை முகவரி தெரியாத ஒரு மூலையில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனால் ஊர், பேர், மொழி தெரியாத இடத்திற்கு இதுநாள் வரை நேரில் பார்த்திராத விமானத்தில் பறந்து சென்று வேலை பார்கிறான், தன்னம்பிக்கையோடு புது வாழ்க்கை ஆரம்பித்து நன்றாக மகிழ்ச்சியோடு இருக்கிறான். கிராம மனிதன் கூட வேலைக்காக தயங்காமல் வேறு மாநிலம் / வெளிநாடு சென்று வருகிறான். வெளிநாடு, அவனை நவ நாகரீக மனிதனாக மாற்றி அவனது நடை , உடை மற்றும் பாவனைகள் முற்றிலும் மாற்றிவிடுகின்றது. இந்த வித மாற்றத்திற்கு நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு 'பத்தாம்பசலி'த்தனமாய் 'இருக்கின்ற இடத்தை விட்டு நகலமாட்டேன்' என்று விடாப்பிடியாய் அடம்பிடித்து இருந்தோமானால் வாழ்கைகையில் அவர்களது முன்னேற்றம் என்பது குதிரைக் கொம்பு தான்.

ஒருவன் இப்படிப்பட்ட நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தவறினால் காலமெல்லாம் கஷ்டவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதோடு அவனது நாளைய விடிவு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்? அந்தமாதிரி திடீர் திடீரென்று தொழிலாளிகள் வேறு வேறு வேலைக்கு மாறிவிடுவதால் நிறுவனத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் ஐ.எஸ்.ஒ. 9001:2008 சான்றிதல் பெற்ற நிறுவனத்தில் இத்தகைய பின்னடைவு என்பது பெரும்பாலும் இருப்பதில்லை.

தொழில் நுணுக்கங்கள், வியாபார போட்டிகள்  மற்றும் அது கிடைக்கும் வலைதளங்களும்:

இன்று கம்பியூட்டரை திறந்து 'இன்டர்நெட்' எனப்படும் வலைதளத்தில் நுழைந்தால் சர்வதேச நிகழ்வுகள், முன்னேற்றங்கள், வியாபாரங்கள், அறிவு நுணுக்கங்கள், பொக்கிஷ நூல்கள், உலகளவில் நடைபெறும் மாற்றங்கள், ஏன் வீட்டு விசேஷங்கள் கூட ஆன்-லைன் மூலம் பார்பதற்கான வசதிகள் பெருகிவிட்டன. அதாவது எல்லா விஷயங்களும் நமக்கு எளிதாகவே கிடைக்கின்றது. 

ஏதாவது ஒரு பொருள் புதிதாக வந்து சந்தையில் நன்றாக விற்கப்படுகின்றது என்றால் உடனே அதேபோல் வேறு பெயரில் அதைவிட குறைந்த விலையில் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடுகின்றது. அவற்றை சம்மாளிக்க ஐ.எஸ்.ஒ 9001:2008 தரச் சான்று தேவைப்படுகின்றது.

பெயர் பெற்ற கம்பெனிகளின் சில வேளைகளில் சில தயாரிப்புகளை  தரம் குறைந்து தருவது எதனால்? என்பதை உதாரணங்களோடு பார்ப்போம்.

சமீபத்தில் பெயர்பெற்ற டி.வி. நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த குறிப்பிட்ட மாடல்களின் சில மானிட்டர்கள் வெடித்துச் சிதறியதாக பேப்பரில் செய்தியாக வந்தது.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்  பிரபல மொபைல் கம்பெனி தயாரித்த மொபைல் போன்களில் சில பேட்டரிகள் வெடித்ததாக டி.வி.யில் காட்டினார்கள்.

இந்த வரிசையில் பிரபல கார் கம்பெனி தயாரித்த சில கார்களின் தரம் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இல்லாத காரணத்தினால் அந்த நிறுவனம் அந்த வகை கார்களை திரும்ப பெற்றுக்கொண்டது.

இது எதனாலென்றால் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் சில உதிரி பாகங்களை உலகத்தின் பல பகுதியிலிருந்து குறைத்த விலையில் வாங்குகின்றனர். அவர்கள் அந்த உதிரி பாகங்களை குறித்த காலத்தில் டெலிவரி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. சிலவேளைகளில் அந்த நிறுவனத்திற்கு ஒரு சில துறையில் ஏதோ சில காரணங்களினால் தாமதங்கள் ஏற்பட்டு விடுகின்றது. அந்த தாமதத்தை ஈடு கொடுப்பதற்கு உற்பத்தி மற்றும் ஆய்வு துறையை வேகப்படுத்துகின்றனர். அப்போது அவசரம் காரணமாக தரத்தினை வேகமாக பார்த்துவிட்டு விற்பனைக்கு அனுப்பிவிடுகின்றனர். அதுவே தரம் குறைந்த பொருட்களை உற்பத்திக்கு வித்திட்டு  வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கிவிடுகின்றது. அதனால் சில நஷ்டங்கள் நிறுவனத்திக்கு ஏற்படுகின்றது. அதை கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மற்றும் ஆய்வு துறையை இயந்திரமயம் மற்றும் கணினி மயமாக்கி தரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.     

இந்த மாதியான பிரச்சனைகளை ஐ.எஸ்.ஒ 9001:2008 தரச் சான்று பெற்ற நிறுவனங்கள் மிக எளிதாக சமாளிக்கின்றது.    

யார் ஒருவர் தரம் குறைந்த உற்பத்திக்குத் துணை போகாமல் இருக்கின்றனரோ , யார் ஒருவர் ஐ.எஸ்.ஒ 9001:2008ன் தர நிர்ணயத்தைப் பின்பற்றி பொருட்களை தயாரிக்கின்றனரோ அவர்கள் கட்டாயம் வாடிகையாளைகளை திருப்திபடுத்தி தங்களுடைய வியாபாரத்தில் முன்னேற்றம் காணுவார்கள்.

ஐ.எஸ்.ஒ பின்பற்றுவது என்பது
 ஒரு பழக்கம் தான்.

                                  

உதாரணமாக பழக்கமில்லாமல் , சரியான விழிப்புணர்வு இல்லாமல் நாம்  இருகண்களை மூடிக்கொண்டு வேகமாக நடந்தால் நாம் தட்டு தடுமாறி கீழே விழுந்துவிடுவோம். சிலவேளைகளில் காயங்கள் கூட ஏற்பட்டுவிடும். தலையை சுற்றி சாப்பாடு சாப்பிடமுடியுமா? இடது கைகளால் வேகமாக எழுத முடியுமா?

இந்த குறைகளை தீர்ப்பதர்க்காகவே ஐ.எஸ்.ஒ என்கிற சர்வதேச தர நிர்ணய அமைப்பு ஐ.எஸ்.ஒ 9001: 2008 என்கிற குவாலிட்டி மானேஜ்மென்ட் சிஸ்டம் (Quality Management System) என்று உருவாக்கி நம்முடைய கண்களை திறக்கச் செய்து / விழிப்புணர்வு கொடுத்து தடுமாற்றம் இல்லாமல் நடக்கவைக்கின்ற்னர். நேராக சிந்தாமல் சாப்பிட கற்றுகொடுக்கின்றனர். வலதுகையால் வேகமாக எழுத் கற்று கொடுக்கின்றனர். 

இங்கு கண்கள் என்பது குவாலிட்டி பாலிசி (Quality Policy ), குவாலிட்டி மானுவல் (Quality Manual ) , ரிக்கார்டு மற்றும் டாகுமெண்டை (Record & Document ) குறிக்கும். சாப்பிடுதல் என்பது உற்பத்தியை குறிக்கும். வேகமாக எழுதுதல் என்பது தரத்தை குறிக்கும். இதை பழக்கமாக மாற்றிக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும். அப்படி மாறிவிட்டால் அனைவருக்கும் வெற்றி தான்.

ஐ.எஸ்.ஒ 9001:9001 ஐ பின் பற்றுவோம் 

கூட்டு முயற்சியால் நிறுவன தேரை இழுப்போம் 
                     

தரத்தை உயர்த்த பாபடுவோம் 

நிறுவனத்தை முன்னேறச் செய்வோம்.

      
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

No comments:

Post a comment