கவிதைகளின் அருமை தெரியுமா?
               புதுக்கவிதை 
          மதுரை கங்காதரன் 
(A MODERN POEM)
BY MADURAI GANGADHARAN
அழகான கவிதை ஓன்று
முத்தான எழுத்தில் வரைந்தேன்.
அதை
ஒருவனிடத்தில் காட்டினேன்.
'எதோ கிறுக்கல் ' என்றான்.
வேறோருவரிடத்தில் கொடுத்தேன்
அவற்றை படிப்பதற்கு பதிலாக
தொட்டுப் பார்த்தான்.
மென்மையாய் உள்ளது' என்றான்.
மற்றொருவனிடத்தில் தந்தேன்
முகர்த்து பார்த்துவிட்டு
'வாசனையில்லை' என்று விமர்சித்தான்.
பிரிதொருவனிடத்தில் பகிர்ந்தேன்
'சுவையில்லை' என்றான்.
கவிதைக்கு
உயிரில்லாமல் இருக்கலாம்.
அதில் பவனி வரும் வரிகள்
உணர்வுகளை பிரதிபலிக்கும்
கண்ணாடிகளே!
மனிதனின் சரித்திரத்தில்
நீங்காத இடம் பெரும்
உன்னத காவியம்.
கவிதைகள் பல
வீரததை உணர்த்தியிருக்கின்றன
சுதந்திரத்தை கொடுத்திருக்கின்றன
காதல் காவியமாக இருந்திருக்கின்றன
வாழ்க்கைக்கு புத்துயிர் தருகின்றன
காதிற்கு இன்ப தேனாய் பாய்கின்றன
கவிதைகளை கடக்காதவனின் வாழ்க்கை
கானல் நீராய் இருந்திடுமே!
கவிதைகளை ருசித்தவனின்
வாழ்க்கை முழுவதும்
கனிரசமாய் இனித்திடுமே!
இன்னும் வரும் .... 
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 
மிகநன்று              அல்லது 
நன்று                       அல்லது 
பரவாயில்லை  அல்லது 
இன்னும் தெளிவு தேவை  
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது 
 
No comments:
Post a Comment