உள்விதி மனிதன்
சம மனிதக் கொள்கை
பாகம் : 11 நல்லது எது? தீயது எது?
எப்படித் தெரிந்து கொள்வது?
எப்படித் தெரிந்து கொள்வது?
HOW DO YOU KNOW GOOD AND BAD THINGS?
அன்பு மனிதா! நான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். இந்த உலகில் உனக்கு நல்லது எது? தீயது எது? என்பது தெரியாமலோ அல்லது புரியாமலோ அல்லது அறியாமலோ இருக்கும்! அதாவது பிறர்க்கு மனதளவிலோ அல்லது உடலளவிலோ தீங்கு தரும் எந்த ஒரு செயலும் செய்யத்தகாத செயலே! ஒருவேளை நீ தீய செயலைச் செய்வதற்கு முற்பட்டால் அதன் பலன் உனக்கோ அல்லது உன்னைச் சேர்ந்தவர்களுக்கோ உனக்கேத் தெரியாமல் நீ நினைத்துக் கூட பார்க்காத சமயத்தில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்குபோது கெடுதலாக முடிவடையும். உன் தவறுக்குத் தக்கவாறு உனக்கோ அல்லது உன்னைச் சேர்ந்த அனைவர்களுக்கோ உடனேயோ அல்லது சற்று காலம் தாழ்த்தியோ தக்க தண்டனை கிடைக்கும். ஆகையால் அத்தகைய செயலைச் செய்ய ஒருபோதும் நினைக்காதே!
அதேபோல் மற்றவர்களுக்கு நன்மை தரும் செயலை அதாவது மகிழ்ச்சியும், சந்தோஷமும் தரக்கூடிய எந்த செயலும் செய்யக்கூடியவையே. அந்தச் செயலை செய்வதற்கு நான் எப்போதும் துணையாய் இருப்பேன். அதன் மூலம் நான் பெருமையையை புகழை செல்வத்தை மகிழ்ச்சியை உனக்குத் தேடித்தருவேன்.
இனிய மனிதா! இதை கூறும்போது உன்னிடத்தில் புன்சிரிப்பு, ஞான சிரிப்பு உதிர்வது எனக்குத் தெரிகின்றது. ஏனென்றால் இந்த உலகில் எத்தனையோ பேர் பெரிய பெரிய தவறுகள் செய்தும் எந்த ஒரு தண்டனையை அனுபவிக்காமல் இருக்கின்றனரே? அல்லது அதிலிருந்து தப்பித்து நிம்மதியாக வாழ்கின்றனரே என்ற கேள்வி கேட்பது எனக்குத் தெரிகின்றது. ஆனால் அவர்கள் தினமும் வினாடிக்கு வினாடி கஷ்டப்படுவது உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மரியாதையுள்ள மனிதா! தவறு செய்கின்றவர்களின் துயரம் இந்த மனிதக் கண்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தீய செயலை செய்த மனிதனுக்குள் இருக்கும் உள்விதி மனிதன் உள்ள எனது ஆன்ம ஓட்டம், ஜீவ ஓட்டம், இரத்த ஓட்டம் மூலம் தக்க சமயத்தில் வெளிக்காட்டும்படி செய்து விடுவேன். அதாவது அவர்களுக்குப் பூலோக அவஸ்தைகளை பலவற்றைக் கொடுத்து அவர்கள் திருந்தும் வரை பலவிதமான தொந்தரவை பலரூபத்தில் கொடுத்துக்கொண்டு பல இம்சைகளுக்கு ஆளாக்கி விடுவேன். அதில் ஏதேனும் பாக்கியோ அல்லது கடனோ வைத்திருந்தால் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு கொடுத்து அந்த கடன் தீரும் வரை என்னுடைய தண்டனை தொடரும். ஆகவே தவறு செய்யுமுன் அந்த தவறு உன்னையும், உன்னைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்கிற எண்ணம் இருக்காட்டும். இதை அவ்வப்போது உனக்கு எச்சரித்துக் கொண்டு இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!
இரக்கமுள்ள மனிதா! தீயவை செய்யும் மனிதனை திருத்துவதற்கு பலவழிகளில் உள்விதி மனிதனாகிய நான் முயற்சி செய்துவருகிறேன். உடனே அவனுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பது எனது மனம் ஒப்பவில்லை. இருந்தாலும் அவனால் உனக்கு எந்த ஒரு தீயதும் உனக்கு வராமல் காப்பது எனது முழுமுதற்கடமை.
மேன்மையான மனிதா! நான் அதாவது இந்த உள்விதி மனிதன் இருக்கின்றேனா? இல்லையா? என்பது பற்றி உனக்கு பலவிதமான சந்தேகங்கள் வரும். ஏனென்றால் என்னைக் காட்டுவதாக சொல்லி, எனது அறிய செயலை உனக்கு அருளுவதாகச் சொல்லி பலர் பலவழிகளில் பணம் வாங்கிக் கொண்டு அருமையான நேர்மையான மனிதர்களை ஏமாற்றுவதோடு நிற்காமல் அவர்களைக் குறுக்குவழியில் பல தவறுகளை செய்யும்படி தூண்டிவருகிறார்கள். அவர்களை உனக்கு அடையாளம் காட்டி உன்மூலம் அவர்களைத் திருத்துவதற்கு பல முயற்சிகளை செய்து வருகிறேன். அதில் ஓரளவு வெற்றி பெற்றும் வருகிறேன். கூடிய விரைவில் முழு வெற்றி அடைவேன். அப்போது உனக்கு மகிழ்ச்சி தானே?
இனிமையான மனிதா! உன் ஒவ்வொரு செயலையும் நான் உன்னிப்புடன் கவனித்து வருகிறேன். அப்படியிருக்கும் போது என்னை பணத்தால், செல்வத்தால் காண்பதற்கு முயற்சி செய்தால் அது வீண் தான். அப்படி காட்டுகிறேன் என்பவன் உண்மையானவன் அல்ல. அவனை நம்பி நீ சேர்த்த செல்வத்தை கொடுத்து ஏமாறாதே! ஏற்கனவே நீ பிறக்கும் போது உனக்காக கொடுத்த மகிழ்ச்சியின் பங்கை, உனது முன்னோர்கள் தங்கள் அறியாமையினால் இழந்துவிட்டார்கள். நீயாவது இப்போது விழித்துக்கொள். உனக்குரிய அந்த மகிழ்ச்சி பங்கை வெகுசீக்கிரத்தில் கிடைக்குபடி செய்கிறேன். அதற்கான செயல்கள் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.
பாசமுள்ள மனிதா! எனது ஆற்றல் ஓட்டம், ஜீவ ஓட்டம், விதி ஓட்டம், இரத்த ஓட்டம் உனக்கு இலவசமாகவே கொடுத்திருக்கிறேன். என்னை வெளியில் தேடி உனது ஆற்றல், அறிவை வீணாக்கி விடாதே! எவரிடத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கின்றதோ அதுவே என் ஓட்டம், என் ஆற்றல். அதுவே பலவித சக்திகளாக மாற்றும் வல்லமை கொண்டது. அப்படி சந்தேகம் இருந்தால் உன்போன்ற ஓட்டம் மற்றவர்களிடத்தில் இருக்கின்றதா? என்று சரிபார்த்துக் கொள் அல்லது கேட்டு தெரிந்துகொள். அதுவே அழியா சக்தி. அதுவே உன் ஜீவ சக்தி.
பிரியமுள்ள மனிதா! உனக்குள் இருக்கும் எனது ஓட்டம் சீராக நடைபெற வேண்டுமென்றால் எனக்கு வேண்டியவை நல்ல எண்ணங்கள், நல்ல உணவு, நல்ல செயல்கள். அதுவே எனக்கு போதுமானது. நான் வேண்டும்போதேல்லாம் அவைகளை நீ எனக்குக் கொடுத்துவிட்டால் நான் உனக்கு எப்போதும் மகிழ்ச்சி தருவேன். அது என் கடமை. அப்படி இல்லாவிட்டால் உனக்கு பல கஷ்டங்கள் கொடுக்க நேரிடும் ஜாக்கிரதை!
அன்புமிக்க மனிதா! உன்னை படைக்கும்போதே எனது ஜீவ ஓட்டத்திற்கான அனைத்தையும் படைத்துவிட்டேன். நீ இந்த உலகத்தில் உள்ள பலவற்றை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியை உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனாகிய நான் உன் மூலம் காணவேண்டுமென்கிற ஆசையால் உனக்குள் வந்துள்ளேன். எக்காரணம் கொண்டும் உனது ஏமாற்றும் குணத்தால் அல்லது திமிர்த்தனத்தால் அல்லது வீண் ஜம்பத்தால் இழந்துவிடாதே.
மரியாதை மிக்க மனிதா! நீ தீய செயலில் ஈடுபடும்போதெல்லாம் எனது ஜீவ ஓட்டத்தைப் பலவழிகளில் தடையாக அல்லது அதிவேகமாக ஓடச் செய்து உன் உடலை உண்டு இல்லையாக்கிக் கொண்டிருக்கிறேன். எதனால் என்றால் உனக்காக கொடுத்த குடும்ப கடமைகளை செய்ய மறந்து, என்றோ நீ பிறர்க்குத் தீமைகளைச் செய்ததால் அதன் பலனை நீ இப்போது அனுபவிக்கிறாய். அப்படி அனைத்து தவறுகளையும் உணர்ந்து பாவமன்னிப்பு கேட்க நினைத்தால் இன்று முதல் நான் எந்த ஒரு பாவத்தையும் செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டு எனது ஜீவ ஓட்டத்தில் கலந்து கொள். நான் உன்னையும் , உன்னைச் சேர்ந்தவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வேன் ! இது உறுதி!
அன்பு மனிதா!
தீயதை தவிர்த்திடு!
நல்லதை செய்திடு!
எனது ஜீவ ஓட்டம் உனக்கு மகிழ்ச்சி தரும்!
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Good.
ReplyDelete