உங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்
EASIEST WAY TO COME FIRST IN YOUR LIFE
அனுபவப் பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
நீங்கள் எத்தனயோ மோட்டார் கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தயம், குதிரை பந்தயம் போன்றவரை பார்த்து ரசித்திருப்பீர்கள். அதில் முறையே கார், பைக், குதிரை முதலில் வந்தாலும் முதல் பரிசு கிடைப்பதென்னவோ அதை இயக்குபவருக்குத் தான்.
எல்லோரும் ஒரே மாதிரியான கார், பைக், குதிரை இருந்தாலுல் அதை இயக்குவதில் திறமை, ஆற்றல், அறிவுடன் தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகிறது. அதாவது இந்த பூமியில் பலர் வாழ்கிறார்கள். இருப்பினும் ஒரு சிலர் மட்டும் வாழ்கையில் முன்னேறி சரித்திரம் படைக்கின்றனர். இவர்களுக்கு மட்டும் வெற்றி கிடைப்பது எதனால் சாத்தியமாகிறது?
உதாரணமாக நீங்கள் ஒரு புதிய கார் வைத்திருக்கிறீர்கள். அந்த காரை ஓட்டிக்கொண்டு போகும்போது ஓரிடத்தில் வெவ்வேறுவிதமான நான்கு சாலைகள் பிரிந்து செல்வது தெரிகின்றது. அதாவது ஒன்று 'ரப்பர் சாலை ', இரண்டாவது 'சிமெண்ட் சாலை,' மூன்றாவது 'தார் சாலை ' , நான்காவது 'செம்மண் சாலை' என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் பயணத்திற்கு எந்த சாலை தேர்ந்தெடுப்பீர்கள்?
கிட்டத்தட்ட 95% பேர்கள் 'ரப்பர் சாலையைத்' தான் தேர்ந்தெடுப்பார்கள். என்னென்றால் அதில் பயணம் செய்தால் காற்றில் பறப்பது போல் ஒரு உணர்வு உண்டாகும். மேலும் காருக்கும் அவ்வளவாக பிரச்சனை இருக்காது என்று விளக்கம் கூறுவார்கள்.
ஒரு 3% பேர்கள் சிமெண்ட் சாலை என்று சொல்வார்கள். பிறகு 2% பேர்கள் தார் சாலை என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சதவீததிற்குக் குறைவாக புழுதி பறக்கும் செம்மண் சாலையை தேர்ந்தெடுப்பார்கள். சரி இவர்களில் யார் சொல்வது சரி? நீங்களாய் இருந்தால் எந்த பாதை தேர்ந்தெடுப்பீர்கள்?ஏன் என்று விளக்கம் தர முடியுமா?
இதற்கு நானே விளக்கம் சொல்கிறேன். எல்லோரும் சொல்வது தவறு! அதாவது இதில் நீங்கள் செல்லும் சாலை முக்கியமல்ல. நீங்கள் போய் சேர நினைக்கும் இடம் எந்த சாலை (திசை) யில் இருக்கின்றதோ அந்த சாலையில் பயணம் செய்தால் தான் உங்களது (குறிக்கோள்) இடம் போய்ச் சேரமுடியும். அது செம்மண் சாலையாக இருந்தால் கட்டாயம் அதில் தான் பயணம் செய்யவேண்டும். அதாவது ஒரு குறையும் இல்லாமல் 'ஜம்' மென்று போகும் ரப்பர் சாலையில் பயணம் செய்தால் நீங்கள் நினைக்கும் குறிக்கோளை ஒருபோதும் அடைய இயலாது.
இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் தங்களது குறிக்கோள், கல்வித் தகுதி பற்றி கருத்தில் கொள்ளாமல் சொகுசாக ஏ.சி ரூமில் இருந்துகொண்டு ஒயிட் காலர் வேலையைத் தான் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் படித்ததோ கட்டிடத் துறை, விவசாயத் துறை, பராமரிப்புத் துறையாக இருக்கும்.
ஆக நீங்கள் உங்கள் வாழ்கையின் கார் முதலில் வரவேண்டுமென்றால் கஷ்டமான , கரடுமுரடான பாதையாக இருந்தாலும் உங்கள் பயணக்குறிக்கோள் அதில் சென்றால் கட்டாயம் உங்கள் கார் தான் முதலில் வரும்.
அதற்கு உங்களுக்குத் தேவையானவைகள்:
1. காலத்திற்குத் தகுந்தாற்போல் தங்களை தகுதியை மேம்படுத்திக் கொள்ளும் திறம்.
2. 'என்னால் முடியும் ' என்கிற தன்னம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும்.
3. யாதொரு இடர் வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை வளர்த்துக்கொள்ள வேண்டும். விடாமுயற்சி அவசியம் தேவை.
4. அனைவர்களிடத்தில் சுமூகமான நல்லுறவு வைத்துக்கொள்ள வேண்டும். 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
5. திறமை உள்ளவர்களுக்கு எப்போதும் மதிப்பு கொடுத்து அவர்களின் ஆலோசனைகளை தவறாமல் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.
இன்றிலிருந்து உங்கள் 'வாழ்க்கை கார் '
உங்களின் குறிக்கோள் பாதையில்
வலம் வரட்டும்.
வெற்றி உங்களுடையதே!
Very good..
ReplyDelete