Pages

Tuesday, 9 October 2012

உள்விதி மனிதன் பாகம்: 13 உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் கொள் - FILL UP YOUR HEART WITH HAPPY

உள்விதி மனிதன்  
சம மனிதக் கொள்கை 

பாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , 
உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள் -
FILL UP YOUR HEART WITH HAPPY AND GOOD FOOD


இனிமையான மனிதா! உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். இந்த உலகில் பஞ்சபூதங்கள் எவை? என்று கேட்டால்  உடனே நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று கூறுவாய். ஏன்? இவைகளை பூதங்கள் வரிசையில் இருக்கின்றது என்று கேட்டால் அவைகள் உருவத்தில் பெரிதானால் அனைத்தையும் பாரபட்சமின்றி அழிக்கும் தன்மை கொண்டது என்று பதில் சொல்வாய்! இவைகள் மட்டும் தான் தீங்கு செய்கின்றது என்று இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருக்கின்றாய் என்பதை நான் அறிவேன். இவைகளெல்லாம் உனக்கு நித்தமும் தொந்தரவு செய்வது கிடையாது. ஏன் ? சில இடங்களில் இவைகள் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருக்கின்றது. உனது வாழ்நாளில் இவைகளில் ஏதாவது ஒன்றாவது உனக்குக் கெடுதல் செய்திருக்கின்றதா? இல்லை! அப்படித்தானே.மேன்மையான மனிதா! இந்த பூதத்திற்கெல்லாம் தலைவன் யார் என்று தெரியுமா? அதை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டால்  வயது (இளமை & முதுமை), அந்தஸ்து (ஏழை & பணக்காரன், கெளரவம், என்று யாரையும் விட்டுவைக்காமல், உன்னை தூங்கவிடாமல் செய்யும் குணம், எமனைவிட பலசாலி, சர்வாதிகாரி, கொடுமையான செயலைச் செய்யும் துரோகி, உனக்குள் இருந்துகொண்டு உன்னையே நம்பாமல் இருக்கும் நண்பன், அனைத்து அழிவுச் செயலுக்கும் காரண கர்த்தா, ஆயுசுக் கடனை வஞ்சனையில்லாமல் வசூல் செய்யும் ஈட்டிக் காரன், நாளை தருகிறேன் என்று சொன்னாலும் கேட்காத அரக்கன், அவரவரே கடனை அடைக்கச் சொல்லும் இம்சைக்காரன், எனது ஜீவ ஓட்டத்தைக் கூட தடை செய்யும் திறமை கொண்டதுமாகிய உனது வயிறு தான். இதைப் படித்தவுடன் உனக்கு ஆச்சரியமாக இருக்கும். வயிறைப் பற்றி இவ்வளவு கடுமையாக ஏன் விமர்சிக்கிறேன் என்று? இப்போது சொல்கிறேன் கேள். வயிறு தான் இந்த உடலுக்கு வேண்டிய நல்ல ஊட்டச் சத்துக்களை தரம் பிரித்து அந்தந்த பகுதிகளுக்குத் தேவையான சக்திகளை இடைவிடாது கொடுத்து இந்த ஆன்ம ஓட்டத்தை, மன ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக்கொள்கிறது.

பெருமை கொண்ட மனிதா! வயிறை நாம் பொதுவாக அலட்சியமாகத் தான் கருதுகின்றோம். ஏனென்றால் எப்படியாவது அதற்கு தீனி போட்டுவிடுகின்றோம். ஆனால் மற்றவற்றிக்கு வாய்கிழிய பேசுகிறவர்களால் எந்த ஒரு பயில்வானால் ஒருவேளை பட்டினி கிடக்கமுடியுமா? இந்த உலகில் பணமில்லாமல், இடமில்லாமல் கூட இருந்துவிடலாம்! ஏன்? உடுத்துவதற்கு ஒரே உடையுடன் கூட இருந்துவிடலாம்! ஆனால் ஒரு வேளை உணவில்லாமல் அல்லது சாப்பிடமுடியாமல் இருந்தால் எப்படி இருக்குமென்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். அந்த வயிற்றுப் பசியை யார் போக்குகின்றனறோ அவரே உன்னைக் காப்பவர். உன் வாழ்விற்கு மகிழ்ச்சியை அள்ளித் தருபவர். மனிதரில் மாணிக்கம் .. இல்லை இல்லை.. மனிதரில் தெய்வம் என்று வைத்துக்கொள்ளலாம்.  

அருமை மனிதா! உடலை விட உயிர் மேலானது என்கிறார்கள்! உயிர் என்றால் ஜீவ ஓட்டம், இரத்த ஓட்டம், ஆன்ம ஓட்டம் தானே! அது நன்றாக இயங்கவேண்டுமென்றால் இந்த வயிறு கொடுக்கும் உணவல்லவா வேண்டும். ஒருவகையில் என்னைவிட பலசாலியும் கூட. ஆனால் அதில் மிகப் பெரிய சூட்சமமும், ரகசியமும் இருக்கின்றது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் இதை படித்த பிறகாவது நான் சொன்னது நம்புவாயென்று நினைக்கிறேன்.   பாசமுள்ள மனிதா! எப்போதும் ஒன்றை மட்டும் நினைவு கொள். எல்லோருக்கும் பாரபட்சமின்றி வயிறைக் கொடுத்திருக்கிறேன். அது தான் எனது ஜீவ ஓட்டத்திற்கு ஆற்றலைத் தருகின்றது. அதுவும் ஐந்தறிவுக்குள் இருக்கும் ஜீவன்களுக்கு ஒருவர் நீ யோசிப்பதற்க்குண்டான சிந்தனையைத் தருகின்றது. அன்பு மனிதா ! உன்னைப் பொறுத்தமட்டில் உன்னை எப்போதும் ஒருவர் துரத்திக்கொண்டே இருந்தால் தான் நீ உனக்கு வேண்டியதை தேடி ஓடுவாய். இல்லாவிட்டால் இந்த அற்புதப் பிறவியை வீணாக்கி விடுவாய். ஆகவே வயிற்றின் உதவி கொண்டு எனது ஆன்ம ஓட்டத்தின் மூலம் உன்னை துரத்திக்கொண்டு இருக்கிறேன். தினமும் நேரம் தவறாமல் உணவருந்துவதன் ரகசியம், ஒவ்வொரு முறை நீ உணவு உண்ணும்போது உனக்குள் இருக்கும் இந்த உள் மனிதனின் சிந்தனை வரவேண்டும். சோர்வுக்கு இடம் கொடுக்காமல் , நன்மையான புதிய புதிய செயல்களை  செய்ய வேண்டும். உன் பசி, மற்றவர்களுக்கும் எற்படுமென்று அவர்களின் பசியை போக்கி உதவி செய்ய வேண்டும். அதன் மூலம் அனைவரையும் காக்கும் குணம் வளரவேண்டும். உன் வாழ்கையை அனுபவிக்க, மகிழ்ச்சியுடன் கலந்த இன்பத்தை கொடுக்கின்றது.


பிரிய மனிதா! அந்த வயிறிடத்தில்  , நான் தான் நேற்று சாப்பிட்டுவிட்டேனே இப்போது ஏன் கேட்கிறாய் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளாது. சரி நாளை தருகிறேன் என்று சொன்னாலும் ஒத்துக் கொள்ளாது. நாக்கில் அறுசுவை கொடுத்தது அதன் மூலமும் நீ மகிழ்ச்சியடைய வேண்டுமென்பதற்காக. எனது ஜீவ ஓட்டத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக. 

அன்புமிக்க மனிதா! உனது வயிறு உனக்குமட்டும் தான் சொந்தம். அது மானமுள்ளது. சொந்த காலில் நிற்ப்பது. ஒருவர் உதவியையும் ஏற்றுக்கொள்ளாதது. உன் வயிற்றுக்கு நீயே தான் எஜமானர். யாருக்கும் அடிமை இல்லாதது. அது இயங்க நீ தான் தேவை. உன்மூலம் தான் தேவை. நீ அதை கவனிக்காவிட்டாலும் அது உன்னை சும்மாவிடாது. 


இனிய மனிதா! பஞ்சபூதங்கள் கூட உனக்கு ரொம்ப அரிதாக ஆபத்து தரும்.. அழிவு தரும்.. துன்பம் தரும்.. ஆனால் உனக்குள் இருக்கும் வயிறு தினமும் சராசரியாக இரண்டு அல்லது மூன்று வேளையாவது உனக்கு மரண அவஷ்தை கொடுக்கும். நீ அதற்கு உண்டான 'இறை ' யை கொடுத்துவிட்டால் அது உனக்கு தொந்தரவு தராது. அதுவும் உனக்குள் இருக்கும் இந்த உள்  மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பதை உனக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால் எனது ஜீவ ஓட்டத்திற்கு இது தான் பேருதவி செய்கின்றது. 'பசி ' என்பது மறைமுகமாக் உன்னை நல்ல எண்ணங்களை நினைக்கச் சொல்கின்றது. நல்ல செயல்களை செய்யச் சொல்கின்றது. மனிதனை காப்பதற்கு நினைவுபடுததுகிறது . நான் உன்னுடன் இருப்பதை அடிக்கடி ஞாபகபடுத்துகின்றது. பசி, இந்த உள் மனிதனின் ஜீவ ஓட்டத்தை சரியாக வைத்துக்கொள்ள உதவும்  'நேரம் தவறாது ஞாபக படுத்தும்  எச்சரிக்கை  மணி' என்று கூட சொல்லலாம். 

பாசமுள்ள மனிதா! பசி வரும்போது தான் வயிறு ஓன்று இருக்கின்றது என்று அறிகின்றாய்! அது தினமும் உனக்கு எச்சரிக்கை செய்யும் எமன். எனது ஆன்ம ஓட்டத்தை நிறுத்தும் ஆற்றல் கொண்டது. மரணத்தை ஞாபகப் படுத்தும் அபாயச் சங்கு. அதை நீ உணர்ந்துகொண்டால் எப்போதும் தப்பிப்பாய். இல்லையேல் அதைவிட உனக்கு அவஸ்தை தருபவர் இந்த உலகில் யாருமில்லை. அந்த அவஸ்தை இருக்காமல் இருக்க நீ மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். நீ மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமென்றால் நல்ல செயல்கள் செய்யவேண்டும்.இரக்கமுள்ள மனிதா! இந்த வயிற்றுப் பிழைப்பிற்காக நீ என்னென்ன செய்கிறாய்? படிக்கிறாய். உழைக்கிறாய். சம்பாதிக்கிறாய். நன்றாக நேரம் தவறாமல் அறுசுவை உணவு சாப்பிடுகின்றாய். அப்படித்தானே! அதன் மூலம் பூதங்களின் தலைவனான வயிற்றின் தீயை ஆறவைக்கின்றாய். அவைகளெல்லாம் தற்காலிகமானது தான். அந்த தற்காலிக செயலின் பலன் அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறு மணி நேரம் வரை தான். மீண்டும் கவனிக்காவிட்டால், அது திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதை தான்.

பிரியமுள்ள மனிதா! நன்றாக யோசித்துப்பார்! இந்த அரை சான் வயிறுக்காக எவ்வளவு படாதபாடுபடுகின்றாய். ஒருவேளை உணவு இல்லையெனில் உன்னை எப்படியெல்லாம் வாட்டிவதைக்கின்றது. நீ இதுநாள்வரை அதனிடத்தில் எவ்வளவு விசுவாசம் இருந்தாலும் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையை போல 'பசி .. பசி  ' என்று சப்தமில்லாமல் கூப்பாடு போட்டுகொண்டிருக்கும். ஒருவகையில் அது உன்னை மிரட்டும். அதற்காகவே நீ உழைத்தே தீரவேண்டும். அதுவும் மற்றவர்களின் வயிற்றை அடிக்காமல்! அதற்காக நீ புதிதாக எதற்கும் கஷ்டப் படவேண்டாம். உனக்காக வித விதமாக , பலவித சுவைகளில் படைப்புகளை படைத்திருக்கிறேன் அதை எனக்குத் தந்தால் போதுமானது.மதிப்புமிக்க மனிதா! உனக்குமட்டுமல்ல ! எல்லோருக்கும் வயிறே பிரதானமானது. அதை கவனிப்பதே உனது முதல் கடமை. அதை கவனத்தில் கொள்ளாமல் அதை மறக்கச் செய்யும் கேளிக்கைகளில் ஈடுபட்டு உனது ஆன்ம ஓட்டத்தை பாழ்படுத்திக் கொள்கிறாய். அதை சரிகட்ட  'பணம்' என்கிற உருவத்தைப் படைத்து அதன் மூலம் என்னை அவ்வப்போது கவனித்து வருகின்றாய். ஆனால் ஒருகட்டத்தில் என்னைவிட அதுவே முக்கியம் என்று எண்ணி அதை தேடுவதற்கு நல்ல வழியை கடைப்பிடிக்காமல் குறுக்கு வழியில் செல்ல துணிந்து விடுகின்றாய். அதற்காக பலரை அழிக்கவும் தயாராக இருக்கின்றாய் என்பதை அறிவேன்.

பெருமைமிக்க மனிதா ! உனக்கு பணம், நகை  போன்ற செல்வம் உனக்குத் தேவையென்றால் நானே அதைப் படைத்திருப்பேனே! இவ்வளவு அரிய படைப்புகளை படைத்த நான் அதைப் படைப்பதற்கு சில வினாடிகள் கூட ஆகாது. ஆனால் சிலர் அதன் மூலம் என்னைவிட பெரிய ஆற்றல் உள்ளவனாக காட்டிக்கொன்கிறார்கள் . பணம் அதிகம் உள்ளவன் எதைச் சொன்னாலும் , அதாவது அழிக்கும் செயலைச் செய்யச் சொன்னாலும் செய்கின்றாயே ! அது நியாயமா! இதுநாள் வரை நீ அப்படி எதாவது செய்திருந்தால் அதை மறந்திடு! மீண்டும் செய்ய நினைத்தாலே நான் கொடுக்கபோகும் தண்டனை உனக்கு மட்டுமல்ல. உன்னைச் சேர்ந்தவர்களுக்கும், சந்ததியினருக்கும் தான்.  நான் உனக்கு தண்டனை கொடுக்க இனி தயங்க மாட்டேன். அப்படி ஏதேனும் யாருக்கேனும் துரோகம் செய்து உன் வயிறை கவனித்தால் நான் தகுந்த நேரத்தில் , உனது ஜீவ ஓட்டத்திற்கு  தடையாக இருப்பேன். அப்போது நீ எது கொடுத்தாலும் நான் ஏற்கத் தயாராக இருக்க மாட்டேன். நீ திருந்தி கண்ணீர் சிந்தினாலும் அப்போது எனக்கு எதுவும் கேட்காது. அப்போது நீ கஷ்டப்படுவது இல்லாமல் மற்றவர்களும் கஷ்டப்படுவதை உன் கண்ணால் பார்க்கலாம்.பாசமுள்ள மனிதா! நீ கேளிக்கைகளில், செய்யக் கூடாத செயல்களில், மற்றவர்களிடம் பசப்பு வார்த்தைகளில் ஏமாறும்போது, பகட்டான வற்றில் கவனம் செலுத்தும்போதும், பேராசைபடுவதன் மூலமும், எனது ஜீவ ஓட்டத்திற்கு பொருத்தமில்லாதவற்றில் உனது சம்பாத்தியத்தை செலவழிக்கு முன் என்னையும் , என் குணத்தையும் கவனி. நான் மீண்டும் மீண்டும் எனக்குத் தகுந்தளவு உணவு மட்டும் தான் கேட்பேன். எனக்கு நீ கோடி பணம் கொடுத்தாலும், தங்கத்தை கொட்டி கொடுத்தாலும், வைரத்தால் அபிஷேகம் செய்தலும், உனக்கிருக்கும் அவ்வளவு சொத்துக்களை எழுதி வைத்தாலும், என்னை புகழ்ந்து பேசினாலும், புகழ்ந்து பாடினாலும் அவைகள் எனக்கு உனது  ஒரு முடியளவிற்கு  கூட பிரயோஜனம் இருக்காது. எனக்கு வேண்டியது எப்போதும் ஒரு சான் வயிற்றுக்கான உணவு மட்டும். அது கொடுத்துவிட்டால் உனக்கு சிலமணிநேரம் விடுதலை. பிறகு மீண்டும் 'பசி ' என்னும் தீயை ஏற்றிவிடுவேன், அது அணைப்பது உனது அன்றாட கடமை.இனிய மனிதா! உன் வயிறு தான் உலகம். அது உனது வாழ்கையை செவ்வனே வழிநடத்திச் செல்லும் தலைவன். உன் உடலை மகிழ்ச்சியால் நிரப்பும் ஆற்றல் கொண்டது. அதன் வழி தான். உன் வழி ! அதை மாற்ற யாராலும் முடியாது! நான் எதற்காக உன்னை எச்சரிக்கிறேன் என்றால் , உன்னைச் சுற்றிலும் பசியை மறக்கும், மயக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வலையில் விழுந்து விடவேண்டாம் ஜாக்கிரதை!

பிரிய மனிதா! நீ ஒவ்வொரு காரியம் செய்யும்போது உனக்கு கஷ்டம், பிரச்சனை வரக்கூடாதென்றால் எப்போதும் இந்த வாசகம் நினைவில் வைத்துக்கொள். அதாவது 'இன்னும் சில மணி நேரத்தில் , இம்சை அரசனான எனது வயிறு கேட்கும் நல்ல உணவை கொடுக்க வேண்டும். அப்போது தான் எனது ஆன்ம ஓட்டம் தடைபடாமல் இருக்கும். கொடுக்கும் உணவு நல்ல வழியில் இருக்கவேண்டும் ' என்பதாகும். அந்த எச்சரிக்கை வசனம் தான் உனது காதில் சப்தமில்லாமல் இனி ஒலிக்கச் செய்யப் போகிறேன். கவனம் கொள் மனிதா ! இது ஒரு நாளில் சரி செய்யும் வேலை கிடையாது. எனது ஆன்ம ஓட்டம் நிற்கும்வரை அதாவது  நீ சாகும் வரை தற்காலிகமாக தினமும் உன்னை சித்திரவதை அல்லது துன்புறுத்திக் கொண்டிருப்பேன். என்னை கவனிக்க உனது மனம் பிரயாசைப் படவேண்டும்.பாசமுள்ள மனிதா! இந்த இம்சை நீ தினமும் காணும் சின்னத் திரை, வெள்ளித் திரை, இனிக்கும் பாடல்களால், கிளர்ச்சியூட்டும் இன்பச் செயல்களால் , தீப்பொறி வசனங்களால், அன்பாலும், அரக்கத்தாலும், புகழாலும் சரி செய்யமுடியாது. இந்த பிரச்சனை நல்ல முறையில் தீர்க்க படவேண்டுமென்றால் அதற்கான சிறந்த வழியை ஏற்படுத்திக்கொள். அதற்கு எப்போதும் உனக்கு உதவி செய்யவே உனக்குள் இருக்கும் உள் மனிதனாக வந்துள்ளேன். வெறும் சவுடாலான பேச்சுகளால் , பகட்டு வார்த்தைகளால் நீ உன் வயிறை திருப்தி படுத்தமுடியாது.

பிரிய மனிதா! உனக்கு ஆயுசு முழுவதற்க்கு நல்ல உணவைத் தரவே நான் வந்துள்ளேன். இனிமேல் நான் சொல்லுபடி நட. வாழ்கையில் உனக்கு வயிறைப் பற்றிய கவலை இல்லை. மற்றவர்களுக்காகவும் உழை . ஆனால் உன் வயிற்றுக்கு நீ தான் துணை. இது தானாக நடக்கக் கூடிய ஒன்றல்ல. நீயாக நடத்திக் காட்டக் கூடிய ஓன்று.
இனிய மனிதா! இந்த உள் மனிதனான என்னை , எனது ஜீவ ஓட்டத்தை மறக்கச் செய்வது அது தான். என்னை நிந்திப்பது அது தான், உன்னை அணு அணுவாக கொல்வதும் அது தான். என்னை உச்சத்தில் வைத்து வேடிக்கை பார்ப்பதும் அது தான். உன்னை பாவச் செயலை செய்யவைப்பதும் அதுதான். பிறரை துன்புறுத்துவதும் அது தான்.

மதிப்பு மிக்க மனிதா! இப்போது முதல் உன் வயிற்றுக்கு நிரந்தர சிறந்த வழியை நான் தருகிறேன். எனது படைப்பை உனக்கு எப்போதும் தந்து உனது வயிற்றை நல்ல உணவால் நிரப்புவதோடு, உனது உடலை , எனது ஜீவ  ஓட்டத்தின் உதவியால் மகிழ்ச்சியால் நிரப்புகிறேன். அதுமட்டுமல்ல. மற்றவர்களுடைய வயிற்றிற்கு உன்னால் முடிந்தளவு உதவி செய்தால் இந்த உள் மனிதன் மகிழ்ச்சியடைவேன். என் படி நட. உனது வாழ்வில் என்றும் நிம்மதியாய் இருப்பாய்.
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   
  

No comments:

Post a Comment