Pages

Tuesday, 17 July 2012

பாரதி விரும்பிய புதுமை பெண் - கவிதை - மதுரை கங்காதரன்

பாரதி விரும்பிய புதுமை பெண்  

கவிதை - மதுரை கங்காதரன் 



காலம் செய்யாததை 
கவி மூலம் செய்த 
மகாகவி பாரதிக்கு நன்றி 


அடிமை பெண்ணிலிருந்து 
புதுமை பெண்ணாய் மாற்றியதற்கு.

கொலு பொம்மையாய் இருந்தவளை 
கோபுரத்தில் ஏற்றியதற்கு .

சமையலறையில் தவமாய் இருந்தவளை 
சாதனைகள் பல செய்பவளாய் மாற்றியதற்கு.

வீட்டு கூண்டில் அடைபட்டு கிடந்தவளை 
ரெண்டு இறக்கை கட்டி பறக்கச் செய்ததற்கு.    

பிரசவ ஆஸ்பத்திரியை குத்தகை எடுத்தவளை 
பிறவி பயன் பெற்றவளாய் மாற்றியதற்க்கு.

பல துறையில் அவளின் முன்னேற்றத்தின் காட்சி 
பள்ளி தேர்ச்சி விகிதமே சாட்சி.

பூப்பெய்தும் வரை தான் கல்வி என்பதை மாற்றி 
பூமியை தாண்டி விண்ணுக்கு பயணித்ததற்கு.

அன்பால் உலகை திரும்பி பார்க்கச்செய்த்த பெண் 
அதரவற்றோருக்கு அடைக்கலம் தந்த பெண் 


அனைத்து விமர்ச்சனங்களையும் தாண்டி 
ஆசைகளை தியாகம் செயத பெண் 

ஆண்டவனாய் அனுப்பிய தெய்வப் பெண் 
அன்னை தெரசா என்ற நோபல் விருது பெண் 


ஆணுக்கு அடிமையாய் கிடந்த பெண் 
அவனுக்கு நிகராய் வளரும் பெண் 

அலங்கார பதுமையாய் இருந்த பெண் 
ஐ.ஏ.எஸ் படித்து ஆளும் பெண் 


பெண்ணுக்குள் உறங்கி கிடந்த 
பல புதுமைகளை கொடுக்கும் பெண் 


திறமைகளை வளர்த்து 
தரணியை ஆளும் பெண் 

பெண்ணில்லாமல் ஆணில்லை 
இருவர் இல்லையேல் உலகில்லை 

பெண்ணிற்கு உரிமை பல கொடுப்போம் 
பெண் குலத்தை போற்றுவோம் .


வாழ்க பாரதி !
வளர்க புதுமை பெண்!




No comments:

Post a Comment