Pages

Thursday 1 November 2012

உள்விதி மனிதன் பாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்- YOU ARE CREATED FROM POWERFUL CELL

உள்விதி மனிதன்  
சம மனிதக் கொள்கை 

பாகம்:26 நீ பேராற்றல் மிக்க 
அணுவிலிருந்து வந்தவன்-


YOU ARE CREATED FROM POWERFUL CELL 



என் இனிமையான மனிதா! உனக்குள் இருக்கும் உள்விதி மனிதனைப் பற்றி இப்போது உணர்ந்துவிட்டாயா? இன்னும் சொல்வதை கேள். உன்னை எப்படிப்  படைத்திருக்கிறேன் என்று தெரியுமா? அதிலிருந்து உனது பலமும், ஆற்றலும் தெரிந்துகொள். உன்னை ஏனோ தானோவென்று படைக்கவில்லை. இலட்சக்கணக்கான அணுக்களில் எந்த அணு வீரியம் மிக்கதோ, வலிமை வாய்ந்ததோ எல்லாவற்றிலும், எல்லாவிதத்திலும் மேன்மையான இந்த உள்விதி மனிதனின் ஜீவ அணு தான் இப்போது நீ மனிதப் பிறவியாக மாறியிருக்கிறாய் என்பதை அறிந்து கொள்.

என் பாசமுள்ள மனிதா! நான் உன்னை உருவாக்கும்போதே உனக்கு அரிய பெரிய மகாசக்தியுடையவனாகவே படைத்துள்ளேன். அந்த அற்புத சக்தியின் மதிப்பை நீ உணராமல் உனது நேரத்தையும், ஆற்றலையும் உபயோகிக்காமல் வீணடித்துக் கொண்டிருக்கிறாய். அந்த அளவுகடந்த சக்தியைக் கேட்பார் பேச்சில் மயங்கி, உனது சுயநலத்திற்காகவும், பிறரின் சுயநலத்திற்காகவும் சில சமயங்களில் உன்னை நீயே மற்றவர்களிடத்தில் அடகு வைக்கவும் தயங்கமாட்டேன் என்கிறாயே இது உனக்கே நியாயமா?

அன்பு மனிதா! நான் பரதேசிகளுக்கும், மகாபாவிகளுக்கும், பரம ஏழைகளுக்கும் நன்மை செயல் செய்வதற்கு ஒரு வழிகாட்டியாகவும், அவர்களுக்கு பணம் அல்லது செல்வம் அல்லது அறிவு படைத்தவர்களின் மூலம் பொருட்செல்வங்களை, அறிவுச் செல்வத்தை, ஞானச் செல்வத்தை உனக்கு இலவசமாகக் கொடுக்கச் செய்யவே உனக்குள் உட்கார்ந்துகொண்டு உனது மகா ஆற்றலையும் அறிவையும் உனக்கு உணர்த்தவே வந்துள்ளேன். 

பிரியமுள்ள மனிதா! கல் நெஞ்சம் கொண்ட சிலர் எனது இந்த நன்மை தரும் செயலை நிராகரித்து இந்த உலகில் நிரந்தர நரகவேதனையில் சிக்கித்தவித்து, மானமிழந்து, அவர்களின் சந்ததியினருக்கு அவபெயரை ஏற்படுத்தி மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி என்னை பலவழிகளில் அலட்சியம் செய்து வருவதை இனிமேலும் பொறுக்க மாட்டேன். அவர்கள் திருந்தும் வரை, அவர்களின் செல்வங்கள் ஏழை எளியவர்களுக்கு சேரும்வரை ஓயமாட்டேன். அப்படிப்பட்ட எல்லோரிடத்திலும் நான் அவர்களுக்குள் இருந்து கொண்டு தினமும் அவர்களை உந்தி உந்தி அவர்களை மனிதப் பிறவியிலிருந்து தெய்வப்பிறவியராக்கி  புது உலகம் படைத்து ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி இனிமேல் தீயசக்திகள் தலை தூக்காவண்ணம், தீயச் செயலை நடைபெறுவதை முற்றுப்புள்ளி வைக்க என் வேலைகள் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

பண்புள்ள மனிதா! நீ குழந்தையாய் பிறக்கும்போது நீ கேட்காமலே இலகுவாக உனது வலிமைக்காக, ஆற்றலுக்காக எளிதாக ஜீரணிக்கக் கூடிய உனது தாயின் இரத்தத்தையல்லவா உனக்குப் பாலாக ஊட்டவைத்தேன். அதுமட்டுமா? அந்தத் தாய் பால் போதாது என்பதற்காக கன்றுக்கு கொடுக்கும் பசும் பாலல்வா உனக்கு கிடைக்கச் செய்கிறேன். இப்போதாவது உனது ஆற்றலை உணர்கிறாயா?



மேன்மையான மனிதா! இப்போதுள்ள போலியான மகான்கள் மக்களுக்கு ஆசிர்வாதம் தருகிறேன், கடவுளின் அனுகிரகம் தருகிறேன் என்று உன்னுடைய  செல்வங்களை வாங்கிக்கொண்டு அவர்களது பெயரில் பல பெரிய பெரிய கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், கல்விக்கூடங்கள் இன்னும் பல வழிகளில் 'மக்களுக்காக சேவை செய்கிறேன்' என்று கூறி உன்னை ஏமாற்றுவது புரிந்துகொண்டாயா? அது எப்படி இருக்கின்றதென்றால் உனது நோய்க்கு அவர்கள் மருந்து குடித்தால் உனது நோய் குணமாகுமா? உனது பசிக்கு அவர்கள் சாபிட்டால் உனது பசி தீருமா? உனக்கு கஷ்டம் என்றால் அவர்களா அதைத் தாங்குவார்கள்? உனது நோய், பசி, கஷ்டம் போன்ற எல்லாவற்றையும் நீ தான் அதற்குண்டான தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்குத் தான் உனக்குள் இருக்கும் என்னை மறந்து என்னிடத்தில் முறையிடாமல் பலரிடம் ஏமாறுவது இனி நடக்காமல் நான் பார்த்துக்கொள்ளப் போகிறேன். அத்தகையவர்களை நான் அடையாளம் காட்டுகிறேன். அவர்களை அண்டாமல், ஏமாளியாய் அவர்களிடம் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க உனக்கு உதவுகிறேன். உனக்கு என்னசெய்வது என்று தெரியாமல் இருந்தால் என்னை கவனி. நான் சொல்லும் அறிவுரைகளை கூர்ந்து கேள். அதை ஏற்றுக்கொண்டு அதன்படி தைரியமாக காரியத்தில் இறங்கு. எப்போதும் வெற்றி தான். இந்த உள்விதி மனிதன் இருக்க பயமே வரக்கூடாது.

இனிய மனிதா! உனக்கு ஒருவரை பார்த்தமாத்திரத்தில் அவன் தர்மவானா அல்லது அயோக்கியனா என்று உன்னால் கூற இயலாது அல்லவா? அவன் உனக்கு நல்லது செய்யப் போகிறானா அல்லது தீமை செய்யப் போகிறானா என்று உனக்கு தெரியுமா? எல்லாம் பட்டபிறகு, இழந்த பிறகல்லவா உனக்கு அறிவு வருகின்றது. அப்போது வந்து என்ன பயன்? 



மதிப்புமிக்க மனிதா! பல போலி ஆசாமிகள் ஆன்மீகக் கூட்டத்தில் உங்களை  அப்படி உயர்த்திக்காட்டுகிறேன், பட்டினியைப் போக்குகிறேன், பணக்காரனாக்குகிறேன்,  செல்வங்களை அள்ளித்தருகிறேன்,  உனது கஷ்டத்தை நொடியில் விரட்டுகிறேன், தொழிலில் லாபமடையச் செய்கிறேன், எனக்குத் தெரிந்தவரின் மூலமாக வேலை வாங்கித் தருகிறேன் என்கிற வீரவசனம் பேசி,  கைத்தட்டல் வாங்கிக் கொண்டு கூடவே பணத்தை கரந்து உங்களை 'அம்போ 'என்று தெருவில் விட்டு, அலைகழித்து தீராத துன்பத்தில் ஆழ்த்தி ஏதும் அறியாது போல் இருந்துவிட்டு கடைசியில் 'எல்லாம் உன் விதி' என்று கூறும் ஆசாமிகளின் பக்கத்தில் நெருங்கவே நெருங்காதே!



அன்பு மனிதா! எவன் ஒருவன் தான் செய்யும் செயலுக்காக அளவுக்கு மீறி அதிக பொருட்கள் கேட்கிறானோ அவனை கண்டிப்பாக நம்பாதே! அவன் ஒரு பேராசைக்காரன். அவனிடமிருந்து தூர விலகி நில். ஆனால் எவன் ஒருவன் தன் சாப்பாட்டிற்காக அல்லது அன்றாடம் பிழைப்பிற்காக, கல்விக்காக பணம் கேட்பவனுக்கு உடனே உன்னால் முடிந்தளவு உதவிகள் செய். அந்த செலவுக்கான பணம் , நூறு மடங்காக மற்றொரு உருவத்தில் உனக்கு வந்து சேரவைப்பேன். நிஜமான நல்ல பெரிய பெரிய மகான்கள், ஆன்மீக வாதிகள் கூட 'மானிட சேவையே கடவுள் சேவை' என்று சொல்லியிருக்கிறார்கள். 

மேன்மையான மனிதா ! அப்படிப்பட்டப் போலிகளால் சிறு துரும்பு கூட அசைக்க முடியாது. உனது நல்ல சிந்தனைக்கேற்ப நல்ல செயலை உனக்கு செய்வதற்கு இந்த உள்விதி மனிதன் எப்போதும் துணையாய் இருப்பான். இப்போது உனக்கு ஒரு சந்தேகம் வரும். நேற்று வரை ஆண்டியாக இருந்தவர்கள் சிலர் குறுக்குவழியில் மக்களை, அரசை ஏமாற்றி ஏகப்பட்ட சொத்துகள் சேர்த்தவர்கள் மிக நன்றாக் இருக்கிறார்களே! ஆனால் நல்லவழியில் செல்பவர்கள் கஷ்டப்படுகிறார்களே ! அது ஏன்? என்று தெரியாமல் விழிக்கிறாய்!

இனிய மனிதா! அப்படிக் குறுக்குவழியில் பணம் சேர்ப்பவர்களுக்கு நான் அவர்களுக்கு பலசமயங்களில் திருந்தும் சந்தர்ப்பங்களைத் தருகிறேன். ஒருவேளை இன்னும் சிறிது கொடுத்தால் மனம் திருந்திவிடுவார்கள் என்ற எனது நப்பாசை பல சமயங்களில் பொய்த்துவிடுகின்றது. அவர்கள் மேலும் மேலும் பேராசைப்பட்டு செல்வங்களை சுமக்க சுமக்க அவனைச் சுற்றி இருப்பவர்களே அவர்களுக்கு எமனாக மாறிவருவதை அறியாமல் மென்மேலும் தவறுசெய்வதை உன் மூலம் தடுக்க புறப்பட்டு விட்டேன். சிலர் கடைசியில் அனைத்தையும் இழந்து மீண்டும் என்னை ஆரம்பத்தில் சந்தித்ததுபோல பழைய நிலைமைக்கு வந்து கஷ்டப் படுகிறார்கள். எனது இரக்க குணம் அவர்களையும் காத்து இரட்சிக்கச் சொல்கிறது. ஆகவே தீய வழியில் செல்லவே செல்லாதே! அதற்கு துணையும் போகாதே!  அந்தபக்கம் எட்டிக்கூட பார்க்காதே!

என் அருமை மனிதா! உன்னிடம் யாராவது குறுக்கு வழியில் உன்னை பணக்காரனாக்குகிறேன் என்று சொன்னால் அவனிடம் போகாதே! அப்போது நான் உனக்கு எச்சரிக்கை செய்கிறேன். அதேபோல் எவன் ஒருவன் பேச்சை விட தனது செயலைக் கொண்டு நன்மை தரும் நல்ல காரியங்களை தொடர்ந்து மக்களுக்குச் செய்து 'நல்லவன்' என்று நிரூபிக்கிறானோ அவனை காலம் முழுவதும் நம்பு. அவன் கூடவே செல். சிலரின் வீண் பேச்சில் மயங்காதே! என் மூலம் உனக்கு எப்போதும் சந்தோஷம் கிடைக்கும்.       


  உள் மனிதனின் ஜீவ ஓட்டம் தொடரும்...
          

No comments:

Post a Comment