Pages

Friday, 15 February 2013

என்னைக் கவர்ந்த வெண்ணிலாவே - MY FAVORITE MOON - புதுக்கவிதை

      என்னைக் கவர்ந்த வெண்ணிலாவே -
                        
                       MY FAVORITE MOON -
                        
                                            புதுக்கவிதை 
                                      மதுரை கங்காதரன் 

இரவின் இருளைப் போக்க வந்த 
எப்போதும் எரியும் அணையா விளக்கு நீ 
எண்ணெய் திரியில்லாமல் இயற்கை தந்த 
இருளை அகற்றும் ஒளி விளக்கு நீ 

கவிஞர்களுக்கு நீ கற்பனை ஊற்று 
காதலர்களுக்கு நீ அழகு தேவதை 
மழலைகளுக்கு நீ காட்சி பொருள் 
எல்லோருக்கும் நீ அதிசயப் படைப்பு.



தூய அன்பு உடையவர்களுக்கு நீ உதாரணம் 
வெள்ளை உள்ளங்களுக்கு நீ எடுத்துக்காட்டு 
கறைபடியாத வாழ்க்கைக்கு நீ சாட்சி 
பரிசுத்த ஆன்மாக்களுக்கு நீயொரு முன்மாதிரி.

வாழ்கையில் இருள் வரும் ஒளியும் வீசும் 
எப்போதும் ஒரே நிலையில் இரு 
என்று இலவசமாக வாழ்க்கை பாடத்தை 
கற்றுக்கொடுக்கும் ஆசான் நீ.  



அன்று உன்னை கவியால் மட்டுமே 
தொட்டு பார்த்தவர்கள் 
இன்றோ உன்னை அறிவியல் வளர்ச்சியால் 
எட்டி பிடித்திருக்கின்றனர் சிலர்.

பகலின் வெப்பத்தை தணிக்க வந்த 
இரவு குளிர் காற்று நீ 
இரவு பொழுதில் உறங்குவதற்கு 
மடியைக் கொடுக்கும் அன்னை நீ.

விஷேங்களுக்கு நீ அடையாளம் 
அமாவாசை நாட்களில் நீ தெரிவதில்லை 
பௌர்ணமியில் நீ முழுமையாக தெரிகின்றாய் 
பிறையில் நீ தெரியும் அழகோ அழகு தான்.

நான் மட்டும் உன்னை விரும்பவில்லை 
உலக மக்கள் அனைவரும் விரும்புவது 
உன்னைப் போல மாசற்று வாழவேண்டும் 
உலக மக்களை நல்வழி படுத்தவேண்டும்.

                         நன்றி 
 
                     வணக்கம்.

No comments:

Post a Comment