Pages

Wednesday 14 November 2012

பாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும் (SWAMI VIVEKANANDA)

 விவேகனந்தர் - ஒரு ஆன்மீக நியூட்டன் - 
பாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க
இன்றைய தேவையும் 


சிறப்பு வாய்ந்த  மனித பிறப்பு பெற்ற பலர் பூமிக்கு பாரமாக இருந்துவிட்டு , நீர்க்குமிழி போல வாழ்ந்து மறைந்துவிடுகின்றனர். ஆனால் வெகுசிலர் மனிதகுலத்திற்கு  புனிதத்தைத் தேடிக்கொடுத்து இந்த பூமியை தங்களால் இயன்ற அளவிற்கு புண்ணியபூமியாக மாற்றி மனிதகுலம்  கஷ்டம் என்னும் வெள்ளத்தில்  அடித்துச் செல்லாமல் இருக்க அவர்களுக்கு உதவும்  பாலமாகவும், பிறவிக் பெருங்கடலை கடப்பதற்கு தோணியாகவும்  தங்களை அர்பணித்துக் கொண்டதோடு, என்றும் தங்களுடைய நினைவுகளின்  மூலமாக மனிதர்களுடைய நெஞ்சில் நிரந்தரமாக  இடம் பிடித்து அவர்களது வாழ்க்கைக்கு நல்வழி காட்டுகின்றனர். அந்த வகையில் சுவாமி விவேகனந்தரின் பிறப்பு மனிதகுலத்திற்கு குறிப்பாக இளைஞர் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக வாழ்ந்து இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.



அவர் கல்கத்தாவில் 1863 ம்  ஆண்டு ஜனவரி மாதம் 12 ம்  நாள் பிறந்தார். 'நரேந்திரநாத்' என்பது அவருடைய இயற்ப்பெயர். பின்னரே அவர் 'சுவாமி விவேகானந்தர் 'ஆக மாறினார்.   இயல்பாகவே அவர் ஆன்மீகத்தில் நாட்டமுடையவராக இருந்தார். அவர் பி.ஏ  பட்டதாரி ஆவார். அவர்  பேசுவதிலும் பாடுவதிலும் நன்றாக தேர்ச்சி பெற்றவர். சிறுவயது முதற்கொண்டே  அவருக்கு 'கடவுளைக் காணவேண்டும்' என்கிற ஆர்வம் அதிகமுள்ளவராக இருந்து வந்தார். அதற்காக அவர் பல மகான்களையும், முனிவர்களையும், ஆன்மீகப் பெரியவர்களிடத்தில் கடவுளைப் பற்றிய  பல கேள்விகளை கேட்டும் அதற்கான விடைகளையும் தெரிந்து கொண்டுவந்தார். அதில் அவர் முதலில் பின்பற்றியது 'தியானம்'. அவர் பல மணிநேரம் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை மறந்து தியானத்தில் மூழ்க ஆரம்பித்தார்.



வயது ஆக ஆக அவருக்கு தங்கு தடையின்றி தியானம் செய்யவேண்டுமென்று நினைத்தார். அதற்கு தகுந்த இடம் தமிழ்நாட்டின் தென்முனையில் முக்கடல் சங்கமமாகும் 'கன்னியாகுமரி' யை தேர்ந்தெடுத்தார். அதற்கு மற்றொரு காரணம் இடைவிடாது கடல் அலைகள் எழுப்பும் சப்தம் அவருக்கு புத்துணர்ச்சியையும், மனவலிமையும், ஊக்கத்தையும் கொடுத்தது என்று சொல்லலாம். அதுவுமில்லாமல் இடைவிடாது மனதில் தோன்றும் நிரந்தரமில்லாத எண்ண அலைகளை தியானத்தின் மூலமாகத் தான் அடக்கமுடியும் என்றும் அதன் மூலம் மனோபலம் பெறமுடியும் என்றும் நம்பினார்.


தான் எண்ணியவாறு தென் முனையை அடைந்தார். அங்கு அவர் சற்று தூரத்தில் ஓயாமல் பலமாக அடித்துக்கொண்டிருக்கும் உயர்ந்த அலைகளுக்கு நடுவே எதற்கும் அசையாமல் இருக்கும் ஒரு பாறையைப் பார்த்தார். அங்கு தனது தியானத்தை தொடர உத்தேசித்தார். அந்த இடத்தை அடைய அங்கு இருந்த மீனவ படகோட்டிகளிடம் தன்னை அந்த பாறைக்கு  செல்ல உதவிடும்படி வேண்டினார். ஆனால் அந்த மீனவர்களோ பணம்  தராமல் அழைத்துச் செல்ல முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டனர். துறவிகளிடத்தில் எது பணம்? அதற்காக அவர் சற்றும் மனம் தளரவில்லை. இனிமேலும் யாருக்காக காத்திராமல், யர்ர் உதவியையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிகையுடன் நொடிப்பொழுதில் சற்றும் தாமதிக்காமல் ஆபத்து உள்ள அந்த அலைகடலில் குதித்து அந்த பாறையை நோக்கி நீந்தி அடைந்தார். அந்த அலைகளின் சப்தத்திற்கிடையே தியானம் செய்தார். இது அவரது மனோவலிமைக்கும் , துணிச்சலுக்கும் ஒரு சிறந்த உதாரணம்.  



இதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு சொல்லுவது என்னவென்றால் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு நன்றாக யோசித்து முடிவு எடுங்கள். எடுத்தபின் தயங்காமல் , பயப்படாமல் துணிச்சலுடன் செய்யுங்கள். அதன்மூலம் உங்களுக்கு தன்னம்பிக்கையும் , மனவலிமையும் பெறுவீர்கள். அதனால் நினைத்த காரியம் எளிதாகவும், வேகமாகவும் கைகூடும்.



சுவாமிஜியின் சொற்ப்பொழிவுகள், கோழையாக இருக்கும் இளைஞனை வீர இளைஞனாக மாற்றும் வல்லமை கொண்டது. அவரது வாழ்க்கை எக்காலத்திலும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும். 



மனிதகுலத்திற்கு ஒழுக்கம் இன்றியமையாதது. அதனால் மனம் மனத்தூய்மை பெறும் . உடல் சுத்தியும் , ஆரோக்கியமும் உண்டாகும் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். ஒருவன் வாழ்கையில் வெற்றி பெற 'குறிக்கோள்' தேவை என்றார். அந்த குறிக்கோளை அடைய மனம் ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு தியானம் அவசியம் என்று அறிவுறுத்தினார். 'தியானம்' ஒரு மனிதனுக்கு அறிவையும், ஆற்றலும் தருகின்றது. துணிந்து செய்யும் மனவலிமை உண்டாக்குகின்றது. 



'உங்களால் எனக்கு கடவுளைக் காட்டமுடியுமா' என்ற கேள்வி, அவருக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் ஆன்மீகத்தில் கடவுளைப் பற்றிய விளக்கங்களை தெரிந்துகொள்வதற்கு உதவியாக இருந்தது. அவருடைய இரட்டைக் குழல் துப்பாகியான ஆன்மீக சிந்தனையும், சமுதாய கடமையும் மக்கள் மனதில் தோட்டாக்களாக துளைத்துள்ளது என்பது இப்போது உங்களுக்கு கண்கூடாக தெரிய வரும்.



பாகம் : 4 .... சுவாமிஜியின் அற்புத செயல்கள் தொடரும்..   


  

No comments:

Post a Comment