புவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை
- மதுரை கங்காதரன்
புவியாகிய எனக்கு 'காய்ச்சல் '
சீக்கிரம் வைத்தியம் செய்.
'டைப்பாய்டு , ஜானடீஸ் ' என்று
மாறு முன்னே!
என்னைக்காப்பாற்று!
அதோடு
உன்னையும் காப்பாற்றிக்கொள்.
என் வலி, உனக்கும் வலி தான்!
என் கஷ்டம் உனக்கும் கஷ்டம் தான் !
ஏனென்றால்
எனக்குள் நீ இருக்கிறாய்.
என் மேல் மரக்கன்று நட்டு
பச்சிலை தடவு!
அதனால் பெய்யும் மழையால்
என் வெப்பம் தணியும்.
சுற்றுப்புறத் தூய்மையினால்
'ஓசோன்' மண்டலத்துக்கு
ஒத்தடம் கொடு.
உனக்குத் தேவையான
ஊன், உடை, உறைக்கு
மலை வேண்டும்.
ஆக்கத்திற்கு அணு சக்தி
முழு பாதுகாப்போடு அனுமதி.
வாகனத்தை நன்றாய் பராமரி
அது விடும் நச்சுப் புகையை கட்டுப்ப்படுத்து
தொழிற்சாலைகள் கக்கும் கரும்புகையினை
தூய்மையாக்கி வெளியேற்று
அளவுக்கு அதிகமானால்
எதுவும் ஆபத்து
பிரபஞ்சத்தின் அபூர்வம் பூமி
பூமியின் அதிசயம் உயிரினங்கள்
அதிலும் மேன்மை
ஆறறிவு மனிதர்கள்!
விழித்திடு மனிதா !
பசுமை வனங்கள்
பாலைவனமாய் மாறுமுன்னே
யு.வி கதிர்கள் 'ஓசோன்' மண்டலத்தை
ஓட்டை போடு முன்னே
வெப்ப கதிர்கள் மனிதனைத் தாக்கி
'தோல்' வியாதிகள் வருமுன்னே
விழித்திடு மனிதா !
புவி வெப்பமயமாவதை
தடுத்திடு மனிதா!
இப்போதே புறப்படு மனிதா!
'புது உலகம் ' செய்திடு மனிதா !
'மனிதம்' கத்திடு மனிதா !
------------------------------------------------------------------------------------------------------------------
புவிவெப்பமயமாதல் -
ஒரு விழிப்புணர்வு புது மொழிகள்
- மதுரை கங்காதரன்
புவி வெப்பம் தணித்திடும் சாமரங்கள் !
புவி வெப்பம் குறைக்கும் மருந்து
மாசில்ல சூழல்.
புவி வெப்பம் தடுக்க மீண்டும்
பசுமை புரட்சி தொடங்கு
நச்சு புகை வெளியேற்றம் தடுப்போம்
புவி வெப்பத்தை குறைப்போம்
புவி வெப்பம் தணிப்போம்
மாசில்லா புது உலகம் செய்வோம்
பசுமை மரங்களை நட்டு
புவி வெப்பத்தை தடுத்திடு
புவி வெப்பமயம்
மனிதனுள் மெல்ல ஏறும் விஷம் .
---------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment