பிறந்தநாள் தூது
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
A MODERN POEM -
BY MADURAI GANGADHARAN
பிறந்த நாள் வாழ்த்து
வரைந்துவிட்டேன் கண்ணாடியில்!
யாரிடம் கொடுப்பது ?
நியாயமான கேள்வி!
காற்றை அழைத்தேன்
'ஆடி முடிந்துவிட்டது
ஓடி களைத்துவிட்டேன்
அத்தோடு என் வேலை முடிந்தது' என்றது.
ஓடும் ஆற்றைக் கூப்பிட்டேன்
'பூமியில் ஈரமில்லை
நான் எடுத்துச் சென்றால்
பாதியில் நின்று விடுவேன்' என்றது.
மேகத்திற்கு மோகம் இருக்குமா?
அதனிடம் சேதி சொன்னேன்
'தூது சென்று சென்று
அலுத்துவிட்டது ' என்றது.
புறா வருமா? முயற்சி செய்தேன்
'மதுரைக்கா ? ஒரு நாள் ஆகுமே!
அதுவரை என்னவளை பிரிய
தெம்பில்லை' என ஒதுங்கியது.
நிலவைப் பார்த்தேன்
மெல்ல சிரித்தது, பக்கம் சென்றேன்
வேலையைச் சொன்னேன்
'சரி ' என்றது.
எனக்கு சந்தோசம் பிறந்தது
கூடவே நிபந்தனை விதித்தது
'அடுத்த பௌர்ணமி அன்று கொடுப்பேன்' என்றது.
காரணம் கேட்டேன்
இடை நாட்கள் அழகு இருக்காதே' என்றது.
இது சரி வராது
அதற்குள் பிறந்த நாள் போய்விடும்
கால்கள் ஓய்ந்தன
கவலைகள் பிறந்தன
கடைசியில் தபால் பெட்டி நம்பினேன்.
அருகில் சென்றேன்
உதவி நாடினேன்
'செய்கிறேன் ' என்றது , கூடவே
'சம்திங் ' கேட்டது பணமாக அல்ல
தபால் தலைகளாக.
ஓ ! இது இருபத்தோறாம் நூற்றாண்டு
'எல்லாவற்றிற்கும் பணம் '
பணம் கொடுத்து தபால் தலைகளை
வாங்கி ஒட்டி
முகவரி எழுதினேன்
கூடவே
குறிப்பு எழுதினேன்
'கண்ணாடியில் பிறந்த நாள் வாழ்த்து
மென்மையாக சேர்க்கவும்'
வந்து சேர்ந்ததா?
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
No comments:
Post a Comment