Pages

Thursday 16 August 2012

பாகம் - 3 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று


பாகம் - 3 நிறுவன வெற்றிக்கு உதவும் 
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று - 


புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.

லாபம் தரும் வழிகள் 

நிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம் 

  

ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றியின் திறவுகோல் யார் என்றால் சுப்ளையர்கள் தான். அதாவது உற்பத்திக்கான மூலப்பொருட்களை வழங்குபவர்கள் அல்லது சேவைகளுக்கு மிகவும் உதவுபவர்கள். நிறுவனமும் சப்ளையர்களும் இணையாகச்செல்லும் இரயிலின் தண்டவாளம் அல்லது ஓடும் வண்டியின் இரு சக்கரங்கள் அல்லது நமது உடம்பின் இரு கண்கள் போன்றவர்கள். ஒன்று இல்லாமல் மற்றொண்டு உருவாகாது. அதாவது சப்ளையர்கள் சிவம் என்றால் நிறுவனம் சக்தி. சக்தியில்லையேல் சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லை.

   



மேலும் நன்றாக விளக்குவோமானால்:

காற்றும் பலூனும் தனித்தனியே இருக்கும்போது புதிதாக எதுவும் நிகழாது. ஆனால் காற்று வேகமாக பலூனில் ஐக்கியமாகும்போது பிரமாண்டமாய் பிரமாண்டமாய் விரியும். 

    

ஒரு நிறுவனம் வளர்ச்சியடைகிறதென்றால் அதன் அடித்தளம் சுப்ளையர்கள் தான். மனிதனுக்கு முதுகெலும்பு அவசியம். அதுபோல் ஒரு நிறுவனம் எழுந்து நிற்ப்பதற்கு சப்ளையர்கள் அவசியம். 

இந்த போட்டியுலகில் எல்லாவித வியாபாரத்தில் விலையுத்தம்  ஒரு பக்கம் . விலையேற்றம் ஒருபக்கம் இரண்டையும் ஈடு கொடுக்கவேண்டும். அதிலும் சப்ளையர்களிடமிருந்து குறைந்த விலையில் நல்ல தரமான பொருட்கள், குறித்த நேரத்தில் டெலிவரி இவைகள் நிறுவனத்திற்கு கிடைத்தால் தான் நிறுவனம் வேண்டிய இலக்கையடையும். சப்ளையர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான உற்பத்தி பொருட்களை மாதகணக்கில் வாங்கியது போய் நாட்கணக்காய் மாறி இப்போது மணிகணக்கில் வந்து நிற்கின்றது. இந்த மணிகணக்குள் சுப்ளையகளிட மிருந்து வாங்கும் பல்வேறு  மூலப் பொருட்களை வைத்து வேகமாக சிறந்த தரத்துடன் தயாரித்து வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவேண்டிய கடமை நிறுவனத்திற்கு இருக்கின்றது. அதை அடைய வேண்டுமென்றால் கட்டாயம் சப்ளையர்களின் உதவியில்லாமல் நடக்காது.ஆகவே 

நிறுவனமும் சப்ளைகளும் கூட்டு முயற்சியின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை த்ருப்திபடுத்துவோம்.

வாழ்க சப்ளையர்கள் !


          வளர்க  நிறுவனங்கள் ! !          


      
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

No comments:

Post a Comment