பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை
( மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்ட சிறந்த கவிதைகளுள் ஒன்று.)
பாரதியே! தமிழில் சுதந்திர தாகத்தை தூண்டினாய்
பாமரன் புரிய பாட்டிலே எளிமை புகுத்தினாய்
புதுமை பெண்களை கொடுத்து புரட்சி படைத்தாய்
பார்த்தினீய கலையான நஞ்சு செந்தமிழில் நுழைந்தால்
பொறுப்பானா ? உன் வழி தமிழன் ! பொசுக்குவான் ?
தமிழா ! பார்த்தினீய களைக்கு விலையாகாதே
தமிழ் பயிரில் கலக்க நினைக்காதே.
இன்று களை ! நாளை பைந்தமிழிழை அளிக்கும் உலையாக்காதே
மறக்காதே! பஞ்ச பூதத்தையும் வெல்ல வல்லது தமிழ்!
காற்றில் கலந்து உயிர் சுவாசமாய் இயக்கும்
அக்னியில் அழியாது பிரகாசமாய் ஒளிரும்
நிலத்தில் புதையாது உலக உயிரை காக்கும்
ஆகாயத்தில் மறையாது மலையாய் பொழியும்
நீராய் கொடுத்து பயிர் களை பசுமையாக்கும்
முறத்தால் புலியை துரத்திய தமிழச்சி பரம்பரை !
இளமை நாகரீக பசப்பு வார்த்தையில் மயங்காதே
இனிய தமிழன் பண்பாட்டை விற்று விடாதே
பாரதியே ! உன் ஆயுசு நீண்டிருந்தால்
பார்தினீயக் களையை கவியால் வேரறுத்து தீயிட்டிருப்பாய்
செய்வோம் சத்தியத்தை ! துரத்துவோம் பார்தினீ யத்தை
காத்திடுவோம் தமிழை! போற்றிடுவோம் தமிழன் கலாச்சாரத்தை!
************************************************************************
No comments:
Post a Comment