Pages

Tuesday, 30 April 2013

பணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் ? - IN WHICH WAY SOME PEOPLE EARN A LOT OF MONEY ?

பணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் ?


                                
 WHICH WAY SOME PEOPLE EARN A LOT OF MONEY ?

                        

நாட்டு நடப்புகள் 



பொதுவாக இந்த போட்டி உலகத்தில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம் தான். அதுவும் திருப்தியான அளவுக்கு சம்பாதிப்பது என்பது குதிரை கொம்பு விஷயம் தான். இருந்தாலும் வெகு சிலர் மட்டும் தமக்கு திருப்திக்கும் மேல் அதாவது ஏழு பரம்பரை அளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்றால் அவர்களை நாம் பாராட்டியே தீரவேண்டும். அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது! மற்றவர்களால் எதனால் முடிவதில்லை? அதன் ரகசியம் என்ன? என்பதை நாம் பார்ப்போம்.

                           

பணம் சம்பாதிப்பவர்களின் பலம் என்னவென்றால் மக்களின் மறதி, சோம்பேறித்தனம், ஆசை  மற்றும் அவர்களின் சந்தோசத் தேவைகள். அதாவது மக்களின் மறதியை எந்தெந்த வழிகளில் போக்கலாம்? அது புத்தகமாகவோ, கணினி வழியாகவோ, பயிற்சி மூலமாக எப்படி போக்கலாம்? அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம்? என்று நன்கு திட்டமிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிப்பார்கள். அதேபோல் சோம்பேறித்தனம்! மக்களின் சோம்பேறித்தனத்தை நன்றாக பயன்படுத்தி அவர்களின் வேலைகளை பலவழிகளில் எளிமையாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது !

      
பிறகு மனிதனின் ஆசை... மனிதனின் ஆசை அளவிடமுடியாது தான். அந்த ஆசை எண்ணத்தை பயன்படுத்தி அவர்களை பலவிதங்களில் ஏமாற்றியோ அல்லது நிறைவேற்றியோ பலகோடிகளை பணம் சம்பாதிக்கின்றனர்.அதேபோல் மக்களுக்குத் தேவையான சந்தோஷம் எப்படியெல்லாம் தரலாம்? டி.வி, சினிமா, உற்சாக பானங்கள், புத்தகங்கள், ஆன்மிகம், நொறுக்குத் தீனிகள், சுற்றுலா, விளையாட்டு, அரட்டை போன்றவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பது.

                        

ஆகையால் மக்களின் பலவீனம் தான் பணம் சம்பாதிப்பதற்கு மிகவும் உதவி செய்கிறது. நாளுக்கு நாள் மக்களின் தேவைகள், எண்ணங்கள் மாறிக்கொண்டே வருகின்றது. அந்த மாற்றங்களுக்கேற்ப பணம் சம்பாதிக்க எண்ணுபவர்களும் அதற்குத் தகுந்தாற்ப்போல் மாற்றங்களை கொடுத்துக்கொண்டே வருவது தான் அவர்களின் மிகப்பெரிய பலம். அது போதுமே பணம் சம்பாதிப்பதற்கு. அதேபோல் மக்களின் எண்ணங்களை மாற்றவேண்டுமென்பதற்காக பணம் சம்பாதிப்பவர்களே பல மாற்றங்களை கொண்டு வருகின்றனர். 

   

அதற்கு உதாரணம் சிட் பண்டு, லோன்கள, புது புது முதலீடு வழிகள் (ஈமு கோழி பண்ணை போல ) ரியல் எஸ்டேட் , பங்கு சந்தை மற்றும் ஆன்-லைன் வர்த்தகம். கணினி மயமாக்கப்பட்ட மேற்கூறியவைகள்  உலக மக்களின் மற்றும் சிறு சிறு நாடுகளின் பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றது. இதன் உதவியால் உலகத்தில் சில நாடுகளில் இருக்கும் சில பணக்காரர்களிடம் தான் உலக மற்றும் நாட்டு மக்களின் பணம் சிக்கி இருக்கின்றது . பிற்காலத்தில் சில பணக்காரர்களே சில நாட்டிற்கு உதவி செய்யும் நிலைமை உண்டானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை .

 

இதன் மூலம் மேலும் ஒரு விஷயமும் தெரிந்துகொள்ளலாம். எங்கே எந்த ஒரு மனிதனாவது நான்  பங்கு சந்தை மற்றும் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் கோடிக்கனக்கில் பணம் சம்பாதித்தேன் என்று கூறமுடியுமா?அப்படியிருந்தால் எப்படி என்று மக்களுக்குத் தெரியுங்கள். ஆனால் மேற்கூறிய இரண்டின் மூலம் பணத்தை இழந்தவர்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கச் சொன்னால் லட்சம் பேருக்கு அதிகமானோர் இருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் பணம் இழந்ததை சொல்வது வெட்கப்பட்டு  சொல்வது கிடையாது. அதன் பலனாக புதுப் புது மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் அதிக ஆசைப்பட்டு அவர்களின் பணத்தை இழப்பது தொடர்கதையாகவே இருந்துவருகின்றது.

                  

இதில் என்ன கூத்து என்றால் மக்கள் பணத்தை சொல்ல்லியபடி திருப்பிக்கொடுக்காமல் ஓடி ஒளிந்து பிறகு அரசியல் துணையோடு பெரிய பணக்காரர்களாய் சிலர் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். காவலும், சட்டமும் அவர்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றது. ஆனால் பாவம் மக்கள். அவர்களிடம் இழந்த செல்வத்தை வாங்க லோ லோ என்று கால் தேய்ந்தது தான் மிச்சம். 

                  

மக்களே இதன் மூலம் சொல்லிக்கொள்வது என்னவென்றால் அதிகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு இருப்பதை இழக்காதீர்கள். உங்கள் ஆசையால் சிலர் உழைப்பில்லாமல் பணக்காரராகும் வாய்ப்பை கொடுக்காதீர்கள். இருப்பதை வைத்துக்கொண்டு திருப்பதியாக ஆயுசு முழுவதும் பிறர் தயவின்றி நிம்மதியாக வாழலாம். உங்கள் பலவீனத்தை பலமாக மாற்றிக்கொள்ளுங்கள். விழிப்போடு இருங்கள். பணம் இழப்பதை தவிருங்கள்!



நன்றி 


வணக்கம்.  

1 comment: