Wednesday, 26 September 2012

உள்விதி மனிதன் பாகம்: 5 கோடிகளில் கரையாது உனது தீய செயல்கள்-YOU CAN'T EQUALIZE BAD THINGS WITH MONEY

உள்விதி மனிதன் 
 சம மனித கொள்கை 
(EQUAL HUMAN POLICY)
பாகம்: 6 கோடி ரூபாய்களில் கரையாது 
உனது தீய செயல்கள் -
YOU CAN'T EQUALIZE BAD THINGS WITH MONEY 
  


அன்பு மனிதா! மீண்டும் நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன். எனக்கு அரிய பெரிய சக்திகள் இருக்கின்றது என்று உனக்கு தெரியும். எனது சக்தியை உனது மனம், உணர்வு, உடம்பு, உயிர் கொண்டு தான் அறிய முடியும். நான் வழங்கிய உடலைக் கொண்டு நீ மானுட ஜென்மம் எடுத்துள்ளாய். இந்த உலகில் எனது படைப்புகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வந்துள்ளாய். நீ எப்போதும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக நீ பிறக்கும்போது பலவிதத்தில் உதவி செய்வதற்காகத் தாய், தந்தையை படைத்திருக்கிறேன். நீ உனது சொந்தக் காலில் நிற்கும்வரை நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து உன்னை பலரின் மூலமாக காத்துக் கொண்டிருக்கிறேன். புனிதமான மனித ஜென்மம் பெற்ற நீ மனிதர்களுக்கு உன்னால் முடிந்த உதவிகளை செய்தால் எனது பாரம் குறையும். அதைக்கண்டு நிச்சயம் மகிழ்ச்சியும் சந்தோசமும் கொள்வேன்.

இனிய மனிதா! போலி வேஷம் போட்டு வெறும் சொற்களாலும், கண்கட்டு வித்தைகளையும், அழகான அலங்கார வார்த்தைகளால் மயக்கி மக்களை ஆட்கொண்டு அவர்களை இஷ்டப்படி ஆட்டி வைப்பவர்களிடம் எச்சரிக்கையாய் நடந்துகொள். அந்த சமயத்தில் நான் சொல்லும் படி நட. வெறும் பேச்சினால் உன் கஷ்டங்கள் நீங்காது. அதை நன்றாக புரிந்து கொள். செயல் இருக்கும் மனிதர்களை நம்பு. நான் கோடி ரூபாய் தருகிறேன் என்று உனக்கு மகிழ்ச்சி தரும்  வெற்று வார்த்தைகள்  சொல்பவர்களைக் காட்டிலும் கையில் பத்து ரூபாய் தருபவர்களை நம்புவாயாக. அப்படி பொருட்செலவத்தை தருகிறேன் என்று சொல்லி உன்னிடம் பணம் பறிப்பவர்களிடம் அகப்பட்டுகொள்ளாதே! அவர்கள் கொசு எப்படி உனது இரத்தத்தை உறிஞ்சுவது போல உனது செல்வத்தையும் உறிஞ்சி அவர்களுக்கு உன்னை அடிமையாக்கிவிடுவார்கள். பிறகு நீ நினைத்தாலும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. சிலந்தி வலையில் அகப்பட பூச்சிபோல் ஆகிவிடுவாய் ஜாக்கிரதை!


இரக்க மனிதா! ஒருவர் உன்னை மிரட்டியோ, பயமுறுத்தியோ, துன்புறுத்தியோ, ஆசைகாட்டியோ பணம் மற்றும் செல்வத்தை பறித்தால் அல்லது உன்னிடம் கேட்டால் அவர்கள் நல்ல எண்ணங்கள் உடையவர்கள் இல்லை. அவர்களிடமிருந்து விடுபட்டு நான் காட்டும் மக்களிடம் நட்புகொள். அவர்கள் நீ கொடுப்பதை மனமுவந்து ஏற்பவர்கள், அவர்களால் உனக்கு பல நன்மைகள் உண்டாகும். பணத்தால் நீ செய்த தீவினைகளை அகற்ற முடியாது. ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து சாதாரண புன்னை உடனே குணமாக முடியுமா? அது போலதத்தான் உனது செயலும் பணத்தை பார்த்து பலன் தராது.

பிரிய மனிதா! உனக்கு துன்பம் வராதபடி உன்னைக் காப்பது எனது முதற்கடமை. அப்படி மீறி வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். கண்ணெதிரே துன்பம் வந்தால் அதை போக்குவதற்கும், சமாளிப்பதற்கும் வழியை உனக்கு சொல்கிறேன். அப்போது அதை நுண்ணிப்பாக கேட்டு எச்சரிக்கையாய் நட. நீ வளர வளர உனக்கு அறிவு, திறமை, சமயோசித புத்தி, ஆற்றல் ஆகியவற்றை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். அதை நான் சொல்லும்படி முறையாக பயன்படுத்தினால் உனக்கு எந்த கெடுதலும் வராது.

 அன்பு மனிதா!


நல்ல எண்ணங்கள் கொள்!

நன்மைகளை செய்!


கோடி இன்பம் பெறுவாய்! 

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

No comments:

Post a comment