Tuesday, 1 January 2013

உள்விதி மனிதன் பாகம்: 38 நீ நினைப்பதை நடக்கச் செய்யும் உள்விதி மனிதன் - A PRAY FOR AS YOU WISH

உள்விதி மனிதன்  பாகம்: 38 நீ நினைப்பதை நடக்கச் செய்யும் உள்விதி  மனிதன் கூறும் பிராத்தனை 


A PRAY! TO GET AS YOU WISH 
சமமனிதக் கொள்கை 


மதுரை கங்காதரன் 


இனிமையான மனிதா! மீண்டும் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். நான் உனக்குக் கொடுத்திருக்கும் அற்புதமான மனிதப் பிறவி எங்கிருந்து வந்தது தெரியுமா? ஒரு அணுவிலிருந்து வந்தது என்கிற உண்மையை விஞ்ஞானம் ஆதாரப்பூர்வமாக நிருபித்துள்ளது. இந்த தருணத்தில் ஒன்றை மட்டும் எண்ணிப் பார். உனது பிறப்பு ஒரு 'அணு ' வாகவே இருந்திருந்தால் அதாவது பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஏதாவது ஒரு நுண்ணுயூயிரி போல் படைக்கப்பட்டிருந்தால் என்னுடைய அதிசய படைப்புகளை யார் அனுபவிப்பது? யார் இந்த உலகத்தைக் காப்பது? அல்லது இந்த உலகம் என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்.

பாசமுள்ள மனிதா! இவ்வளவு பரந்த பெரிய உலகத்தில் விதவிதமான படைப்புகளை விதவிதமான வடிவத்தில், பலதரப்பட்ட நிறத்தில், பலவிதமான அசைவுகளில், எண்ணற்றச் செயல்களில், எல்லாவித சூழ்நிலைகளில் வாழும் பல ஜீவராசிகளைப் படைத்திருக்கிறேன். படைத்துக்கொண்டும் இருக்கிறேன். இந்த பிரபஞ்சத்தில் எங்கும் இல்லாத அதிசயமானதை இந்த உலகில் உனக்காக நிகழ்த்திக் கொண்டு வருகிறேன். இந்த ஜீவ அதிசயம் நீ வாழும் இந்த உலகில் தவிர இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களிலோ, மற்ற கோள்களிலோ இன்னும் வேறு எந்த இடத்திலோ, மூலைமுடுக்குகளிலோ இருக்க முடியாது. அப்படி உருவாக்கவும் முடியாது. ஒருவேளை அவ்வாறு யாராவது சொல்வார்களேயானால் அதில் உண்மை இருக்காது. வெறும் கற்பனை மற்றும் ஊகத்தில் அடிப்படையில் தான் இருக்கும். ஒரு வகையில் அது மக்களை ஏமாற்றும் செயலும் ஆகும். அதை நம்பவே நம்பாதே!

இரக்கமுள்ள மனிதா! நான் உன்னை படைத்திருப்பதன் மகிமை விளங்கிவிட்டதா? அதாவது நானோ அல்லது என்னைப்போல மனமுள்ளவர்களோ உன்னிடமிருந்து வாங்குவதைக் காட்டிலும் உனக்கு பன்மடங்கு கொடுப்பதில் தான் பேரானந்தம் இருக்கும். அதாவது உன்னிடத்தில் தட்சணையாக, காணிக்கையாக பணம், நகை கேட்கும் எவரும் ஆசாமிகள் தான். அவர்களிடத்தில் உன்னிடம் இருக்கும் சிறு செல்வத்தை கொடுத்து ஏமாந்துவிடாதே. மென்மையான மனிதா! ஒரு 'செல்' ஆன்ம உயிரிலிருந்து இந்த உலகத்தை அனுபவிக்கத் தக்க ஜீவ ஓட்டமுடைய மனிதனாக மாற்றியிருக்கிறேனே அந்த வித்தையை நீ கோடிக்கணக்கான வருடங்கள் ஆராய்ச்சி செய்தாலும் அதன் சூட்சமம், ஜீவ ரகசியம் உனக்கு எட்டாது. உனக்கு தெரியவும் வராது. உனக்கு வெளியே கோடிக்கணக்கான கிலோமீட்டருக்கப்பால் இருக்கும் கோள்களையோ, நட்சத்திரத்தையோ உன்னால் காணமுடியும். ஆனால் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி  மனிதனை காண்பதற்கு அல்லது  இந்த ஜீவ ஓட்டத்தின் ரகசியத்தை அறிவதற்கு உன்னால் முடியவே முடியாது. ஆனால் அதற்கும் வழி இருக்கின்றது.மதிப்புக்குரிய மனிதா! இதோ எனது ஜீவ ரகசியம் அறிய உதவும் வழி. மனிதா, இந்த மனிதன் எப்போது மண், பொன், பொருள், பணம் மீது மோகம் கூடியதோ அல்லது  அவைகளுக்கு நீ எப்போது அடிமையானாயோ அன்றிலிருந்து நான் உன்னடமிருந்து விலக ஆரம்பித்து இப்போது கண்காணாப் பொருள் போல ஆகிவிட்டேன். உனது சுயநலம் அதிகமாகி பொதுநலம் குறைந்துவிட்டது. அதாவது சுயநலம்  எப்போது இந்த பூமியிலிருந்து விடை பெறுகின்றதோ அன்றிலிருந்து நான் உனது கண்ணுக்குத் தெரிவேன். நீ நினைத்த படி அனைத்தும் நடக்கும். உனது ஆயுளும் கூடும். எனது படைப்புகளத்தனையும் நீ அனுபவிக்கலாம். அதுவரை என்னை காட்டுவதாக யார் சொன்னாலும் அது உண்மை இல்லை. மரியாதையுள்ள மனிதா! நான் சுயநலம் கருதாது உனக்காக அனைத்தும் கொடுத்தது போல் நீயும் சுயநலம் மனதில் கொள்ளாமல் மற்றவர்களுக்கு நல்லவழியில் வாரி வாரி கொடுத்து காக்கவேண்டும் என்று தான் உனக்குள் புகுந்துகொண்டு நான் ஆன்ம ஓட்டமாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன். இந்த பிரார்த்தனையை  தினமும் செய்தால் 
நன்மைகள் உண்டாகும் 


பிரியமுள்ள மனிதா! தினமும் என்னை கவனி. எனது ஜீவ ஓட்டத்தை உணர்ந்து கொள். ஒருவேளை நீ என்னை வேண்டி பிரார்த்தனை செய்ய பிரியப்பட்டால் அல்லது எனக்கு நன்றிக்கடன் செலுத்த ஆசைப்பட்டால் இவ்வாறு பிரார்த்தனை செய். உனக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்தும், உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டும் இருப்பேன்.


பிரார்த்தனை வரிகள் 

எனக்குள் இருக்கும் உள் மனிதனே! எனக்கு எவ்வித பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள். அப்படி வந்தாலும் அதை சுமூகமாகத் தீர்க்கும் அறிவையும், பலத்தையும் எனக்குக் கொடு. எல்லோருக்கும் நன்மை செய்யும் செயல்களைச் செய்ய என்னுடன் துணையாய் இரு. பலருடைய வாழ்வைக் காப்பாற்றும் வல்லமையும், பாக்கியமும் கொடு. அனைவருக்கும் உடல் ஆரோக்கியமான உடல் நலத்தைக் காத்திட எனக்கு நல்லவழி காட்டு. வறுமையால் வாடுபவர்களுக்கு பசிக்கு உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் கொடுப்பதற்கு அருள் செய். ஓயாமல் எனது ஜீவனுக்காக என்னுள் துடித்துக்கொண்டிருக்கும் இதயமே! ஒவ்வொரு வினாடியும் எனது நலத்திற்க்காக பாடுபடும் இந்த ஜீவ உடம்பே! நீ உள்ளே இருந்துகொண்டு எனக்கு அனைவருக்கும் உதவிகள் செய்யும் ஆற்றலும், துணிவும் கொடு. தீமைகளை தீயிலிட்டுப் பொசுக்கி நன்மைகளைப் பெருக்கி புதிய உலகம் செய்வதற்கு என்னைப்  போல அனைவருக்கும் வழிகாட்டு. தீயவர்களை அடையாளம் கண்டு அவர்களை நல்வழிபடுத்தி, அவர்களுக்குள்ளே இருக்கும் உயிர் ஓட்டத்திற்குப் புத்துணர்ச்சி கொடுப்பதோடு புது வாழ்வும் கொடு. அனைவரும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எனக்கு எப்போதும் துணைபுரிவாயாக! நன்றி.நன்மை தரும் மனிதா! இந்த உலகில் எத்தனையோ நல்ல புத்தகங்கள், பல நல்ல விசயங்கள் பலவித வடிவில் நிறைந்துள்ளன. அனைத்தையும் படிப்பதற்கு உனது ஆயுள் போதாது. அப்படியிருந்தும் ஏன் அனைவரும் நல்லவர்களாக இருக்கவில்லை. ஏனென்றால் கெட்டவர்களால் மட்டுமே மக்களுக்குப் பிடித்தாற்போல் பலவித வேசங்களைப் போட்டுக்கொண்டு மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடுவார். அதற்குக் கவர்ச்சிகள் அதிகம். அதனால் அதில் மயங்கி ஏமாறுபவர்கள் இருக்கிறார்கள். ஏன்? அழிபவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் கெட்ட செயல்கள் தாங்களாகவே ஈடுபடுவது கிடையாது. அப்படி ஈடுபட்டாலும் அவருக்கு பலன் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் அதிக பலன் தரும் தீய செயல்கள், அதை செய்பவருக்கு சொற்பமான பலனையும் அதை ஏவுபவர்களுக்கு கிட்டத்தட்ட முழுமையான பலனையும் தரும். ஏனென்றால் அதை ஏவுபவர்கள் பெரிய பதவியில், அந்தஸ்தில், பணபலத்தில் அதிகம் இருப்பவர்களாகவே இருப்பார்கள். மாட்டிக்கொண்டாலும் அவர்களுக்கு பழிகள் மற்றும் தண்டனைகளிருந்து தப்பித்துக்கொள்ள வழிகள் தெரியும். தன்னம்பிக்கை கொண்ட மனிதா! உனக்குப் பொதுவாக யார் என்ன நல்லது சொன்னாலும், எத்தகைய மாமனிதர்கள் தன் இனிய அன்பான வழியில் நல்லவற்றை உன் மண்டையில் ஏற்ற நினைத்தாலும், பல புத்தகங்களைப் படித்துக் காட்டினாலும், பலவாறு விசயங்களைத் தெரிந்து அவைகளைச் சொன்னாலும் அவைகள் எல்லாம் உனக்குள் நுழைந்துவிடாது. செயலும் செய்து விடாது. அதாவது மனிதா! எந்த ஒரு வேலையும் அல்லது செயலும் நீ மனது வைத்தால் தான் உன்னால் செய்யமுடியும். அதுவும் சாதாரணமாக ஒரு முறை நினைத்தால் உன்னால் அச்செயல் செய்ய முடியாது. முதலில் அச்செயல் செய்வதற்கு உனது மனம் ஆசை படவேண்டும். பிறகு ஏற்றுக்கொள்ள வேண்டும். செய்வதற்கு ஆர்வம் வேண்டும். அதற்கு அறிவு, ஆற்றல், துணிவு ஏற்படவேண்டும். அதன் பிறகு தன்னம்பிக்கையும் , உந்து சக்தியும் இருந்தால் அச்செயல் வெற்றி பெறும். அப்படிச் செய்யும் செயல் பலருக்கு நன்மை தரும் செயலாக இருப்பின் அனைவருக்கும் நலம்.ஆற்றல் கொண்ட மனிதா! அப்படி இருக்கும்போது வெறும் பணத்திற்காகவும், பேராசை, சுயநலம் மற்றும் பிறரை பழிவாங்குவதற்கு எந்த ஒரு செயலையும் செய்துவிடாமல் உன் மனதைப் பார்த்துக் கொள். ஒரு சிலர் உனது நல்ல எண்ணகளுக்கு தீய பாடம் சொல்லுவார்களேயானால் அவர்களிடமிருந்து விலக்கிக்கொள். அல்லது துணிச்சலோடு அவர்களை எதிர்கொண்டு திருத்துவதற்குப் போராடு. உனது வெற்றிக்கு இந்த உள்விதி மனிதன் எப்போதும் துணையிருப்பான்.சக்தி கொண்ட மனிதா! எந்த ஒரு செயலும் உன்னால் செய்து முடிக்க இயலும். அத்தகைய வல்லமை உன்னுள் இருக்கின்றது. அதுவும் இந்த உள்விதி மனிதனின் ஆன்ம ஓட்ட செயலில். அதை நல்ல முறையில் பலருக்கு நன்மை தரும் விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அதை உனக்குள் இருந்துகொண்டு உன்னை நல்லவழியில் நடத்தி மற்றவர்களுக்கு நீ ஒரு முன்னுதாரணமாக திகழ வைக்கவே உனக்குள் எனது ஜீவ ஓட்டம் ஓடுகின்றது. எனது ஆற்றல் காட்டும் நேரம் வந்துவிட்டது. நீ நினைக்கும் காரியம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது. அதற்கு நல்லதை செய்! அதுவும் இன்றே செய்.
உள்விதி மனிதனின் ஆன்ம ஓட்டம் இன்னும் தொடரும்.No comments:

Post a comment