Tuesday, 11 September 2012

தங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது - INVESTMENT IN THE GOLD IS A HIGHLY DANGEROUS ONE.
தங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது -

INVESTMENT IN THE GOLD IS A HIGHLY 
DANGEROUS ONE.

மக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி 


யாணையை எப்போது கையெடுத்து கும்பிடுவார்கள். அது அமைதியாக அசைந்து அசைந்து மெதுவாக யாணைப்பாகனுடன் நடந்து வரும்போது. அதே யாணை மதம் பிடித்து பாகனுக்கு அடங்காமல் போனால், சுற்றியிருப்பவர்களை நல்லவர் கெட்டவர் என்று யாரையும் பார்க்காது கிடைத்தவர்களை துவசம் செய்து  உண்டு இல்லை என்று ஆக்கிவிடுமல்லவா! அந்த நிலைமை தான் தங்க முதலீடுக்கு வந்துள்ளது.


தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3000 க்கும் தாண்டிவிட்டது. இன்னும் தாண்டும்போலத் தெரிகின்றது. அதாவது தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 600 முதல் 700,800 வரை மக்கள் நன்றாகவே வாங்கி, விற்று வந்தனர். ஆனால் விலை ஏற ஏற அதன் மரியாதை இழந்து சற்று மதம் பிடித்து விட்டதாகவே தோன்றுகின்றது. எல்லாவற்றிக்கும் ஒரு அளவுதான். அளவு மிஞ்சினால் அதிக ஆபத்து தானே! ஏறிக்கொண்டிருக்கும் தங்கம் த்டீரென்று கிராம் ஒன்றிற்கு ரூபாய் 1000 க்கு கீழ் வந்தாலும் ஆட்சேபணை இல்லை. அதற்க்கான் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.


தங்கம் எப்போது ஊக வணிகத்தில் (ஆன் - லைன் ) நுழையப்போகின்றது என்கிற பேச்சுகள் தீவிரமாக அடிப்படுமுன்னே வல்லரசு நாடுகள், பெரிய நிறுவனங்கள், வங்கிகள், தனியார் துறைகள் தங்களுடைய அனைத்து முதலீடும் தங்கத்தில் போட்டுவிட்டனர். பல நிறுவனங்கள் உற்பத்தியில் கூட கவனம் செலுத்தாது தங்கத்தில் முதலீடு செய்தனை. (உதாரணம் - 10.9.12 நிலவரப்படி உற்பத்தி பூஜ்யம் நிலைக்கு வந்துவிட்டது) அப்போது அவர்கள் தங்கம் வாங்கிய விலை அதிகபட்சமாக கிராம் ஒன்றுக்கு ரூபாய் 600 தான் இருக்கும். அதில் முதலீடு செய்த அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் தங்கம் எல்லோருமே வாங்குவார்கள். அதுவும் ஒவ்வொரு விஷேசத்திற்க்கும் , பண்டிகை நாட்களிலும், ஆடி மாதம், அட்சய தீர்த்திகை போன்ற நாட்களின் மக்கள் கட்டாயம் தங்கம் வாங்குவார்கள். ஆகையால் தங்கம் விலை பலமடங்கு உயருமென்று. அதாவது ஊக வணிகம் கிட்டத்தட்ட ஏலம் கேட்பது போல. அவர்கள் நினைத்ததுபோல் பன்மடங்கு உயர்ந்தது. அது என்ன அழுகும் பொருளா? இல்லையே!

இது தான் நல்ல சமயமென்று தங்க வியாபாரம் செய்பவர்கள் அதிக விலைக்கு விற்க பார்கின்றனர். அதுவும் எவ்வளவு சீக்கிரத்தில் விற்கிரோமோ அவ்வளவு சீக்கிரத்தில் விற்றுவிடத் துடிக்கிறார்கள். அதனால் வங்கிகளும் ஏன் தபால் துறையிலும் இன்னும் பல துறையின் மூலம்  தங்கத்தை விற்று வருகின்றனர். இங்கு ஒரு கேள்வி. தங்கம் பாதுகாப்பானது. அதன் முதலீடு பன்மடங்கு பெருகும் என்பவர்கள் ஏன் போட்டி போட்டுக்கொண்டு விற்கின்றனர். பெரிய நிறுவனங்கள் மக்களிடமிருந்து முன்புபோல அவ்வளவு எளிதாக வாங்குவதில்லை என்பது வேறு விஷயம். அவர்களித்தில் வாங்கிய தங்கங்களே மதிப்பில்  30% முதல் 40% வரை குறைவாகவே வாங்குகின்றனர். 

மக்களிடம் தங்கம் அதிகபட்சமாக 20% இருந்தால் அதிகம் தான். மீதம் 80% பெரிய கையில் தான் இருக்கின்றன. இந்த விலையை கண்டு தங்கம் வைத்திருப்பவர்கள், வாங்கியவர்கள் மிகவும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அந்த மகிழ்ச்சியை ஒரு காகிதத்தில் எழுதி மகிழ்ச்சியடையலாம். பத்திரிகை , மீடியாக்கள் , ஆலோசகர்கள் எல்லாம் எல்லாவற்றையும் மிகைப் படுத்தி 'ஆஹா ஓஹோ ' என்று புகழ்ந்து தள்ளுவார்கள். ஏனென்றால் அவர்கள் பரபரப்பிற்கு பெயர் போனவர்கள். உண்மை நிலவரத்தை எப்போதும் சொன்னது கிடையாது. விலை அதல பாதாளத்தில் விழும்போது 'கடும் வீழ்ச்சி ' என்று தான் எழுதுவார்கள். ஆமாம், நேற்று நீங்கள் தான் நல்ல முதலீடு என்று சொன்னீர்களே! இப்போது இப்படியாகிவிட்டதே! என்று நீங்கள் தான் புலம்ப வேண்டும். ஏனெனில் நஷ்டம் உங்களுக்குத்தானே. சொன்னவர்கள் எப்போதும் ஜாக்கிரதையாக முதலீடு செய்யாமல் தங்கள் பணத்தை பத்திரமாக வைத்திருப்பார்கள்.

இப்போதுள்ள தங்கம் விலை நல்ல விலை. ஆகவே எப்பாடுபட்டாவது உங்களிடம் இருக்கும் தங்கத்தை ஒரு 50% விற்று பணமாக்கப் பாருங்கள். முடியுமா ? முடியவே முடியாது. சரி ஒரு 10% மாவது. முடியாது. அப்படி நீங்கள் விற்க நினைத்தால் உங்கள் முதலீட்டில் மொத்த மதிப்பில்  50% தேறுவது சந்தேகம் தான். அப்படியென்றால் உங்களது 50% முதலீடு நாமம் தான்.

இப்போதே ஒரு சிலர் தாங்கள் விற்கும் தங்கத்தை வாங்குவதற்கு ஆளில்லேயே என்று புலம்புகின்றனர்.! ஒரே நேரத்தில் அனைவரும் விற்க நேர்ந்தால் யார் தான் அதற்கு பணம் தருவார்கள். அப்போது கிராம் ஒன்றுக்கு ரூபாய் 1000 கூட போகாது. அந்த சூழ்நிலையில் உங்களை காப்பாற்ற யார் வருவார்கள்? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!

மேலும் தங்கம் விற்க முடியாமல் போனதால் பணத்தேவைக்கு அடகு வைத்து கடன்காரனாகவும், முதலீட்டில் மொத்த மதிப்பில்  60% தான் கொடுக்கிறார்கள். (அவ்வளவு தான் அதன் மதிப்பு). மேலும் அதற்கு நீங்கள் வட்டியும் கட்டவேண்டிய நிலைமை தள்ளிவிடுகின்றது. ஆக பணம் தங்கமாக மாற்றிவிட்டால் , மீண்டும் அதே அளவு பணம் கிடைப்பது குதிரைக் கொம்புதான்.

நிகழ்ந்த உதாரணங்கள் இதோ :

கச்சா எண்ணெய் :


கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றிற்கு 30 US$ ஆக இருந்தபோது ஊக வணிகத்தில் நுழைந்தது. அது அடைந்த உச்சி  விலை  140 US$ வரை சென்றது. அதில் போட்டால் லாபம் என்று உசுப்பேத்த பெரிய வங்கிகள் , நிறுவனங்கள் அதில் முதலீடு செய்தன. ஆனால் ஒரு கட்டத்தில் 'டமால் ' என்று விழுந்த அடி 150 ஆண்டுகளாக நல்ல நிலையில் இயங்கி வந்த வங்கிகள் இந்த சரிவினால் இன்றும் எழுந்திருக்க முடியாமல் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.  இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கச்சா எண்ணெய் பலருக்கும் அன்றாடம் அதாவது பெட்ரோலியப் பொருட்கள் தயாரிப்பது, மின்சாரம், வாகனம் போன்றவற்றிற்கு அவசியம் தேவை படுவது. அதற்கே இந்த கதி. இந்த வீழ்ச்சி மேலை நாடுகளில் அதிகமாக நடந்தது. அதன் தாக்கம் இங்கு தெரியவில்லை. இன்று ஓரளவு கூடுகிறது. குறைகிறது. இதில் பொது மக்களுக்கு  குறைந்தளவே மறைமுகமாகத் தான் பாதிப்பு ஏற்ப்பட்டது.

ஐ.டி துறை:


அஹோ ஓஹோ என்று பங்கு சந்தையை உச்சத்திற்கு கொண்டுபோனது. பங்கு சந்தை என்னவென்று தெரியா எல்லோரும் நுழைந்து முதலீடு செய்தனர். ஒருகட்டத்தில் அதற்கு நிகழ்ந்த  'மரண அடி ' யானது சில மணிநேரம் பங்கு சந்தை  வர்த்தகம் நிறுத்தும் நிலைமை உண்டாக்கிவிட்டது. பல பங்குளை அடி மாட்டுக்கு விலையில் கூட வாங்குவதற்கு ஆளில்லாமல் போனது. இதில் உயர் நடுத்தர வர்க்கத்தினர் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

மியுசுவல் பண்டு : 

இதற்கு விளக்கம் தேவையில்லை. அடிபட்டவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அதற்குள்ள மதிப்பு, மரியாதை இழந்து இதன் வியாபாரமே படுத்துவிட்டது.

ரியல் எஸ்டேட் :


ஓஹோ என்று இருந்த இந்த துறை பல இடங்களில் இப்போது அதன் முதலீடு தூங்கிக்கொண்டியிருக்கின்றது. வாங்குவதற்கு ஆளில்லை. பலர் பில்ட் அப் செய்து தலைகீழாக நின்று பார்கிறார்கள். ஒன்றும் நடக்கவில்லை. லோன் வாங்கி கட்டியவர்கள் அதை திருப்பி கட்டுவதற்கு திண்டாடி வருகின்றனர். இதிலும் பல மேலை நாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாங்கிய அடி இன்னும் ஆறவில்லை. வீடு அனைவருக்கும் தேவையுள்ள ஒன்று. அதற்கே இந்த நிலைமை. இதில் நடுத்தர வர்கத்தினர்களுக்கு கஷ்டம் தான்.

தங்க முதலீடு:

தங்கம் என்ன அவ்வளவு முக்கியமான மனித வாழ்க்கைக்குத் தேவையா? அது இல்லாமல் உயிர் வாழ முடியாதா? அதை உணவாக சாப்பிட முடியுமா? அப்படியிருக்கும்போது ஒருகட்டத்தில் அதன் தேவை மற்றும் வியாபாரம் வெகுவாக குறையப் போகிறது. இதில் எல்லா வர்க்கத்தினரும் கட்டாயம் பாதிப்புக்குள்ளாவார்கள். தங்கம் முதலீடு ஒன்றுக்கு பத்து தடவை யோசித்து செயல்படுங்கள். தேவைக்கு அதிகமாக பணமுள்ளவர்கள் வாங்கலாம்.


நீங்கள் தங்கத்தை கொடுத்து பலசரக்கு சாமான்கள் வாங்க முடியுமா? ஸ்கூல் பீஸ் கட்டமுடியுமா? வங்கியில் கொடுத்து லோன் அடைக்க முடியுமா? பின் எதற்கு  இந்த விலையேற்றம்! மக்களின் பேராசை தான்.

உங்களுக்கு 'மைதாஸ் ' கதை தெரியும். அவன் கேட்ட வரம் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமென்ற பேராசை. கடைசியில் அவன் உயிர் வாழ சாப்பாடு கூட சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு மீண்டும் பழைய வாழ்க்கை வந்துவிடுவான். அது போல எல்லோரும் தங்கம் தங்கம் என்று முதலீடு செய்தவர்கள் பணமாக மாற்ற நினைக்கும்போது எல்லோரிடத்திலும் தங்கம் இருக்கும். பணமிருக்காது. நிஜ தங்கத்திற்கு இந்த சோதனை என்றால் 'பேப்பர் தங்கம் ' சொல்லவா வேண்டும். அவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

ஆக மக்களே உங்கள் பணத்தை தங்கமாக மாற்றி கஷ்டப்படுவதற்கு பதிலாக அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளில் நிரந்தர வைப்பில் போடுங்கள். உங்கள் முதலீடு கண்டிப்பாக வளரும். பயம் என்றுமில்லை. லோன் கூட குறைந்த வட்டியில் உடனே கிடைக்கும்.

தங்க முதலீடா? சிந்திப்பீர்! தகுந்தபடி செயல் படுவீர். கடைசியாக பணத்திற்கு என்றும் எப்போதுமுள்ள மரியாதை தான்! அதை யாராலும் அழிக்க முடியாது.

நன்றி !

வணக்கம்.!!       
  

1 comment:

  1. Very informative...should be published in news paper.. " :)

    ReplyDelete