நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்
வாழ்கையில் நிம்மதிக்கு
நிம்மதி தேவையா ? இன்றே சேமியுங்கள் !
வாழ்கையில் நிம்மதிக்கு
நிம்மதி தேவையா ? இன்றே சேமியுங்கள் !
நமது வாழ்கையில் கடைசி வரையில் தேவைபடுவது ஆரோக்கியம் தரும் நல்ல உணவு , சுத்தமான உடை, சுகாதாரமான வாழுமிடம். இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் வாழ்க்கை நரகமாகி,கடைசி வரையில் நாம் நிம்மதியை தேடி அலைந்துகொண்டே இருக்க வேண்டியது தான். இந்த மூன்றும் நமக்கு வேண்டுமென்றால் கட்டாயம் பணம் வேண்டும். இன்றைய உலகில் உன் கையில் பணம் இல்லை என்றால் நீ தனி மனிதன் தான். சீக்கரமே பித்து பிடித்தவன் போல் ஆகிவிடுவாய்.ஏன், உன் நிழலும் உன்னை மதிக்காது. இங்கு நிழல் என்பது உன்னுடன் கூட இருப்பவர்கள்.அதாவது அம்மா அப்பா, பெண்டாட்டி பிள்ளைகள் ஆவார்கள்.
அதேபோல் வாழ்க்கை முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது குடும்ப உறுப்பினர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும் கடமை, ஒருவேளை வேலை இல்லாமல் இருந்தால் அப்போது சமாளிக்கும் திறமை மற்றும் பண பலம் , தனக்கோ அல்லது தன்னை சேர்ந்தவர்கள் நோய்வாய்பட்டால் அதை எதிர் கொள்ளும் தைரியம்,தனக்கோ அல்லது தன்னுடன் இருப்பவர்கள் மரணம் அடைந்தால் அதனை எதிர்கொள்ளும் மனோ தைரியம் போன்றவை. இந்த பணம் பல வழிகளில் நிறைவு செய்கிறது.
நாம் அனைவரும் பணத்தை ஏதோ பொருள்கள் வாங்குவதற்கும்,கேளிக்கைகளில் ஈடு படுவதற்கும் தான் உபயோகமாய் இருக்கின்றது என்கிற கண்ணோட்டத்தில் தான் நாம் பார்க்கிறோம். அந்த பணத்தை ஒரு விதையாய் பாருங்கள். உதாரணமாக விதை நெல்லின் மகிமை உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதாவது ஒரு மூட்டை விதை நெல்லை வைத்து ஒராயிரம் மூட்டை நெல்லை நாம் பெறலாம். அதற்கு தேவை விளைநிலம், விதை நெல், பக்குவமாக பராமரிப்பு, சரியான நேரத்தில் அறுவடை செய்வது. இவைகளே போதுமானது .
அதேபோல் பணத்தை அறுவடை செய்ய சிறிய முதலீடு, பாதுகாப்பும், வளர்ச்சியையும் தரும் திட்டம் மற்றும் இடம் (நிறுவனம் ), முதிர்வு காலம் வரை பொறுமை. பிறகு அந்த முதலீட்டை மீண்டும் முதலீடு செய்வது.இப்படி கடைசி வரையில் பின்பற்றினால் உங்களின் இந்த சிறிய முதலீடு உங்கள் வாழ்கையில் நிம்மதி பெற்று தரும் என்பதில் சிறிது கூட சந்தேகம் கொள்ள வேண்டாம்.
இன்றே சேமிப்பீர் !
நிம்மதி அடைவீர் !
******************************************************
தொடரும் ...
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
No comments:
Post a Comment