Tuesday, 5 February 2013

PEOPLE'S LIFE STYLE CHANGES AS TV SERIAL - சினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை

சினிமா மாறி சீரியலாக மாறும்
 இன்றைய மக்கள் வாழ்க்கை
PEOPLE'S LIFE STYLE CHANGES AS TV SERIAL
அனுபவப் பொன்வரிகள் 
     
மதுரை கங்காதரன் 
                     


நம்மைச் சுற்றிலும் தினம் தினம் மாற்றங்கள் பல நிகழ்ந்து வருகின்றது. எல்லாவித மாற்றங்களும் மக்களுக்கு 100% நன்மை தருகிறது என்று சொல்லிவிட முடியாது.  சில மாற்றங்கள் நன்மையை  விட தீமை அதிகமாக இருக்கின்றது. சில மாற்றங்கள் ஆரம்பத்தில் சில நன்மைகள் தந்தாலும் போகப் போக அதன் தாக்கம் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கின்றது. அதன்படி பார்க்கின்ற போது மக்களுக்கு சினிமா மோகம் குறைந்து டி.வி சீரியல் பார்ப்பதை விரும்புகின்றனர்.


            

நாள் தவறாமல் நேரம் தவறாமல் ஒளிபாப்பாகும் சீரியலை பார்க்கும் மக்கள் பெருகிக்கொண்டே வருகின்றனர். அதை விரும்புவதற்கான காரணங்கள் - தினமும் திடீர் திடீர் திருப்பங்கள், உண்மைக்கு மாறான நிகழ்வுகள், பண்பாடு, கலாச்சாரம் மறக்க வைக்கும் காட்சிகள், குழப்பமான, குழப்பத்தை உருவாக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள், முடிந்து விடும் என்று நினைக்கின்ற போது முடியாமல் போகும் சீரியல்கள், முடியாது என்று நினைக்கின்றபோது திடீரென்று முடிந்துவிடும் பல சீரியல்கள், இன்னும் சில சீரியல்கள் நின்றும் விடுவதும், எல்லா சீரியல்களிலும் 'சஸ்பென்ஸ் ' சோடு 'தொடரும்' என்று முடிவதும், புது புது பிரச்சனைகள், புது புது கிரிமினல் காரியங்கள், புது புது ஏமாற்று வேலைகள், ஏமாற்றங்கள், அழுகைகள், புலம்பல்கள், கெடுதல் ஒன்றே குறியாய் நகரும் தொடர்கள். குறுக்கு வழிகள், கவர்ச்சிகள், பெண்களை பெண்களே மட்டம் தட்டும் நிகழ்வுகள் இன்னும் பலவற்றைச் சொல்லலாம்..

  

கண் கட்டு வித்தை காட்டுபவன் போல அவர்களுடைய கண்களை தினமும் கட்டிபோட்டு நிஜ வாழ்க்கையினை மறக்கச் செய்து நிம்மதியையும், சந்தோசத்தையும் சீரியலைப் போல் தொலைத்து விட்டு நடைபிணமாய் மாறிவிட்டனர் என்றே தோன்றுகின்றது. அதனால் தான் என்னவோ நாட்டில் நடக்கும் அன்றாட பிரச்சனைகள் அவர்களுக்கு எட்டாமல் போய்விடுகின்றது. தீவிரவாதம், ஊழல் அரசியல், லஞ்ச அதிகாரிகள், நிதிநிறுவன ஏமாற்றுகள், கொலை, கொள்ளை போன்றவைகள் ஒருபக்கமும் 

 

தினமும் விலைவாசி ஏற்றங்கள், கொள்கை மாற்றங்கள், புது புது சட்டங்கள், அரசியல் மாற்றங்கள், வாய்ச்சவுடால் வாக்குறுதிகள், விளம்பர அரசியல்கள், போலி கண்ணீர்கள், கலவரங்கள், வேலை நிறுத்தம், கதவடைப்பு, அரசுத் தேர்வில் குளறுபடி, சில அரசுத் துறைகள் மூடல், அரசு தடால் புடால் செலவுகள், இலவசங்கள், கண்துடைப்பு வேலைத் திட்டங்கள், போலியான வளர்ச்சி தகவல்கள், மக்களை அச்சப்படுத்தும் வதந்திகள், தற்ப்பெருமைகளை பறைச்சாற்றும் ஆளுக்காள் வைத்திருக்கும் மீடியாக்கள். மக்கள் நிலனில் அக்கறையில்லாமல் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் அரசியல் தலைவர்களின் செயல்கள், கல்வியில் குளறுபடி என்று தினம் தினம் சீரியளைப்போல் தினமும் சஸ்பென்ஸ் ஆக தொடங்கும் முடியும் பாராளு மன்ற , சட்ட மன்ற கூட்டங்கள், கடைசிவரை இழுத்தடித்து முடிவு எடுக்காமல் இருக்கும் தலைவர்கள், டாஸ் மாக் கடைகள், மின் பற்றாக்குறை, மீனவர்கள் அவலம், மக்கள் வரிப்பணத்தை விரயம் பண்ணும் செயல்கள்  ...   இன்னும் பல உள்ளது மறுபக்கத்தில்..

                

சிறுகச் சிறுக மக்களை சீரியல் வாயிலாக அவர்களின் பிரச்சனைகள் சீரியல் போல் நீண்டுகொண்டே போகின்றது. முன்பு சினிமா படம் மூன்று மணி நேரத்தில் அதன் முடிவு தெரிந்துவிடும். அது போல் வாழ்கையில் பிரச்சனைகளும் ஓரளவு முடிந்தது. ஆனால் இன்று அது 'தொடரும்' என்கிற நிலைக்கு வந்துவிட்டது. 

        
கண்களில் பார்ப்பதெல்லாம் நிஜம் என்கிற நிலைக்கு மக்களை டி.வி மீடியாக்கள் மூலமாக வசியப் படுத்திவிட்டனர். இவைகளெல்லாம் உன்னைச் சுற்றி நடந்து வரும் மாற்றங்கள். இந்த மாற்றங்கள் உன் கண்ணை மறைத்து அறிவை மழுங்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். இப்படியே போனால் கட்டாயம் வருங்காலம் நாடு மிகப்பெரிய புரட்சியை சந்திக்கும். அப்போது அழிவு ஏற்படுவதற்கு முன் மக்களே விழித்துக்கொள்ளுங்கள். சீரியல் வாழ்க்கைக்கு முடிவு காட்டுங்கள். நீங்கள் நினைத்தால் புலம்பும் வாழ்கையை புனிதமாக்க முடியும், கவலையை  களையெடுக்க முடியும். சந்தோசத்தை அழித்திடும் சக்தியை ஒழித்துக் காட்டுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வருவது உறுதி.  

கடைசியாக இப்போது வரும் மாற்றங்கள் நன்மையை விட தீமைகள் தான் அதிகமாக இருப்பதால் , அந்த சுழலில் மாட்டிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருந்தால் உங்களை யாரும் அசைக்க முடியாது. உங்களது வெற்றிப் பாதையில் குறுக்கிடமுடியாது. உங்களுக்கு கிடைக்கும் வெற்றியைத் தடுக்கமுடியாது. வெற்றி உங்களுக்கே!

  

நன்றி 
       
வணக்கம். 

       

      

No comments:

Post a comment