Pages

Monday, 28 April 2014

உங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்

        உங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள்
            மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள் 
                             
                              

           YOURS WEAKNESS OF CONFIDENT IS
YOU ARE GIVING OTHERS FOR SUCKING OPPORTUNITIES 
                                   
                                          புதுக்கவிதை
                               
                                     மதுரை கங்காதரன்
 
உங்களுக்கு கடவுள் மேல் ஈடுபாடா 
உங்களிடமே  பக்திக்கு காணிக்கையாக பல நூறு பெறுவார்
 
உங்களுக்கு ஜோதிடம் மேல் நம்பிக்கையா 
'உங்களுக்கு கண்டம் இருக்கு' என்பார் 
 
தோஷம் இருக்கு ! அதற்கு பரிகாரம் சொல்வார் 
சிறப்பு பூஜை சொல்லி கண்மூடி காணிக்கை வாங்குவார்  

                              
    
உங்களுக்கு வாஸ்து சாஸ்திரம் பிடிக்குமா
அங்கே  இடி! இங்கே கட்டு! என்பார் கட்டணம் வாங்குவார்
 
உங்களுக்கு பெயரின் மேல் அபார நம்பிக்கையா ?
ஒரேழுத்து சேர்ப்பார் ! ஓராயிரம் கேட்பார் !
 
உனக்கு நிறத்தின் மீது நம்பிக்கையா?
இந்த நிற மோதிரம் போடுவார் ! பல ஆயிரம் கறப்பார்!
 
பசையுள்ள ஒருவர் 'தலைவலி' என்று போனால் 
மருத்துவர் ! அந்த சோதனை இந்த சோதனை செய்துவா 
 
நிரந்தரமாக வருவதற்கு மருந்துகள் கொடுப்பார்
உங்கள் பையில் இருக்கும் ரூபாய் அவர் கைக்கு மாறும் 
            
இல்லாத பெரிய வேலையை வாங்கித் தருவதாக சொல்வார் 
பல லட்சம் முன்பணமாக கேட்பார் 
                        
லட்சங்கள் அவர் கைக்கு மாறியவுடன் 
உங்களுக்கு பட்டை நாமம் போட்டு ஓடிவிடுவார் !
 
இதில் முதலீடு செய்யுங்கள்! பல மடங்கு பெருகும் என்பார் 
நீங்கள் செய்த முதலீடும் செய்த நிறுவனமும் காணாமல் போகும் 
 
ஊக வணிகத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்யுங்கள் 
கூடிய விரைவில் நடுத்தெருவுக்கு வரச்செய்திடுவார்
                         
உங்களுடைய ஓட்டை ஏதாவது ஒரு வழியில் வாங்கிடுவார் 
பின்னர் அவர் பல வழியில் நிம்மிடம் வசூலிப்பார் 
 
உங்களை மனப்பூர்வமாக காதலிக்கிறேன் என்பார் 
உங்களை விட அதிகம் சீர் கொடுப்பவருக்கு தான் பச்சைக்கொடி 
               
உங்களை உயிரையும் மேலாக நம்புகிறேன் என்பார் 
பணம் கொடுத்தால் உங்களையும் காட்டிக் கொடுப்பார் 
 
உங்களின் இரக்க குணம் கண்டு கடன் வாங்கிச் செல்வார் 
திருப்பிக் கேட்டால் 'ஏமாளி' பட்டம் கொடுப்பார் 
 
குறைகளைப் போக்குகிறேன் என்பார் போலி சாமியார்கள் !
கணிசமான ஒரு தொகை வாங்கி அவர் வசதியாக வாழ்வார் !
                              

வாகனத்தை வீட்டை வாங்க கடன் தருறேன் என்பார் வியாபாரிகள் 
உங்கள் சம்பளத்தை  ஆயுள் முழுதும் வட்டியாக வாங்கிடுவார்  
 
பத்து ரூபாய் பொருளை நூறு ரூபாய் என்று விளம்பரம் செய்வார் 
போலி கௌரவத்தால் அதைவிடக் கூடவே வாங்கிடுவார்        
 
உங்களுக்கு பல கோடி லாட்டரி விழுந்திருக்கின்றது என்பார் 
உங்களிடம் சில லட்சங்கள் பெற்று கம்பியை நீட்டிவிடுவார் 
 
விலை குறைவாக தங்கத்தை வாங்கித் தருவதாக சொல்வார் 
பிறகு தான் தெரியும் ! அது தங்கமல்ல பித்தளை என்று ?
 
உங்களின் பலவீனமே ஏமாற்றுபவர்களுக்கு பலம் 
உங்கள் பேராசையே அவர்களுக்குச் சாதகமாகக் கொள்வார் 
 
உங்களிடம் பணமிருக்கும் வரை நீங்கள் தான் ராஜா 
உங்கள் பணம் மற்றவர்களிடம் சென்று  விட்டால்  நீங்கள் கூஜா  தான்.
                                               
பணம் ஆசை வலையில் நீங்கள் சிக்கிவிட்டால் 
காலம் பூராவும் குடும்பத்துடன் கஷ்டப் படவேண்டியிருக்கும் !
 
பணம் சொத்து உள்ளவர்களே மிகவும் உஷாராக இருங்கள்
பலவீனமான நம்பிக்கை காட்டி மோசம் போகாதீர்கள்!

                             
நீங்கள் இதுவரை ஏமாறாது இருந்தால் நல்லது
இனிமேலும் ஏமாறாதிருக்க வாழ்த்துக்கள்  
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ 

88.ELEPHANT SIZE HUNGER , ANT SIZE FOOD - 88. யானையளவு பசியுள்ளவனுக்கு எறும்பளவு சாப்பாடு

HAVE A NICE LIFE STEPS

MADURAI GANGADHARAN

88.ELEPHANT SIZE HUNGER , ANT SIZE FOOD

 

MY IMAGINARY INTERVIEW WITH A RICH MAN
 
“You are one of the world's richest men! Why do you not give money to the poor?"

“If I give my money to poor, how can I become a rich man?”
 ----------------------------------------------------------------------------------------
 
 “Already you are a rich man! Why do you contest elections? Have you ever think about poor?"

“My aim is 'choose a business which is having less investment and getting maximum profit. Now a day without much investment more profitable business is ‘to contest an election and earn huge money’ as early as possible! Then how can I think about poor people?"


-----------------------------------------------------------------------------------------
 

" May be if you loose in this election ? "

" Next time I will join another party which will have a winning sign”

 ----------------------------------------------------------------------------------------
 

"What are your ambitions?” 

" Cheat people. Getting the money through bribe and deposit it in the 'Swiss bank ' and enjoying power through out all my generation"


-----------------------------------------------------------------------------------------
 
“Can you win?”

 "Until the people are facing various problem as well as this people are ready to put their vote by offering money and I will win. Anyone can't change the people's fate!"  


-----------------------------------------------------------------------------------------
 

"Do you have any philosophy?”

"Yes, Elephant like hunger people are having Ant size food. But Ant like hunger people are having Elephant size food. Like that, Elephant volume of hard working people are getting Ant size benefit and Ant volume  of working people are getting Elephant size benefits. It is our like rich man philosophy!"

-----------------------------------------------------------------------------------------
 

"I wish you all success ! Thanks for my advance Greetings! "

"Thank you, see you again after my win, Good bye ! "


-----------------------------------------------------------------------------------------
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்



88. யானையளவு பசியுள்ளவனுக்கு எறும்பளவு சாப்பாடு

மதுரை கங்காதரன்

 

ஒரு பெரிய பணக்காரரிடம் நான் கண்ட கற்பனைப் பேட்டி  
 
"நீங்கள் தான் உலக பணக்கார வரிசையில் இருக்கின்றீர்களே ! அதை ஏழைகளுக்குக்  கொடுக்கக் கூடாதா?"  
 
"நான் எல்லோருக்கும் பணத்தை தானாமாக கொடுத்திருந்தால் பணக்கார வரிசையில்  வந்திருக்கமாட்டேன். அதேபோல் நான் ஏழைகளுக்கு பணத்தை தானமாகக் கொடுத்தால்  எப்படி பணக்காரனாக  முடியும்?"
 
-----------------------------------------------------------------------------------------
 

"நீங்கள் மிகப் பெரிய கோடீஸ்வரர் ! நீங்கள் ஏன் தேர்தலில் போட்டிபோடுகிறீர்கள்? மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்ததுண்டா? "
 
  "என் உயரிய கொள்கை என்னவென்றால் குறைந்த முதல்  போட்டு அதிக லாபம்  தரும்  தொழிலைத்  தேர்ந்தெடுப்பேன். இப்போது அதிக முதலில்லாமல் மிகுந்த லாபம் தருவது ஒரு தேர்தலில் நின்று வெற்றி  பெற்று  அதன் மூலம் சம்பாதிப்பது! இப்படி இருக்கும்போது மக்களின்  கஷ்டத்தை   நினைக்க நேரமேது!"
 
-----------------------------------------------------------------------------------------
 

"ஒருவேளை நீங்கள் தேர்தலில் தோற்றுவிட்டால் ?"

"அடுத்த முறை வெற்றி பெறும் கட்சியில் சேர்ந்து விடுவது "
 
-----------------------------------------------------------------------------------------
 

*  "உங்களுடைய இலட்சியம் !"

   "மக்களை ஏமாற்றுவது. அரசியலில் கிடைக்கும் ஊழல் பணத்தை 'சுவிஸ் வங்கியில்' போட்டு  தலைமுறை  தலைமுறையாய்  இந்த பதவியை என் குடும்பம்  அனுபவிப்பது " 
 
-----------------------------------------------------------------------------------------
 

* "நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்களா ?"

  "மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கும் வரை! மக்களுக்கு கஷ்டம் இருக்கின்ற வரையில் கட்டாயம் நான் வெற்றி பெறுவேன். அவர்களுக்கு  என்னைவிட்டால் வேறு கதி ஏது ? "
 
-----------------------------------------------------------------------------------------
 

உங்களுக்கு பிடித்த தத்துவம் சொல்ல முடியுமா?
 
"யானையளவு பசியுள்ளவனுக்கு எறும்பளவு சாப்பாடு கிடைக்கும் . எறும்பளவு பசியுள்ளவனுக்கு யானையளவு சாப்பாடு இருக்கின்றது. அதுபோல் எறும்பளவு உழைப்பவனுக்கு யனையளவு பலன் கிடைக்கின்றது. யானையளவு உழைப்பவனுக்கு எறும்பளவு சாப்பாடு தான்  கிடைக்கின்றது. இது தான் எங்கள் பணக்காரர்களின் தத்துவம் !"
 
-----------------------------------------------------------------------------------------
 
* "நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ! நன்றி வணக்கம் !"

  "நன்றி ! வெற்றி பெற்ற பிறகு மீண்டும் உங்களை சந்திக்கிறேன் , வணக்கம்!"
 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!  
   

Sunday, 13 April 2014

87 . Time 's Hide and Seek Game - 87. காலம் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு

HAVE A NICE LIFE STEPS

MADURAI GANGADHARAN
 
87 . Time 's Hide and Seek Game

 

* As long as you have a thing within that time that thing you may not be required . But after you give / sell it then you will really need it. That time You could buy it back at a higher price . Sometime  you buy to whom did you sell or give it.

 

* When you want to rush to work that time you may not get any help.But many come to help you when you are free.


* What do you think that will not be happened. When do you not think that will happen.

 

* You are not get it when are you wanted. But you will get when are you not wanted it. 

 
* You want to die when you are wanted to live. You want to live when you are in the edge of death .

 
* Time will see you when you are not seen the Time. Time will not see You when you are seen the Time. 
 
Success steps continuous next......


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 

 

87. காலம் காட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு

 

* ஒரு பொருள் உன்னிடம் இருக்கும் வரை உனக்கு அவசியமில்லாமல் இருக்கும். ஆனால் அதுவே உனது கைவிட்டுப்  போனவுடன்  மிகவும்  தேவையாக இருக்கும். அதை நீ மீண்டும் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். சில சமயம் கொடுத்தவரிடமே வாங்க நேரிடும்.

 

* நீ அவசரமாக வேலை முடிக்க நினைக்கும்போது உனக்கு உதவி கிடைக்காது. ஆனால் வேண்டாதபோது உதவிகள் செய்ய பலர் வருவார்கள்.

 

* நீ இது இப்படி நடக்கும் என்று நினைக்கும்போது அது நடக்காது. நீ நினைக்காத போது அது நடக்கும் 
 
* நீ கேட்கும்போது கிடைக்காது . நீ கேட்காதபோது கிடைக்கும்.

 

* நீ வாழ நினைக்கும்போது சாகத் தோன்றும். சாவின் முனையில் இருக்கும்போது வாழத் தோன்றும்.

 

* நீ பார்க்காத போது காலம் உன்னைப் பார்க்கும். நீ காலத்தைப் பார்க்கும்போது அது உன்னைப் பார்க்காது.    
 
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$