Pages

Sunday, 28 June 2020

அளிப்பதில் ஆனந்தப்படும் இதயம் - புதுக்கவிதை - மதுரை கு.கி.கங்காதரன்

அளிப்பதில் ஆனந்தப்படும் இதயம் 

                       புதுக்கவிதை 

        மதுரை கு.கி.கங்காதரன் 

அளிப்பதில் ஆனந்தப்படும் இதயம் 
ஈகை உள்ளத்தில் ஊறும் 
எளிமை ஏற்பதில் ஐயம்  
ஒளியாமல் ஓடும்  ஒளவியம்.

மனமும் கொடையும் இணையம்  
மகத்தான இரக்கத்தின் உதயம் 
ஆற்றிடும் மனதின் காயம் 
மாற்றிடும் ஆனந்த நிலையம் 

இல்லாமல் இருப்பது வறுமை    
இருப்பவர் கொடுப்பது மேன்மை   
துன்பத்தில் தவிப்பது ஏழ்மை      
துடைத்து எறிவது  பெருமை.

மக்களைக் காத்திடும் மண் 
மண்ணைக் காத்திடும் மழை 
மழைநீரைக் காத்திடும் அணை 
மாசில்லா அன்புக்கு இணை  

அடிப்பார் சிரிப்பார் சிறியோர்  
எடுப்பார் கொடுப்பார் பெரியோர் 
பார்ப்பார் மறுப்பார் எளியோர்  
பொறுப்பார் அளிப்பார் வலியோர்.

தன்னலத்தில் இல்லை மகிழ்ச்சி 
தொண்டில் உள்ளது வளர்ச்சி 
பொதுநலத்தில் வேண்டும் எழுச்சி 
பாரினில் மலரும் மலர்ச்சி 
       *************************** 

Wednesday, 20 May 2020

21.5.2020 கவிபாரதி கங்காதரன் கவிதை - பத்துமொழி படித்தாலும்... காணொளிக் க...





மாமதுரைக் கவிஞர் பேரவைக்கு வணக்கம்
தலைப்பு
பத்துமொழி படித்தாலும் முத்தமிழைபடி
முதலில்
வழங்குபவர் : கவிபாரதி கு.கி.கங்காதரன், மதுரை

அன்னை ஊட்டிய தமிழே
அடித்தளம் என்பதை நினைவுகொள்
உன்னறிவை வளர்த்திடும் தமிழே
அமிழ்தம் என்பதை ஒத்துக்கொள்.

பிறமொழிகளைப் படிப்பதில் பிழையில்லை
பிழைப்புக்கு உதவும் மறுப்பில்லை
தமிழை வெறுப்பதில் சிறப்பில்லை
தமிழன் என்பதில் அர்த்தமில்லை

பன்மொழிகளைப் படித்திடு தமிழா
பக்கபலமாய் விளங்கட்டும் தமிழா
முத்தமிழுக்கு முன்னுரிமையளி தமிழா
முன்னோக்கி வீறுநடைபோடு தமிழா.

தமிழைக் காத்திடும் எண்ணமே
தவறாமல் தந்திடும் மனமே
முத்தமிழை ஏற்றிடும் குணமே
மூச்சாய் மாறட்டும் தினமே.



நன்றி, வணக்கம்

காஞ்சிபுரம் கம்பன் கழகத்தில் கவிதை முழக்கம் - சி. வீரபாண்டியத் தென்னவன் ...

காஞ்சிபுரம் கம்பன் கழகத்தில் கவிதை முழக்கம் - சி. வீரபாண்டியத் தென்னவன் - பாவலர் பாலு கோவிந்தராசன்

கீழ் உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்





Thursday, 23 April 2020

FIRST TIME IN SCIENCE'S HISTORY- MAGNETIC EARTH REVOLVES AND +1/2 , -1/2 M...

IT IS FIRST TIME IN SCIENCE'S HISTORY

YOU WANT TO SEE HOW EARTH REVOLVES            AROUND THE SUN? 

AND

AND YOU CAN SEE + 1/2 AND - 1/2 MAGNETIC ROTATION IN CHEMISTRY  


Click the BELOW link


or

copy and paste this link to the google search


OR CLICK THIS VIDEO...






THANK YOU FOR WATCHING THIS VIDEO
















*******************************

Tuesday, 21 April 2020

20.4.2020 காணொளிக் கவியரங்கம்- தமிழ் படித்து வெல்தமிழா! மாமதுரைக் கவிஞர் பேரவை


20.4.2020 காணொளிக் கவியரங்கம் 
மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை.

தமிழ் படித்து வெல்தமிழா! தலை நிமிர்ந்து நில் தமிழா!
 கு.கி.கங்காதரன்



தாய் இல்லாமல் எவரும் பிறந்ததில்லை
தாய்மொழி இல்லாமல் எவரும் இருந்ததில்லை
தமிழ்மொழி பேசாமல் தமிழர்கள் வாழ்ந்ததில்லை
தமிழ்மொழி படிக்காமல் தமிழர்கள் வென்றதில்லை

கொட்டும் அருவியில் குளிப்பது சுகம்
கொஞ்சும் தமிழில் பேசுவது சுகம்
சொக்கும் தமிழில் படிப்பது சுகம்
சொத்தானத் தமிழைக் காப்பதில் சுகம்.

கடலைக் காக்க இருகரைகள் வேண்டும்
உடலைக் காக்க ஓருயிர் வேண்டும்
தொழிலைக் காக்க தொழிலாளர்கள் வேண்டும்
தமிழைக் காக்க தமிழர்கள் வேணடும்.

வரம் பெற்றத் தமிழை மதிப்போம்
தரம் உள்ளத் தமிழை உயர்த்துவோம்
கரம் கொண்டுக் தமிழைக் காப்போம்
சிரம் நிமிர்ந்து தமிழை படிப்வோம்.

நன்றி, வணக்கம்.
....................