Pages

Thursday, 27 May 2021

அன்னை தெரேசாவின் நிழல் - சிறுகதை - கு.கி.கங்காதரன்

அன்னை தெரேசாவின் நிழல்  
சிறுகதை 
கு.கி.கங்காதரன்

"உனது வாழ்நாளில் சமூகத்தொண்டு செய்தவரின் சரித்திரத்தைப் படிப்பது அல்லது பொதுச்சேவையில் ஈடுபடுபட்டிருப்பவரை ஒருமுறையாவது சந்தித்துப் பேசினால்தான் உனது பூலோக வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும்" 

அரிதாக அன்று  'நீதிநெறி' (Moral) வகுப்பு நடந்ததுபொதுவாகக் கல்விக்கூடங்களில் வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடாமல் 'ஏட்டுக்கல்வி'யை மட்டும் அவர்களின் மனதில் ஆழமாக உழச்செய்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இம்மாதிரியான வகுப்புகள், மாணவர்களுக்குள் இருக்கும் மனஇறுக்கத்தைத் சற்று தளர்த்தும் என்பது ஆசிரியர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தாலும்கூட அதைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் என்பது ஒரு கேள்விக்குறியே?  

தமிழாசிரியர் கந்தசாமி அந்த வகுப்பை எடுக்கப்போகிறார் என்பதைக் கேட்டவுடன் மாணவர்களுக்கு உற்சாகம் பீறிட்டது. தமிழாசிரியராய் இருப்பதால்தான் என்னவோ தமிழ்பாடம் எடுக்கும்போது அவரின் தமிழ் உணர்வோடு கலந்த உச்சரிப்பானது ஒவ்வொரு வார்த்தையும் உயிர்பெற்று உறவாடுவதைப்போல் கேட்பவர்களை மெய்மறக்கச் செய்துவிடுகிறது என்பது உண்மையோ உண்மை. இரக்கம், மனிதநேயம், அன்பு ஆகியவை அதிகமாகத் தெரியாத இன்றைய மாணவ சமுதாயத்திற்குச் சிறப்புமிக்கத் அரசியல் தலைவர்கள், சமூகசேவகர்கள், அறிஞர் பெருமக்கள், விஞ்ஞானிகள் என்று பலரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் மூலம் நல்வழி காட்டவேண்டும் என்கிற அளவளாவிய விருப்பம் அவருக்குள் இயற்கையாகவே இருந்துவந்தது. குறிப்பாக அவரது வெற்றியைச் சொல்லவேண்டுமானால் ஆங்கிலமே பேச விரும்பும் தனது மாணவர்களைத் தெள்ளியத் தனித்தமிழில் பேசவைத்த பெருமை அவரைத்தான் சாரும். மாணவர்களிடத்தில் அவர் அடிக்கடிச் சொல்லும் வார்த்தை 'தமிழ் கற்காதவர்கள் பேச்சுவழக்குத் தமிழில் தெரியாமல் பேசலாம். ஆனால் தமிழ்க் கற்றவர்கள் தனித்தமிழில் பேசுவதுதான் அழகு' என்பதே. அவர் ஒரு நடமாடும் போதிமரம். அவர் மூலம் கல்வியறிவு ஞானம் பெற்றுப் பெரிய அளவில் இன்று கௌரவமாய் நடமாடுபவர்கள் பலர். 

அன்றைய வகுப்பில் தனது நீண்டநாள் ஆசையான 'அன்னை தெரேசாவின் வாழ்க்கையை சுருக்கமாகவும் அதேவேளையில் மாணவர்களின் இதயத்தினுள் நுழைத்து அவர்களின் இரத்தத்தோடு கலக்கச்செய்து அவர்களையும் சமூகத்தொண்டில் நாட்டம் செய்துவிட வேண்டும்' என்கிற முனைப்போடு வகுப்பில் நுழைந்து தனது வகுப்பைத் தொடங்கினார் கந்தசாமி. உயரிய 'நோபல் பரிசு பெற்றதோடு உலகளவில் பெருமையும் புகழும் கொண்ட அன்னை தெரேசா அவர்கள், ''தன்னலம் கருதாது வாழ்நாள் முழுவதும் தனது உடல்உருகிப்போவதைப் பற்றியும், வயது தேய்ந்துபோவதைப் பற்றியும் கொஞ்சம்கூடக்  கவலைப்படாமல்   உலகத்தின் பல்வேறு இடங்களுக்குச சென்று அங்குள்ள பலத்தரப்பட்ட மக்களுக்குப் பல்வகைப் பொதுத்தொண்டுகள் செய்துவந்தார். அவர் தமது இறுதி மூச்சுவரை பசி, பிணி, நோயில் வாடிய ஏழைகளுக்காகவே தொண்டு செய்து உயிர் நீர்த்தார். அன்னைத் தெரேசாவின் இளகிய மனிதநேய மனத்தைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கந்தசாமி பேசியதைக் கேட்ட மாணவர்களில் ஒருவனான மாணிக்கத்தின் உடலும் மனமும் ஒருவிதப் புத்துணர்ச்சி பெற்றது. எத்தனையோ வகுப்புகள் இதற்குமுன் நடந்தபோதிலும் அப்போதிருந்த மனநிலையும் இப்போது இருக்கும் மனநிலையும் ஒன்றுதான் என்று சொல்லமுடியாத அளவிற்கு அவனை அறியாமலே ஏதோ ஒருவித ஞானமும் ஆற்றலும் அவன் மனதைக் கிழித்து அதனுள் நுழைந்து பத்திரமாய் உட்கார்ந்துவிட்டது.     

தொடர்ந்து கந்தசாமி "நீங்கள் மனது வைத்தால் 'தூய்மை இந்தியா'வை இப்பள்ளியின் மூலம் ஆரம்பிக்கலாம். வகுப்பறையை, பள்ளிவளாகத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். மரக்கன்றுகளை நடலாம். ஏன்? உங்கள் வீட்டையும், தெருவையும் சுகாதாரமாகப் பராமரிக்கலாம். இங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் பற்பல உதவிகள் செய்யலாம். அவர்கள் படும் துயரங்களைப் போக்கலாம். எல்லாவற்றிக்கும் சொந்தப்பணம் செலவழிக்கவேண்டும் என்பதில்லை. மனது இருந்தால் அன்னை தெரேசா செய்ததுபோல் பெரிய மனது படைத்த மக்களிடம் பணமோ, பொருட்களோ வாங்கி எங்கு எப்போது யாருக்கெல்லாம் சேவை தேவையோ அவர்களுக்கு உதவலாம். அதற்குப் பரந்த மனமும், உதவும் எண்ணமும், இரக்க குணமும் இருந்தாலேப் போதுமானது' என்று பலவிதப் பொதுத்தொண்டுகளை அடுக்கிக்கொண்டே போனார். அன்னைத் தெரேசா மக்களுக்குத் தொய்வில்லாமல் சேவை செய்யவேண்டுமென்பதற்காக அவர் சந்தித்த அவமானங்கள், அளவில்லாத இன்னல்களை எடுத்துச் சொல்லச்சொல்ல மாணவர்கள் அமைதியாகவும் கவனம் சிதறாமலும் கேட்டனர். 

அவையனைத்தும் கேட்ட மாணிக்கம் "ஐயா, நானும் வருங்காலத்தில் அன்னை தெரேசாபோல் ஆகவேண்டும்" என்று தனது ஆசையை வெளிப்படுத்தினான்.

அதைக்கேட்ட கந்தசாமிக்கு 'ஒருநாள் வகுப்பிற்கே தன்னால் ஒரு மாணவனை பொதுச்சேவை செய்யும் எண்ணத்தைத் தூண்டமுடிந்ததே' என்று சற்று திருப்தியடைந்தார்.

"மிக்க மகிழ்ச்சி" என்று அவனைப் பாராட்டினார். அதோடு அவனிடத்தில் 'முடிந்தால் உனது அப்பாவை நாளைச் சந்திக்கிறேன்' என்கிறத் தகவலையும் அவனிடத்தில் கூறினார்.

கந்தசாமியும் மாணிக்கத்தின் அப்பா மதியழகனும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் தமிழின்மேல் அலாதியான பற்று உண்டு. பள்ளியில் படிக்கும்போதே பொதுத்தொண்டில் இருவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் தங்களால் முடிந்தளவிற்கு மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் தவறுவதில்லை. அது இன்றளவுக்கும் தொடருவதே சிறப்பு.  

வீட்டிற்கு வந்த பிறகும் மாணிக்கத்தின் மனதில் பொதுச்சேவைப் பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது. பொதுச்சேவை செய்வதில் இவ்வளவு துன்பங்கள் இருக்கின்றனவா? என்று அப்போதுதான் உணர்ந்தான். அத்தகைய துயரங்கள் யாருக்காக எதற்காக தாங்கிக்கொள்ளவேண்டும்? எதற்காக ஏழைகளுக்கு அன்னைத் தெரேசா அவர்கள் தன்னை வறுத்திக்கொண்டு இத்தனை உதவிகள் செய்யவேண்டும் என்கிற கேள்வியும் கூடவே அவனுள் எழுந்தது. அவ்வாறு எழுந்த எண்ணங்களானது, எவ்வாறு பெரிதான நீர்குமிழி சில வினாடிகளிலே தானாக உடைவதுபோல சில நிமிடங்களிலே அவனைவிட்டு அகன்றதன் அடையாளமாக அவன் அவசரம் அவசரமாகக் கைகால் கழுவிவிட்டு நேராக டிவி (தொலைக்காட்சி)யின் முன் அமர்ந்து ரிமோட்டை (தானியக்கி) கையில் எடுத்து டக்கு டக்குவென்று சானல்களை மாற்றிக் கொண்டே இருந்தான்.

அந்தவேளையில் முக்கியச் செய்தியாக 'வானிலை அறிவிப்பு' அனைத்து சானல்களிலும்  ஒளிபரப்பாகிக்கொண்டிருந்ததுஅதில் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியும் வந்தது. அதாவது 'இன்னும் இருபத்திநான்கு மணிநேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் பலத்தமழைப் பெய்யக்கூடும் என்பதாலும் குறிப்பாக சென்னையை அதிவேகக்காற்றுடன் கூடிய  புயல்மழை  தாக்கக்கூடும் என்பதாலும் பள்ளிக்கல்லூரிகளுக்கு நான்கு தினங்கள் விடுமுறை  அளிக்கப்படுகின்றன'  என்கிற எதிர்பாராதச் செய்தி மாணிக்கத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அச்செய்தியை வீட்டிலுள்ளவர்களுக்கும் கேட்கவேண்டு மென்பதற்- காகச் சப்தமாக வைத்தான்.

அச்செய்தியைக் கேட்டவுடன் சமையலறையிலிருந்து ஒருகுரல் "போச்சுடா, மறுபடியும் நாலுநாள் லீவா?  இப்படியே லீவுவிட்டுட்டே இருந்தா வாத்தியாருங்க எப்போ பாடத்தை நடத்திமுடிக்கிறது? நீங்க எப்போ பாடத்தைப் படிச்சு தேர்வு எழுதுறது?"  என்று மாணிக்கத்தின் அம்மா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

"அம்மா, உனக்கு என்னைத் திட்டுவதே ஒரு வேலையாகப் போய்விட்டது. எப்பொழுது பார்த்தாலும் படி, படி... இது மட்டும்தான் உனக்குத் தெரியும். படிப்பதை நான் மறக்கமாட்டேன். அதைத்தவிர எனது இலட்சியம் மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும்" என்று மாணிக்கம் தன் பங்கிற்குப் பதிலளித்தான்.   

"உனக்கு லீவு விட்டாலும் விட்டாங்க, ஏண்டாப்பா சதா டிவியை வச்ச கண்ணு எடுக்காம பார்த்துக்கொண்டே இருக்கனுமா? இது உனக்கே நல்லா இருக்கா? லீவு விடுறது இதுமாதிரி பொழுதுபோக்குறதுக்கு இல்லே. பாடத்தைப் படிக்கிறதுக்கு!  ம்... உனக்கு எப்போ புத்தி வரப்போறதோ" என்று தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கும் மாணிக்கத்திற்குக் கேட்கும்படி வழக்கம்போல் பல்லவியைப் பாடி முடித்தாள் அவன் அம்மா கீதா.

மறுநாள் வானிலை எச்சரிக்கையின்படி சென்னையில் கொட்ட ஆரம்பித்த மழையானது, வானத்திலிருந்து வீசியெறியப்பட்ட தண்ணீர்க்குண்டுகளாய் சாலை, வீடு, வாகனங்கள், கடைகள், கட்டிடங்கள், குடிசைகள், தெருவோரத்தில் வசிக்கும் மனிதர்களை தயவுதாட்சண்யம் இல்லாமல் தாக்கிக்கொண்டிருந்தது. அச்செயல் விண்ணிற்கும் மண்ணிற்கும் நடக்கும் போர்களம்போல் காட்சியளித்தது. அதில் சிக்கிய மனிதர்கள் உட்பட பல்லுயிர்கள் என்னவென்றுச் செய்வதறியாது திணறிக்கொண்டிருந்தது. கொந்தளிக்கும் கடல்போல் அனைத்து இடங்களையும் தீவுபோல் சூழ்ந்து கொண்டிருந்ததால் மீட்புப்பணிகள் முழுவீச்சில் செய்யமுடியாதபடி கிட்டத்தட்ட அனைத்துக்கரங்களையும் கட்டிப்போட்டிருந்தது. மின்சாரம் முழுவதுமாகத்  துண்டிக்கப்பட்டிருந்தது. மழைவெள்ளம் சாலைகள் இருப்பதே தெரியாதவண்ணம் காட்டாறாய் ஆர்ப்பரித்தபடித் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிகழ்வினைச் செய்திகளாய் நேரலையாக அனைத்து வீடுகளின் சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன.
சென்னையில் மாணிக்கத்தின் வீடுச் சற்று மேடான பகுதியாதலால் அங்கு மழையின் தாக்கம் குறைவாகவேக் காணப்பட்டது.

இம்மாதிரி நிகழ்வு, சென்னையானது நூறுஆண்டுகளுக்கு
 முன்னால் சந்தித்ததாக ஊடகங்கள் தெரிவித்துக்கொண்டிருந்தது. அதேவேளையில் இத்தகையப் பேரிடரானது, மக்கள் நகரத்தின் தாழ்வான பகுதிகளில் பல வீடுகளைக் கட்டியதாலும், வீடுகளில் மழைநீரைச் சேமிக்கும் வசதி இல்லாமையாலும், சாலைகளில் தண்ணீரை உறிஞ்சிடாத அளவுக்குத் தார், சிமெண்ட் சாலைகள் போடப்பட்டதாலும், நீர்வடிகால் கட்டமைப்பு இல்லாததாலும்  ஏற்பட்டது? என்கிறப் பலகாரணங்களை விலாவாரியாக விவரித்துக்கொண்டிருந்தது. நல்லவேளையாக முன்னெச்சரிக்கை காரணமாகவும், அரசு மற்றும் மக்களின் ஒத்துழைப்புக் காரணமாகவும் மனித உயிர்கள் இறப்பதைக் கணிசமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தது. அதைவிடக் கூடுதல் தகவலாக வாட்ஸ் ஆப், முகநூல் மூலம் பல்வேறுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தங்களால் இயன்ற உதவிகளைச் சென்னைப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுவீச்சில் இறங்கி தொண்டுசெய்வதை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதைப் பார்த்த மாணிக்கத்தின் உள்ளம் பரவசத்தில் ஆழ்த்தன.

பல பகுதியிலிருந்து வந்திருந்த இளைஞர்கள், பாதித்தவர்கள் பலருக்குப் பால், உணவுப்பொட்டலங்களை வழங்குவது, வெள்ளத்திலிருந்துச் சிலரைக் காப்பாற்றுவது, முதியோர்களைப் பத்திரமாக ஒரிடத்தில் அழைத்துச் செல்வது, மருந்தும் மருத்துவ உதவிகளும் செய்வதை நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்த மாணக்கத்தின் உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தது.       

சொல்லியபடி கந்தசாமி, தன் நண்பன் மதியழகனைப் பார்க்க வீட்டிற்குச்சென்றார். வீட்டுச் சூழ்நிலையை அவர் நோட்டமிட்டார். தொலைக்காட்சிப்பெட்டியில் மூழ்கியிருக்கும் தன் மாணவன் மாணிக்கம் ஒருபுறம், சமையலறையே கதியென்றுகிடக்கும் அவன் அம்மா, வீட்டுச்சாமான்ககளை ஒழுங்குபடுத்துவதற்கும், வீட்டுவேலைகளைச் செய்துப்பழகிப்போன தன் நண்பன் மதியழகன் ஆகிய எல்லோரும் அவரவர் வேலையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.  

சற்று நிதானித்த கந்தசாமி "தொலைக்காட்சியைப்
 பார்த்தாயா மதியழகா? எப்படியிருந்த சென்னை! இப்படி ஆகிவிட்டது! ‘கலிகாலம் என்பது சரியாகத்தான் இருக்கின்றது! இம்மாதிரிப் புயலும், மழைவெள்ளமும் என்வாழ்நாளிலேப் பார்த்ததே இல்லை. மூலைமுடுக்குகளில் இருக்கும் யார்யாரோ போட்டிப்போட்டுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல உதவிகள் செய்யும்போது பக்கத்தில் இருக்கும் நாம் அவங்களுக்காக ஏதாவது செய்யவேண்டும்
" என்று தனது ஆசையைச் சொன்னார் கந்தசாமி.

"நீ சொல்வதுச் சரிதான். ஆனால் இந்த நிலைமையில் யாரிடத்தில் எந்த உதவி கேட்டு எப்படி அதை அவங்களிடத்தில் சேர்ப்பது என்பதுதான் தெரியவில்லை?" என்று இருவரும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த மாணிக்கத்தின் குரல் கம்பீரமாய்க் கேட்டது. 

"வணக்கம் ஐயா. அப்பா, நீங்கள் பேசியதை நான் கேட்டேன். நீங்கள் அனுமதிக்கொடுத்தால் என்கூட படிப்பவர்கள் இப்பகுதியில் பலர் இருக்கிறார்கள். சற்றும் தாமதிக்காமல் அவர்களிடம் உணவும் உடைகளும் சேகரித்து அதை எனது நண்பனின் அப்பா வாகனத்தில் ஏற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் பல அளிக்கலாம்" என்று மாணிக்கம் என்றைக்குமில்லாமல் இவ்வாறுப் பேசியத்தைக் கேட்டு வாயடைத்துப் போனார்கள்.

"மாணிக்கம், ஒருவரிடத்தில் உதவி பெறுவது என்பது மிகவும் கடினமானச் செயல்!" என்றார் கந்தசாமி.

"தெரியும் ஐயா! கொடுக்க நினைப்பவர்களிடத்தில் வாங்குகிறேன். அவர்களில் சிலர்
 எத்தகைய வார்த்தைகள் பேசுவார்கள்? எவ்வாறுத் தரக்குறைவாக நடந்துகொள்வார்கள் என்பது நீங்கள் சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது ஐயா! நீங்கள் நன்னெறி வகுப்பில் போதித்த அன்னைத் தெரேசா அவர்கள் மக்களுக்குச் செய்த தொண்டுகள் பசுமரத்தாணிபோல் என்மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது ஐயா. என்னால் சென்னை மக்கள் படும் துன்பமும் வேதனையும் பார்த்து சும்மா இருக்கமுடியவில்லை ஐயா. சென்னையில் மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத தகுந்த நேரத்தில் உதவிசெய்வதுதான் நாம் மற்றவர்களுக்குச் செய்யும் அற்புதத்தொண்டு என்று நான் கருதுகிறேன். அன்னைத் தெரேசா இருந்திருந்தால் என்ன செய்வாரோ அதை நான்செய்ய வேண்டும் என்று என்மனது துடிக்கின்றது. இதுநாள்வரை தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களைப் பார்த்துப்பழகிப்போன எனக்கு இன்று காலை மழையால்பாதித்த மக்களை நேரலையாகப் பலஊடகங்களில் பார்த்தபின் எனக்கு அன்னைத் தெரேசா அவர்களின் தொண்டு நினைவுக்கு வந்தது
. போரில் காயமடைந்தவர்களுக்கு அவர்கள் செய்த தொண்டு இன்றளவும் உலகம் பேசிக்கொண்டு இருக்கின்றது. அதுபோல் நானும் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு ஏதாவது உதவி செய்தேதீர வேண்டும் என்று என்மனம் சொல்கிறது" என்று தனது உணர்வுகளை மழையாகக் கொட்டினான்.  

'மாணிக்கம்தான் இவ்வாறு பேசுகிறானா?' என்று இருவருக்கும் சந்தேகம் இருக்கத்தான் செய்தது.

"கந்தசாமி, நம்ம மாணிக்கம் ஏதோ ஒரு வேகத்தில் இருக்கிறான். புத்தபகவான் ஞானம் பெற்றதுபோலல்லவா துள்ளுகிறான். எனக்கென்னமோ நீதான் கண்ணபிரான் அர்சுனனுக்கு உபதேசம் செய்ததுபோல் ஏதாச்சும் சொல்லியிருப்பாய் என்று நினைக்கிறேன். எப்படியோ இந்த அளவுக்கு இவன் பேசுவதே எனக்குப் பெருமையாய் இருக்கின்றது" என்று மதியழகன் அதிசயமாய்ப் பேசினார்.

"மதியழகா, அவனைத் தடைசெய்யாமல் பாதித்தவர்களுக்குத் தொண்டு செய்ய மாணிக்கத்திற்கு அனுமதி கொடுப்போம். அவனுக்குத் துணையாய் நாம் இருப்போம்" என்று கூறியதுதான் தாமதம் மாணிக்கம் மக்களிடமிருந்து பல உதவிகளைச் சேகரிக்கச் சிட்டாகப் பறந்தான்.

ஒருமணி நேரம், இரண்டுமணி நேரம் என்று நான்குமணி நேரம் கடந்தது. கையைப் பிசந்தபடி கந்தசாமியும், மயில்சாமியும் இங்கும் அங்குமாய் நடந்துகொண்டிருந்தனர். 'தன் மகனுக்கு என்னானதோ' என்று பதறியபடி புலம்பினாள் கீதா. இந்நிலையிலும் மூவரும் நேர்மறை நம்பிக்கையோடு இருந்தனர்.

"மாணிக்கம் கட்டாயம் நல்ல செய்தியோடு வருவான்' என்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் கந்தசாமி.

சிலமணிநேரத்திற்குப் பிறகு, மாணிக்கம் எங்கு எப்படி யாரித்தில்லெல்லாம் உதவி கேட்டானோ என்றுத் தெரியவில்லை. அவனின் ஆர்வமும் வேகமும் தொண்டுசெய்யவேண்டும் என்கிற எண்ணமும் எல்லோரும் எண்ணியபடியைவிடவும் கூடுதலாக அனைத்தையும் எளிதாகச் செய்யவைத்தது. இன்றுதான் மக்களின் எண்ணத்தை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு தனக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது என்றே எண்ணினான்.

"யாரு, மதியழகன் மகன் மாணிக்கமா? பரவாயில்லையே. உன்னைப்போல மாணவங்க சமூகசேவை செய்றது ரொம்பப் பெருமையா இருக்கு. எங்களாலே நேரடியா பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவிசெய்ய முடியலேன்னாலும் உன் மூலமாச் செய்றது நாமக் கொடுத்து வச்சிருக்கனும். எங்களான உதவிங்க இதோ' என்று பலரும் போட்டிப்போட்டுக்கொண்டு கொடுத்ததை கண்ட மாணிக்கம், மக்களுக்கும் ஈரம் உண்டு என்பதை  உணர்ந்துகொண்டான்.

உணவும் உடையும் நிரம்பிய படி வாகனத்தின் முன்கண்ணாடியில் 'வெள்ள நிவாரணப் பணி வாகனம்' என்கிற வாசகம் தாங்கிய பதாகையுடன் வந்து சேர்ந்த மாணிக்கத்தைப் பார்த்த மதியழகன், கந்தசாமி, கீதா மற்றும் தெருவில் உள்ள அனைவரும் வியப்பாகப் பார்த்ததோடு அவர்களும் பல உதவிகள் செய்தனர். 

"ம்.. மாணிக்கம் செய்த வேலை! மகத்தானது. இதைக்கொண்டு பாதிக்கப்பட்ட சிலருக்காவது உடனே உதவ வேண்டும்" என்று  சற்றும் தாமதிக்காமல் அம்மூவரும் வாகனத்தில் அமர, வாகனம் வெள்ளம் பாத்தித்த திசையை நோக்கிப் பறந்தது.
                          
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 


Wednesday, 5 May 2021

MOTIVATIONAL  INTERVIEW BY P.SOWMYA ON 22.04.2021 WITH K.K.GANGADHARAN -...



MOTIVATIONAL  INTERVIEW 
BY 
P.SOWMYA ON 22.04.2021 
WITH 
K.K.GANGADHARAN - 
VIDEOGRAPHY 
BY 
P.PRIYA DHARSHINI 

visit/ click the below link .......




**********

Monday, 19 April 2021

Dr முத்துசாமி உயர் நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா - மதுரை மாநகர் மக்கள் சக்தி இயக்கம் & லயன்ஸ் கிளப்



மரக்கன்று நடும் விழா

 

மதுரை மாநகர் மக்கள் சக்தி இயக்கம்

நேதாஜி இயக்கம் திரு சுவாமிநாதன் அவர்கள்

சமூக ஆர்வலர் திரு வாடிப்பட்டி சுந்தரராஜன் அவர்கள்

லயன்ஸ் கிளப் திரு மூர்த்தி அவர்கள்

மற்றும்

மற்றும் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள்

 

8.4.2021 வியாழக்கிழமை மதுரை மாநகர் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தன்னம்பிக்கை நாயகன் Dr M.S.உதயமூர்த்தி அவர்களின் பிறந்த நாள் Dr முத்துசாமி உயர் நிலைப் பள்ளியில்  மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது இயக்கத்தினர், சமூக ஆர்வலர்கள், பூமிதான இயக்கம் வாடிப்பட்டி சுந்தரராஜன் அவர்கள், லயன்ஸ் கிளப் மூர்த்தி அவர்கள்,  மற்றும் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் மற்றும் பலர் 

 











மேலும் மின்படங்களுக்கு

அல்லது 


கிளிக் செய்யவும் ...




நன்றி 

Saturday, 13 March 2021

அவன் தேடிய அழகி! - சிறுகதை- கு.கி.கங்காதரன்

                 

அவன் தேடிய அழகி!
சிறுகதை
கு.கி.கங்காதரன்


  "'அழகு' என்பது நிரந்தரமானதல்ல என்ற உண்மையை அறிந்துகொண்டால் அதனைப் பற்றிய ஆசைகள் மனதில் உண்டாகாது"

  "இதோபாரு ராகவா, இனிமே உனக்குப் பொண்ணு பார்க்க எங்களாலே முடியாதுப்பா. இதுவரை எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்தாச்சு. அவங்கள்லே ஒருத்தரைக்கூடப் பிடிக்கலேன்னா, அதுக்கு என்ன அர்த்தம்? எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் மூக்குசரியில்லை. ‘கண்ணு காந்தம்போல இல்லை. சிரிச்சாப் பல்லு தெரியுது. இப்படியே ஒவ்வொரு குறையைச் சொல்லிட்டே இருந்தா இந்தப்பிறவியிலே உனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காது. ஒருவேளை இப்படியெல்லாம் குறை சொல்லுறதுக்குக் காரணம் காதல் கீதல்னு மனசுலே இருக்கான்னும் கேட்டதற்கு 'அதெல்லாம் கிடையாது'ன்னும் சொல்லிட்டே. கடைசியாக் கேட்கிறேன் 'நீ எப்படிப்பட்ட பொண்ணைத்தான் விரும்புறே?’ அதையாச்சும் சொல்லு" என்று சரவெடிபோலப் படபடவென்று இடைவிடாது பேசி முடித்தார் அவனுடைய அப்பா விநாயகம்.

  "நல்ல அழகானப் பொண்ணா வேணும்னு ஆசைப்படுறது தப்பா? அதுக்கு ரதிபோல இருக்கனும்னு நினைக்கலே. பார்த்தவுடனேப் பிடிக்கிற அளவுக்கு இருந்தாலேப் போதும்" என்று ராகவன் தனது எதிர்கால மனைவியைப் பற்றிய விருப்பத்தைக் கவலையாக வெளிப்படுத்தினான்.

  "சுத்திவளைச்சு பேசாதே. எங்களுக்குக்கெல்லாம் தெரிஞ்ச பொண்ணைக் காட்டிச் சொல்லு. 'இப்படிப்பட்டப் பொண்ணுதான் வேண்டும்னு! அவள் மாதிரி அமையுதான்னுப் பார்ப்போம். ஆனா எது எப்படி இருந்தாலும் இப்போப் பார்க்கப்போற பொண்ணுதான் கடைசி. அதன் பிறகு நீயாச்சி, உன் கல்யாணமாச்சு. எங்களை ஆளைவிட்டுடுடா சாமி" என்று கெஞ்சியபடியும், அதனை மிஞ்சியபடியும் கையெடுத்து கும்பிடுபோட்டாள் அவன் அம்மா விமலா.

  "பொண்ணைப் பார்த்தா கற்பனையைத் தூண்டுவதாக இருக்கனும். அதோடு பேசிட்டே இருக்கனும்போல தோனும். சிரிச்சா பார்த்திட்டே இருக்கனும். பேசினாக் கேட்டுட்டே இருக்கனும்போலத் தோணனும். மொத்ததிலே நம்ம 'சிந்தாலாபோல இருக்கனும்" என்று கடைசியில் தனது மனதில் இருக்கும் கனவுக்கன்னிப்பற்றிய இரகசியத்தை போட்டு உடைத்தான் ராகவன்.

  "அடே! நடிகை சிந்தாலாவா?"
  "அவளேதாம்மா"
  "ஆமா, சமீபத்திலேகூட ஒரு படத்திலே குடும்பக் கதாப்பாத்திரத்திலே நடிச்சு தேசிய அளவிலே சிறந்த நடிகையாத் தேர்ந்தெடுத்தாங்களே அவங்களா?"

  'ஆமாம்' என்றுத் தலையாட்டினான்.

 "இன்றைக்குகூட நம்ம ஊர்லே எங்கேயோ படப்பிடிப்பு நடக்கிற சமயத்திலே எதிர்பாராதவிதமா விபத்துக்குள்ளாகி தலையிலை அடிபட்டு நம்ம ஊரு ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்களே அவங்கதானே?" என்று அந்த நடிகையைப் பற்றிய நடப்புத்தகவலை அமைதியாகத்தந்தாள் விமலா.

  "என்னம்மா சொல்றே? அவங்களை ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்களா?"

  "ஆமாண்டா ராகவா. அதுதான் இப்போதைய தலைப்பு செய்தி, முக்கியச் செய்தியும்கூட!" என்று உறுதிபடுத்தினாள்.                   

  ராகவனுக்கு அந்தச்செய்தி அதிர்ச்சியளித்தாலும் விரைவிலே இயல்பான நிலைக்குத் திரும்பினான்.

  அழகை ரசிப்பது ராகவனுக்குப் பரமானந்தத்தைக் கொடுப்பது. அழகின்மேல் மனதைப் பறிகொடுப்பது யதார்த்தமாக இருந்தாலும் அதனை அர்த்தமுள்ளதாக்கும் திறமை அவனுக்குண்டு. அழகைப்பற்றியக் கவிதை எழுதச் சொன்னால் நன்றாகவே எழுதுவான். அவனுடைய  கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளதே அதற்குச் சாட்சி. அழகின்மேல் அவ்வளவு ஈடுபாடு இருப்பதால் தனக்கு வரப்போகும் மனைவி, தன் கற்பனைக்கும் அப்பால் இருக்கவேண்டுமென்பதால் சலிக்காமல் பெண்பார்க்கும் படலத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறான்.

  ராகவன் பக்கத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. வசீகரிக்கும் அழகும், துள்ளும் இளமையோடு நல்ல வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கும் அவன், ‘தனக்கு அழகானப் பெண் வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஏதும் இருப்பதாக யாரும் சொல்லமுடியாது.   

  "ராகவா, சொல்ல மறந்திட்டேன். உன்னோட நண்பன் முருகவேல் கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி இங்கு வந்திருந்தான். நேரமிருந்தால் உன்னை அவன் வீட்டிற்கு வரச் சொன்னான்" என்பதை விமலா நினைவுபடுத்தி ராகவனிடத்தில் தெரிவித்தாள்.

  "அப்படியாம்மா. அவனை ஒரு எட்டு போய்ப்பார்த்துட்டு வந்துடுறேன்" என்று மேலோட்டமாகத் தன்னை அலங்கரித்துப் புறப்படத்தயாரானான்.

  "ராகவா, இன்னிக்கு நாம பார்க்கப்போறப் பொண்ணுகூட அந்தப் பகுதியில்தான் இருக்குன்னு சொன்னங்க. ஒருவேளை நீ போறவழியிலே எந்தப்பொண்ணாவது அழகாத் தெரிஞ்சா அவதான் உன்னுடைய வருங்கால மனைவியா இருக்கலாம்!" என்று கிடைக்கிற சந்தில் சிந்து பாடி கேலியாகப் பேசினார் விநாயகம்.

  முருகவேல் வீடு சற்றுத் தொலைவில் இருந்தாலும் நடையாகவே செல்வது ராகவனுக்குப் பழக்கம். நடப்பது அவனுக்கு நிறையவேப் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம் நடந்து செல்லும்வேளையில் பல நண்பர்கள், உறவினர்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம். யாரையும் சந்திக்க நேரமில்லாத இந்த அவசர உலகத்தில் இம்மாதிரியான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் என்பதற்காகவே வம்படியாக நடத்தே செல்வான். அவன் இளமையாய் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  அவன் போகின்ற வழியில் விநாயகம் சொன்னதுபோல் திருமணமாகாத அழகிகள் தென்படுகிறார்களா? என்று உண்மையில் பார்த்துக்கொண்டே கடந்தான். எதிர்பார்த்ததுபோல் தேவதையாக ஒரு பெண் சற்று தூரத்தில் நின்றிருக்க 'அப்பா சொல்லியப் பெண் இவளாய் இருப்பாளோ?' என்று எண்ணியபடி அருகில் செல்லச்செல்ல அதற்குள் அவளிடத்தில் ஒருவன் மிக உரிமையாக 'உன்னோடப் பையன் என்னகிட்டே இருக்கவேமாட்டேன்னு ரொம்பவே அடம்பிடிக்கிறான். அம்மாதான் வேணுமாம், இந்த அப்பா வேண்டாமாம்' என்றபடி குழந்தையை அவளிடத்தில் கொடுக்க அதைக் கவனித்துக்கொண்டிருந்த ராகவனின் எண்ணம் தவிடுபொடியானது.

  அதேபோல் சற்றுதூரம் செல்ல ஒரு அப்சராஸ்அழகி யாரோ ஒரு பெரியவருடன் செல்வதைப் பார்த்த ராகவன் நான் தேடும் அழகி வளாய் இருக்குமோ?’ என்கிற ஆர்வத்தில் அணுக, அவள் அதேவேளையில் 'பார்த்தீங்களா, உங்க மாப்பிள்ளையை! நாம வந்து அரைமணி  நேரமாச்சு. இன்னும் அவரைக் காணாம்' என்ற வசனம் காதில் விழுந்தபோது அவன் காதுகள் இரண்டும் அடைப்பட்டுப் போனதாக உணர்ந்தான்.

  இப்போது ராகவன் மனதில் இந்த எண்ணம் ஓடியது. ‘அழகானப் பெண்களை யாரும் விட்டுவைக்கமாட்டார்கள்போலல்லவாத் தெரிகிறது. ஒருவேளை நான் தாமதமாகப் பெண்பார்க்க ஆரம்பித்திருக்கேனோ? நடந்த நிகழ்வுகளைப் பார்த்த ராகவன் தனக்குள்ளே 'எனக்கென்னவோ நான் நினைத்தபடி அழகான மனைவி கிடைப்பாள் என்ற நம்பிக்கை இல்லை என்று எண்ணியதால் அந்த நம்பிக்கைச் சற்று குறைந்துவிட்டதாக உணர்ந்தான்.

  மனது கற்பனையிலும் கண்கள் சாலையிலும் நடந்துகொண்டிருந்த ராகவன், சற்று தூரத்தில் பதற்றத்துக்குள்ளாகும் அதிர்ச்சியான அந்தக் காட்சியைக் கண்டமாத்திரத்தில் அவனுடைய கால்கள் அதை நோக்கி ஓட்டமெடுத்தது. அங்கே ஒரு தாயின் கவனக்குறைவால் அவளுடைய குழந்தை அவசரமாகக் சாலையைக் கடக்கும்போது எதிர்பாராதவிதமாக எதிரே ஒரு கனரகவாகனம் வேகமாக அக்குழந்தையை நோக்கி வருவதை ராகவன் கவனித்தாலும், அக்குழந்தையைக் காப்பாற்ற முடியாத தூரத்தில் இருந்தான். அவன் இதயம் ஒரு சில மணித்துளிகள் நின்றேவிட்டது! தன் கண்ணெதிரே ஒரு குழந்தை இறக்கும்காட்சியைக் காணச் சகிக்கமுடியாமல் இருகண்களை நன்றாக மூடிக்கொண்டபோதும் தன் கைவிரல்களின் சிறு இடைவெளியின் வழியாக நடக்கப்போகும் கோரநிகழ்ச்சியைப் பார்க்க முனைந்தான்.

  ஆனால் அவன் எண்ணியதற்கு மாறாக, எங்கிருந்தோ ஒரு பெண் உருவம் அக்குழந்தையைச் சாலையிலிருந்து சட்டென்று நடைபாதையில் தூக்கி வீசிய வேகத்தில் அவள் தன்வசத்தில் வைத்திருந்த கைப்பையை நழுவியபடி கீழேவிழுந்து அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறிப் போனதோடு அவளும் மயக்கமாகிக் கீழே சாய்ந்து விழுந்தாள்.

  அவ்விடத்தில் இருந்த குழந்தையின் தாயானவள் தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த ராகவனிடம் "தம்பி, இந்தப் பொண்ணுமட்டும் என் குழந்தையைக் காப்பாத்திருக்காவிட்டால் நான் உயிரோடு இருந்திருக்கவே மாட்டேன். இந்தப் பெண்ணுக்கு என்னாச்சோ, ஏதாச்சோன்னு தெரியலே. சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போங்க தம்பி' என்று தனது இயலாத நிலையை நாசூக்காக எடுத்துக்கூறி ராகவனை விரைவுபடுத்தினாள். அந்தவேளையில் ராகவனும் ஒரு மனிதாபிமான முறையில் ஒரு ஆட்டோவை உடனே அழைத்து அவளை அதில் ஏற்றியபின், அப்பெண்ணின் கைப்பையிலிருந்து வெளியே சிதறிக்கிடந்த பொருட்களை அவன் நிதானத்தை இழந்தவாறு அவசரம் அவசரமாகச் சேகரித்தான். அவற்றில் அப்பெண் மாநில அளவில் நடந்த கதை, பேச்சு மற்றும் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றச் சான்றிதழ்கள், பதக்கங்கள் அடங்கியிருந்தன. இது தவிர அப்பெண் எழுதியப் புத்தகங்கள் சில அப்பெண்ணின் பெருமைகளையும் புகழையும் பறைசாற்றும் விதமாக இருந்தன.

  அவைகளைப் பத்திரமாக அவளின் கைப்பையில் சேகரித்தபடி 'ஆட்டோக்காரரே, நிர்மலா ஆஸ்பத்திரிக்கு கொஞ்சம் சீக்கிரமா போப்பா' என்று பணிவாகக் கட்டளையிட்டான். அதேவேளையில் அவன் தனது கைபேசியை எடுத்து "யாரு, டாக்டர் பிரபாகரா?" என்று பதற்றத்தில் நாக்கு உளறியபடி பேச "ஆமாண்டா, ராகவா. உனக்கு என்னாச்சு? பேச்சு ஒருமாதிரியாக இருக்கே!" என்று அவன் டாக்டர் நண்பன் விசாரிக்க, நடந்ததை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னான் ராகவன்.

  "டோண்ட் வொரி ராகவன். நான் இருக்கேன். தைரிமா இரு. நீ ஆட்டோவில் அந்தப்பெண்ணை எடுத்துட்டு வர்றதை கேட்டிலிருந்து மற்ற எல்லாருக்கும் சொல்லி விடுகிறேன். அவங்க நேரா எங்கிட்டே அழைச்சுட்டு வந்துடுவாங்க. மற்றதை நான் பார்த்துக்கிறேன்" என்று தைரியம் கொடுத்தபிறகே ராகவனுக்கு நிம்மதி வந்தது.

  அந்த ஆட்டோவை பார்த்தமாத்திரத்தில் "சார், டாக்டர் பிரபாகரன் சொன்ன கேஸா?" என்ற கேள்விக்கு "ஆமாங்க" என்றவாறே தலையாட்டினாலும் ராகவனுக்கு இனம்புரியாத ஒருகவலையும் அன்பும் அப்பெண்ணைப் பார்த்தபிறகு எட்டிப்பார்த்தது. இவ்வளவுக்கும் அவள் ராகவன் கற்பனையில் வரும் 'கனவுக்கன்னி' போல் இல்லாமல் இருந்தாள்.

  டாக்டர் பிரபாகரோ, “ராகவா, பயப்படும்படியா இருக்காதுபோல் தெரியுது. இருந்தாலும் தலையிலே லேசா அடிப்பட்டதால் மக்கம்போட்டு விழுந்திருக்கிறாள். எதுக்கும் தலைப் பகுதியை ஒரு எக்ஸ்-ரே எடுத்துப்பார்த்துடுவோம்என்றுத் தனது உதவி டாக்டரிடம் அந்த வேலையைச் சொல்ல, அவரும் 'ஆகட்டும்' என்று அப்பெண்ணை எக்ஸ்-ரே எடுக்கும் அறைக்கு எடுத்துச் சென்றார்.

  "ராகவா, நீ இங்கேயே இருந்தா வீணாக ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இருப்பாய். நீ என் கூட என் அறைக்கே வந்து இரு. அதுதான் நல்லதுன்னு எனக்குப்படுது" என்று ராகவனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார் டாக்டர் பிரபாகரன்.

  பிரபாகரும் ராகவனும் அறையில் உள்ளே நுழைந்த அதேவேளையில் "டாக்டர், படப்பிடிப்பின்போது தலையிலே அடிபட்ட 'சிந்தாலா' நடிகையின் 'எக்ஸ்-ரே' ரிப்போர்ட் வந்திருச்சி டாக்டர்' என்றபடி உதவி டாக்டர் தன் கையில் இருந்த எக்ஸ்-ரே படத்தைக் கொடுக்க அதனை வாங்கிய பிரபாகர், சிறிய வெள்ளைநிறச் சோதனைப் பெட்டிபோல் இருக்கும் இடத்தில் அதனை மாட்டிவிட்டு விளக்கினை எறியவிட்டார். அழகாக இருக்கும் 'சிந்தாலா' எலும்புக்கூடாய் மண்டை ஓடாய்க் காட்சியளித்தாள். அதை நுண்ணிப்பாகப் பார்த்த டாக்டர் பிரபாகர் "அடி ஒன்றும் பலமாய் இல்லை. ஷி இஸ் பெர்ஃபக்ட்லி ஆல் ரைட். அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க. ஆனா ரெண்டு மூனு நாட்கள் மட்டும் ஓய்வு எடுக்கச் சொல்லிடுங்க" என்று உத்தரவிட்டார்.

  அதைக்கேட்ட ராகவன், தான் அழைத்து வந்த பெண்ணிற்கும் இதுபோல் ஒன்றுமில்லாமல் இருக்கவேண்டும்என்று மனதில் வேண்டிக்கொண்டான்.

  சற்று நேரத்தில் உதவி டாக்டர் ஒருவர் பிரபாகரிடம் "டாக்டர், இந்த சார் அழைச்சிட்டுவந்தப் பெண்ணின் 'எக்ஸ்-ரே' படம் வந்திருச்சு. அதனை வாங்கிப் பக்கத்தில் இருக்கும் மற்றொரு சோதனைப் பெட்டியில் வைத்து விளக்கினை எறியவிட்டு அதிக நேரமாகவே ஆராய்ந்தார். அதனைப் பார்க்க பார்க்க ராகவன், கவலையின் உச்சத்திற்கேப் போய்விட்டான். அதன்பின் "ராகவன், அவளுக்கு பயப்படும்படியாக ஒண்ணுமாகலே. எல்லாமே சரியாய்தான் இருக்கு! இந்நேரம் அந்தப் பொண்ணுக்கு மயக்கம் தெளிந்திருக்கும். மேற்கொண்டு ஆகப்போவதை உடனே கவனி ராகவா" என்பதைக் கேட்டவுடன் அவன் மனதில் அதுவரையில் ஏற்றிவைத்திருந்த பல ஆயிரம் டன் சுமை இறங்கியதுபோல் உணர்ந்தான். அவன் இப்போது சாதாரண நிலைக்கு வந்தான்.

  "ராகவா, இந்த ரெண்டு எக்ஸ்-ரேயினைக் கவனிச்சியா? ஒண்ணு அழகு தேவதை, அழகு ரதி, இளைஞர்களின் கனவுக்கன்னி 'சிந்தாலாவின் மண்டையோடு! இன்னொன்று நீ அழைச்சிட்டு வந்திருந்த பெண்ணோட மண்டையோடு! இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்குன்னு நீயே சொல்லுஎன்றபோது அதுவரையில் லட்சியம் செய்யாத ராகவன் அவ்விருபடத்தினை நன்றாகப் பார்த்தான். இரண்டிற்கும் எவ்வித வேறுபாடு இல்லாமல் இருப்பதைக் கவனித்தான்.

  "இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது" என்றான்.

  "பார்த்தாயா. மனிசனுக்குள்ளே இருக்கிற எலும்புகளின் அமைப்பு எல்லாருக்கும் ஒரேமாதிரியாகத்தான் இறைவன் படைச்சிருக்கான். ஆனா வெளியே பார்க்கிற அழகு இருக்கே வெறும் சதையும் தோலாலும் ஆனது. அந்த அழகுக்கு மனிதர்கள் அடிமையாகி வாழ்க்கையில் எவ்வளவு துயரப்படுறாங்க? வெளி அழகு நிலையானதல்ல. அதை மனிதன் உணர்ந்துட்டா போதும்" என்று முடிக்க, அந்த வசனங்கள் ராகவன் காதுகளில் நுழைந்தபோது அவன் தலையில் யாரோ நறுக்கென்று கொட்டியதுபோல் உணர்ந்தான். அன்றுதான் அவன் உண்மையான அழகைப்பற்றிய பாடத்தை கற்றுக்கொண்டான். அதனைப்பற்றிய அறிவும், புத்தியும் வந்தது.

  டாக்டரிடம் விடைபெற்ற ராகவன், உடனடியாகத் தான் அழைத்து வந்திருக்கும் பெண்ணை அவளுடைய வீட்டில் ஒப்படைத்தபிறகு, இன்றைக்கு அவனுக்காகப் பார்க்கப்போகும் பெண் எப்படியிருந்தாலும் 'சம்மதம்' என்று தனது அம்மா, அப்பாவிடம் தெரிவித்து தனது 'பெண் பார்க்கும்' படலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் அவள் இருக்கும் அறைக்கு விரைந்தான்.

  அங்கு, தான் கொஞ்சமும் நினைத்துப்பார்த்திராதபடிப் பலர் அவளைச் சூழ்ந்திருந்தனர்.

  "தம்பி, நீங்க யாரு பெத்த பிள்ளையோ நல்ல நேரத்திலே என் பொண்ணோட உசிரைக் காப்பாத்தீட்டீங்க. ஆயுசு பூரா உங்களை மறக்கவே மாட்டேன்" என்று பெண்ணின் அப்பா ராகவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.

  அப்போதுதான் அங்கு தனது அப்பா அம்மாவும் இருப்பதைக் கவனித்தான்.

"அப்பா, நீங்க எப்படி இங்கே..?" என்று ஆச்சரியமாய்க் கேட்டான்.

  "எனக்கு வேண்டப்பட்ட ஒருவர், நீ ஒரு பொண்ணை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரி பக்கம் போனதாக என்னிடம் சொன்னார்" என்று தனது வரவிற்கானக் காரணத்தை விளக்கினார்.

  "ராகவா, இப்ப நீ காப்பாத்தினப் பொண்ணு, வேறு யாருமில்லே. இன்றைக்கு உனக்காக ஒரு பொண்ணைப் பார்க்கப் போறோம்னு சொன்னோமே அந்தப் பொண்ணுதான் இவள்!" என்று மேலும் வியப்பை வெளிப்படுத்தினார் விநாயகம்.

 அதைத் கேட்ட பெண்ணின் அப்பா, "இந்தத் தம்பியா உங்கள் பையன்? நல்லவேளையாக நீங்க பெண் பார்க்க வரலே. அப்படி வந்திருந்தா கட்டாயம் என் பொண்ணை வேண்டாம்னுதான் சொல்லியிருப்பீங்க!" என்று புதிராக ஒரு குண்டைத் தூங்கிப் போட்டார்.

  "ஏங்க நீங்களே உங்க பொண்ணைப் பத்தி இப்படிப் பேசுறீங்க?" என்று விநாயகம் கவலையாக வெளிப்படுத்தினார்.

   "நான் இப்படி பேசுறதுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் முதலாவது உங்கப் பையனோட அழகு! இவரோடு எம் பொண்ணை ஒப்பிட்டா ஏணி வச்சா கூட எட்டாது. இரண்டாவது பொண்ணைப் பார்க்குறதுக்கு முன்னாடியே அபசகுணமாக இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அதனாலே..."
     
  "மாமா" என்று உணர்ச்சிவசப்பட்டு சப்தமாய் அழைக்க அனைவரும் வியப்பாக ராகவனைப் பாரத்தார்கள்.

  "மாமா, நான் இப்போ உறுதியாச் சொல்றேன். உங்கப் பொண்ணைக் கட்டிக்க எனக்கு முழு சம்மதம்! நானும் நேற்றுவரை அழகு அழகுன்னு கண்மூடித்தனமா, இல்லே இல்லே மூடத்தனமா இருந்திடேன். உங்க பொண்ணு மூலமா அழகுன்னா என்னான்னு தெரிஞ்சுட்டேன். வெறும் சதையிலே இருக்கிற அழகு உண்மையில்லேன்னு இப்போ உணர்ந்துட்டேன். இதுவரை எனது அழகு பைத்தியத்தாலே பல பெண்களை இழிவுபடுத்திட்டேன். அதற்கு எனக்கு மன்னிப்பே கிடையாது. இனிமேலும் இந்தமாதிரி தவறு செய்வதாக இல்லே. அழகுக்கு நான் வகுத்திருந்த இலக்கணத்தை அடியோடு மறந்துட்டேன்" என்று மனமுவந்து ராகவன் பேசியதைக் கேட்ட அப்பெண் உட்பட எல்லோரும் ஆனந்தத்தால் கண்கலங்கி நின்றனர்.

  "மாபிள்ளை, நீங்க எம் மகளோட உசிரைக் காப்பாத்தினதோடு வாழ்க்கையும் தர்றதா சொல்றீங்களே! அதைவிட மகிழ்ச்சி எங்களுக்கு வேறென்ன இருக்கு?”

  "எனக்கு முழு சம்மதமாக இருந்தாலும் பொண்ணுக்குச் சம்மதமா?ன்னு அவளோட அபிப்பிராயத்தைக் கேளுங்க அம்மா?" என்று ராகவன் தனது அம்மாவிடம் காதைக் கடித்தான். 
 
  "நீ என்னம்மா சொல்றே? என் பையனைப் பிடிச்சிருக்கா?"

  இந்தக் கேள்விக்கு தன் வாயால் பதில் சொல்லாமல் அவள் நாணத்தின் மூலம் அக்மார்க் முத்திரைபோல வெளிப்படுத்தினாள்.

                                                ************************************** **************************************