Pages
- Home
- * வெற்றி தரும் வழிகள் (101)
- * உள்விதி மனிதன் (49)
- * எனது புதுக்கவிதைகள் (293)
- * புதிய விளையாட்டுகள் (9)
- * சிரிப்பு மாத்திரைகள் (10)
- * விளையாட்டு புதிர்கள் (4)
- * ISO 9001-உயர்வுக்கு வழி (12)
- * லாபம் தரும் தொழில்கள்(5)
- * தன்னம்பிக்கை இரகசியங்கள் (87)
- *மனம், யோகா, தியானம், ஆன்மீகம், WHO AM I? ANSWER (7)
- * நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)
- *குறு, சிறுகதைகள் (49)
- * நாட்டு நடப்புகள் (171)
- * விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)
- * இது நம்ம டி.வி சானல் (8)
- * வெற்றிப் படிகள் (89)
- வாழ்க்கைக்கான கதைகள் (1)
- * தொழில் நிர்வாக வழிகாட்டி (14)
- * UMASK - FOR EASY TYPING (13)
- * மிதுனமதி (குறுநாவல்)
- * WORLD LANGUAGES PROTECTOR- UMASK (4)
- BLOG CREATION (வலைப்பூ)?
- * MY IDEAS & INNOVATIONS (31)
- பருத்தியில் புரட்சி (4) (குறுநாவல்)
- From 24.1.26 BRM by ADITI Group - Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. Krishnamurti- A compilation (upto 41 Pages -28.3.26)
Friday, 24 November 2023
Monday, 6 November 2023
29.10.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 16 - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " - சிறந்த கவிதைக்கு விருது - கவிதை நூல் வெளியீடு
29.10.2023 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ", சிறந்த கவிதை வாசித்தோருக்கு விருது வழங்கல், முனைவர் வரதராசன் கவிதை நூல் வெளியீடு. நாள் 29.10.2023.
மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்" என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா,( இளையாங்குடி ) , பெரி . கரு .சம .சமயக்கண்ணு, அஞ்சூரியா க .செயராமன் ஆகியோர் கவி பாடினார்கள் .
மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் வாழ்த்துரையாற்றி, விருது வழங்கினார் ..பொறுப்பாளர்கள் தவிர மற்ற கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று கவிதை வாசித்தோருக்கு விருது வழங்கினார்கள் . கவிஞர்கள் பெரி .கரு .சம .சமயக்கண்ணு, கி . கோ.குறளடியான்,அஞ்சூரியா க .செயராமன் ஆகிய மூவரும் "புரட்சித் தமிழ் முரசு" விருது பெற்றனர் .முனைவர் வரதராசன் எழுதிய "கவிஞன் பார்வையில் நடப்பும் நவீனமும் "" கவிதை நூல் வெளியிடப்பட்டது.
படங்கள் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .
மாதுரை கவிஞர் பேரவை மதுரை
சிந்தனைக் கவியரங்கம் 29-10-2023
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
அறம்சார்ந்த உயிரனைத்தும்,
அன்புவழியில் நடைபயில ,
புறக்கடையில் நுழைந்தே ,
பகட்டாகும் சாதீயத்தீயாகிடுதே
பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் ,
பேதமை வேதனையாகுதே,
மறபுநிலை சீர்திருத்தம்,
மனமதுவே செம்மையானால்
தனதுநிலை உயர்வாகும்,
தினமதுவே மறைந்திடுமே ,
மனதினிலே சமமானால்,
முத்தான செந்தமிழன்
கல்வியெனும் ஒளிவிளக்கில் ,
கலங்கரையாய் வழிகாட்டிடுமே,
எல்லோரும் சமமென்றால்,
ஏற்றத்தாழ்வும் மறைந்திடுமே
வல்லமைதரும் நல்வாழ்வும்,
வாழ்வியலில் நிலைத்திடுமே,
இல்லாத பொய்மைவாதம்,
இருந்தநிலை மறைந்திடுமே ,
பாடுகின்ற கவியரங்கம்,
புவியெங்கும் நிலையுயரும்,
ஓடுகின்ற நதிநீரும்,
ஒற்றுமைக்கு வழிகாட்டும்,
நீடுபுகழ்வாய்மை வெல்லும் ,
நல்லோர்களின் குடும்பப்பாசம் ,
ஆடுகின்ற மாற்றஙகளால்,
அகிலமெங்கும் மனிதநேயமாக்குமே
முனைவர் மு.க பரமசிவம்,
பேரையூர் கல்லுப்பட்டி
மதுரைமாவட்டம், அலைபேசி, 97865
























































