Pages

Showing posts with label அனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு - புதுக்கவிதை THIS NEW YEAR CREATES GOOD CONFIDENT. Show all posts
Showing posts with label அனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு - புதுக்கவிதை THIS NEW YEAR CREATES GOOD CONFIDENT. Show all posts

Sunday, 30 December 2012

அனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு - புதுக்கவிதை THIS NEW YEAR CREATES GOOD CONFIDENT

அனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு - புதுக்கவிதை 


THIS NEW YEAR CREATES GOOD CONFIDENT 


மதுரை கங்காதரன் 

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் ஒவ்வொருவர் அவரவர் வழியின்படி பலவாறு கணித்துக் கூறுவார்கள் . அதாவது இந்த தொழில் செய்பவர்கள் நிறைய லாபம் பெறுவார்கள். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 'பம்பர்' பரிசு காத்திருக்கின்றது. தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட் முதலீடு செய்பவர்கள் பல மடங்கு பெருகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகப் பதவி காத்திருக்கின்றது. இந்த கல் மோதிரம் அணிந்திருப்பவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும். இந்த கட்சி ஆட்சியை எட்டிப் பிடிக்கும். இந்த கல்வி படிப்பவர்களுக்கு அவர்களைத் தேடி பெரிய வேலை வரும். இந்த வாஸ்து செய்தால் தொழிலில் வெற்றி தரும். இதைச் செய்தால் அது கிடைக்கும். அதைச் செய்தால் இது கிடைக்கும் என்று காதுக்கு குளிர்ச்சியாக பேசியும்  , கண்ணுக்கு  இதமாக பார்த்தும், படித்தும் இருக்க அள்ளி அள்ளி வீசுவார்கள். அவர்கள் சென்ற வருடமும் அப்படிச் சொன்னவர்களே.


இவ்வாறு கணிப்பவர்கள் எல்லாம் கற்ற அறிஞர்கள் கிடையாது.முற்றும் துறந்த முனிவர்களும் கிடையாது. பல ஆண்டுகள் தவம் செய்த ஞானிகள் கிடையாது. எல்லா அனுபவங்களைப் பெற்ற வல்லவர்கள் கிடையாது. பணத்தை வாங்காமல் உள்ளதை கூறும் நல்லவர்களும் கிடையாது. அனைவரும் பணம் கொடுக்கும் பக்கம் சாயபவர்கள். சுயநலம், பேராசை மனிதர்கள்.

ஆனால் உண்மையில் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கும். உங்களுக்கு உங்கள் மேல் நம்ம்பிக்கை இருந்தால்....

அந்த நம்பிக்கைகள் ஒன்று திரண்டால் 
கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும்.


மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிக்கும் 
அன்னியரிடத்தில் கையேந்தும் நிலை மாறும்.
ஊழல் இல்லாத நல்லாட்சி மலறும்.
மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஓங்கும் 

லஞ்சம் வாங்காமல் நேர்மையாக வேலை நடக்கும் 
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஒழியும் 
கல்வி அறிவு எல்லோரிடத்திலும் சிறக்கும் 
அனைத்து தொழில்களும் சிறப்புடன் விளங்கும் 

தடையில்லா மின்சாரம் எல்லோருக்கும் கிடைக்கும் 
டெங்கு இல்லாத ஆரோக்கியம் எங்கும் நிலைக்கும் 
நதி நீர் இணைப்பு ஆரம்பமாகும் 
அன்னிய ஆதிக்கம் செலுத்துவதை மறையும் 

தீவிரவாதம் உலகெங்கும் பரவுவதை தடுக்கும் 
மக்களுக்கு நன்மை தரும் அறிவியல் தழைக்கும் 
இலவசம் கொடுத்து முட்டாளாக்கும் அரசியல் களையும் 
சாதி வெறி தூண்டும் அரசியல்வாதிகளை ஒதுக்கும் 

மதவாத சத்திகள் நிரந்தரமாய் அழியும் 
ஏழைகளின் வாழ்வு என்றும் சிரிக்கட்டும் 
சட்டம் ஒழுங்கை மக்கள் தவறாமல் கடைபிடிக்கட்டும் 
நீதி வழுவாத ஆட்சி கொடுக்க முயற்சிக்கட்டும் 

உண்ணாவிரதம் கதவடைப்பு வேலைநிறுத்தம் தடுக்கும் 
மனித உரிமைகளை அனைவரும் மதிக்கட்டும் 
பிரிவில்லாத ஆன்மீக சக்தி இதயத்தில் நுழையும் 
ஏமாற்றும் கயவர்களை கடலில் தூக்கி எரியட்டும் 

என்றும் மகிழ்ச்சி அலைகள் ஓயாதிருக்கட்டும் 
எங்கும் நறுமணம் கமழும் சுவாசக் காற்று வீசட்டும் 
எல்லோரும் நன்மைகள் பல கிடைக்கட்டும் 
அந்த நம்பிக்கை இந்த புத்தாண்டு எல்லோருக்கும் தரட்டும்.

நன்றி !


வணக்கம் !