Pages

Showing posts with label உலகத் தமிழ் சங்கத்தில் மாமதுரைக் கவிஞர் பேரவைக் கவியரங்கம். Show all posts
Showing posts with label உலகத் தமிழ் சங்கத்தில் மாமதுரைக் கவிஞர் பேரவைக் கவியரங்கம். Show all posts

Friday, 21 April 2017

உலகத் தமிழ் சங்கத்தில் மாமதுரைக் கவிஞர் பேரவைக் கவியரங்கம்

நேற்று 20.4.17, மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி  வரை மாமதுரைக் கவிஞர் பேரவைக் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்க நிகழ்ச்சியின் சில மின் படங்கள்.  

   

எனது கவிதை 

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 

       
தமிழ் வணக்கம்

மூத்தத் தமிழை
மூப்பு இல்லாமல்
முழுமையாய்க் காத்திட
முன்னறி தமிழ்த்தாயே வணக்கம்!

தனித்தமிழுக்கு வந்த சோதனை
தமிழறிஞர்கள் சந்திக்கும் வேதனை
தடுக்கப்படுதே பல்வகைச் சாதனை
தமிழ்தாயே தரவேண்டும் சிந்தனை

தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்

உணவு வேண்டும் உயிர் வாழ
உணர்வு வேண்டும் தமிழ் வாழ
மருந்து வேண்டும் தமிழ் காக்க
மதிப்பு வேண்டும் தமிழ் சிறக்க

குயில் கூவும் இனிமையினுள்
குறைக்கும் நாய் சப்தம் எதற்கு?
ஆருயிர் தமிழ் இனிமையினுள்
அயல்மொழிச் சொற்கள் எதற்கு?

தரணியில் எட்டாவது அதிசயம்
தனித்தமிழில் நீ பேசினால்!
சொக்கும் தமிழில் பேசினாலே
காக்கப்படும் தமிழ்மொழி தன்னாலே.

தமிழ்த்தாயேக் கதறினாலும்
தமிழன் மண்ணில் புரண்டாலும்
தமிழ் தமிழ் எனக் கத்தினாலும்
தமிழ்மொழித் தானாக வளராது.

தனிமனிதன் மடிவது விதியாலே
தமிழ்மொழி அழிவது சதியாலே.
கனவு வேண்டும் தமிழ் காக்க
துணிவு வேண்டும் தமிழன் வாழ.

தமிழ்ப்பணி தொய்வில்லாமல் நடக்க
துணிவானச் செயல்கள் வேண்டும்
தனித்தமிழ் முழக்கம் நித்தமும்
திசையெங்கும் ஒலித்திட வேண்டும்.

பழையது பேசியே காலத்தை வீணாக்காமல்
புதியது புகுத்தி தமிழ்மொழியைக் காத்திட
அந்நியமொழிக் கலப்பு அடியோடு ஒழித்திட
அறிஞர்கள் தனித்தமிழைப் பரப்பிட வேண்டும்.