Pages

Showing posts with label ஒன்றிருந்தால் உண்டாகும் மகிழ்ச்சி 'ONE' IS ENOUGH FOR HAPPY LIFE PUTHU KAVITHAI. Show all posts
Showing posts with label ஒன்றிருந்தால் உண்டாகும் மகிழ்ச்சி 'ONE' IS ENOUGH FOR HAPPY LIFE PUTHU KAVITHAI. Show all posts

Wednesday, 16 January 2013

ஒன்றிருந்தால் உண்டாகும் மகிழ்ச்சி 'ONE' IS ENOUGH FOR HAPPY LIFE PUTHU KAVITHAI

ஒன்றிருந்தால் உண்டாகும் மகிழ்ச்சி 

'ONE' IS ENOUGH FOR HAPPY LIFE

PUTHU KAVITHAI 
மதுரை கங்காதரன் 


ஒரு புன்னகை முகத்தின் மலர்ச்சி 
ஒரு பார்வை இதயத்தில் குளிர்ச்சி 

ஒரு வார்த்தை மனதில் கிளர்ச்சி 
ஒரு ஸ்பரிசம் உடலில் எழுச்சி 

ஒரு அன்பு வாழ்கையில் வளர்ச்சி 
ஒரு அழகு உடலில் கவர்ச்சி 

ஒரு நம்பிக்கை செய்ய வைக்கும் முயற்சி 
ஒரு அறிவு வென்று விடும் சூழ்ச்சி 

ஒரு சுறுசுறுப்பு போகச்செய்யும் தளர்ச்சி 
ஒரு அனுபவம் கொடுக்கும் முதிர்ச்சி 

ஒரு பொறுமை தவிர்க்கச் செய்யும் அதிர்ச்சி 
ஒரு உழைப்பு வாழ்கையில் கிடைக்கும் புகழ்ச்சி 

ஒரு அன்பு மறையச் செய்திடும் இகழ்ச்சி 
ஒன்றிருந்தால் வாழ்கையில் உண்டாகும் மகிழ்ச்சி