Pages

Showing posts with label தனித்தமிழ் இயக்கம் - 101ம் ஆண்டு விழாக் கவியரங்கம். Show all posts
Showing posts with label தனித்தமிழ் இயக்கம் - 101ம் ஆண்டு விழாக் கவியரங்கம். Show all posts

Monday, 29 January 2018

தனித்தமிழ் இயக்கம் - 101ம் ஆண்டு விழாக் கவியரங்கம்


தனித்தமிழ் இயக்கம் - 
101ம் ஆண்டு விழாக் கவியரங்கம் 




      நான் வாசித்த கவிதை 
        மதுரை கங்காதரன் 
புகை பிடித்தல் உயிர் குடிக்கும்
பகை எழுத்தால் தமிழ் ஒடியும்
                           
ஆதியில் திருத்திடாதத் தீயபழக்கம்
பாதியில் திருத்திட முடியுமா?
முன்னாளில் அனுமதித்த பிறஎழுத்துகள்
இன்னாளில் தடுத்திட முடியுமா?

ஈடில்லாத் தமிழ்மொழி அமுதமுள்
ஈயாகப் பிற எழுத்துகள் அமரலாமா
மாசில்லாக் காற்று வெளியில்
மாசான புகையைக் கலக்கலாமா?

நகைக்கப் பயன்படும் உதடுகள்
புகைக்கப் பயன்படுத்த விரும்பலாமா?
சிங்காரச் சின்னமானத் தமிழ்மொழி
சிந்திக்காமல் சீரழிக்க விடலாமா?

அயலானிடம் கற்றப் பழக்கங்கள்
ஆங்கில மொழியும் புகையும்
உதடுகளில் உறவாடும் வேளைகள்
உரிமையும் உடலையும்  இழக்கலாகுமா?

புகைபிடித்தால் உடல் அழியும்
பகை எழுத்துகளால் தமிழ் அழியும்
புகைபிடித்தால் குடும்பமே அழியும்
பகை எழுத்துகளால் தமிழர்களே அழிவர்.

       **************************



அன்று எடுத்த மின்படங்கள் இதோ ...


 
































































































































வணக்கம்