Pages

Showing posts with label தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் How Tamil Language spread worldwide?. Show all posts
Showing posts with label தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் How Tamil Language spread worldwide?. Show all posts

Sunday, 17 May 2015

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் - How Tamil Language spread worldwide?


தமிழைக் காக்கத் தகுந்த வழிகள்
How Tamil Language spread worldwide? 
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்

ஆதியில் பிறந்த தமிழ் மொழிக்கு
ஆபத்து வந்ததே இந்த நாளில்

பாதியில் முளைத்த மொழிகளுக்கு
வீதிகளில் தேரோட்ட ஊர்வலமா?

வேள்வித் தீயாய் விளங்கிய தமிழை
கேள்வி கேட்க நாதியில்லையா?

மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மாறாது மணம் வீசத் தான்செய்யும்

கொஞ்ச நேரம் சூட்டி மகிழலாம்
வஞ்சக வலையில் சிக்கலாமா?

செம்மொழி தமிழுக்கு வந்ததே சேதாரம் 
'சிம்' மொழியாய் சுருங்கிவிட்டதே காதோரம் 

எதையும் பொசுக்கும் அக்னி குஞ்சு
வதைபடும் காட்சி கண்டு சகிக்கலாமா?

கள்ளிப் பாலை தமிழ்பாலில் கலக்கலாமா?
கள்ளம் கபடமில்லாத் தமிழை நஞ்சாக்கலாமா?

ஆரம்பப் பள்ளி முதல் இறுதிப் பள்ளி வரை
உயிர் மூச்சாய் தமிழ் காக்கபட வேண்டும்

தமிழுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டும்
தமிழ் படைப்பு போட்டிகள் நடத்திட வேண்டும்

புதிய படைப்போடு தமிழ் நின்று விடாது
பட்டித்தொட்டிகளில் ஒலிக்க வேண்டும்

தனித்தமிழ் தரும் ஊடகங்களை போற்றிட வேண்டும்
கனிவான கலைச்சொற்கள் அகராதி தந்திட வேண்டும்

எளிய தமிழ் கணினி விசைப்பலகை வேண்டும்
எல்லோரும் தமிழை எளிதாய் கற்க வேண்டும்

கணினியில் தனித் தமிழை வளர்க்க வேண்டும்
வலைதளத்தில் தமிழ் விரிந்து பரவ வேண்டும்

நடமாடும் ஊர்திகளில் தமிழ் பதிக்க வேண்டும்
நம் தாய் மொழி தமிழென  உணரவேண்டும்

செம்மொழி தமிழ் மாநாடு நடத்திட வேண்டும்
எம் மொழி தமிழென்று முழங்கிட வேண்டும்

முகாரி ராகம் பாடும் தமிழ் மொழிக்கு
பூபாள ராகம் பாடச் செய்திட வேண்டும்

படைப்போம் தமிழில்

பரப்புவோம் தமிழை...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&