Pages

Showing posts with label தமிழ் நாட்டில் தமிழ் கொலையா? - TAMIL LANGUAGE IS ALIVE?. Show all posts
Showing posts with label தமிழ் நாட்டில் தமிழ் கொலையா? - TAMIL LANGUAGE IS ALIVE?. Show all posts

Saturday, 15 November 2014

TAMIL LANGUAGE IS ALIVE? - தமிழ் நாட்டில் தமிழ் கொலையா?

  

தமிழ் நாட்டில் தமிழ் கொலையா?
TAMIL LANGUAGE  IS ALIVE?
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
 
மாமதுரை கவிஞர் பேரவை மற்றும் உலகத் தமிழாய்வு சங்கம்
நடத்திய கவிதை அரங்கம்

நாள்: 9.11.14   இடம்: மகாஜன மேன்சன், மதுரை.


மனிதக் கொலைக்கு 'தூக்கு தண்டணை'!
தமிழ்க் கொலைக்கு 'சிவப்பு கம்பளமா'?
சங்கத் தமிழுக்கு 'சங்கு' ஊதிவிடாதே'!
முத்தமிழுக்கு 'முடிவுரை' எழுதிவிடாதே'!

              

தனித்தமிழ் பேச தடுமாறுது தமிழனின் நாக்கு
தினசரியில் சரியுது தமிழனின் மதிப்பு
திரைப்படத்தில் கரையுது தமிழனின் வாசம்
சின்னத்திரையில் சின்னாபின்னாமாகுது தமிழ் கலாச்சாரம்.
                 
அரைகுறை மருத்துவனால் அரங்கேறுது கொலைகள்
அரைகுறை பொறியாளரால் அல்லாடுது கட்டமைப்புகள்
அரைகுறை ஆசிரியரால் அவதிப்படுவது மாணவர்கள்
அரைகுறை தமிழால் அழிந்து போகுது தமிழ் மொழி!
             
மாற்றான் மொழியால் தமிழ் தோற்கலாமா?
விசுவரூப தமிழ்மொழி வாமனனாக மாறலாமா?
வீரம் பதித்த தமிழ் மண்ணில் சோரம் போகலாமா?
அந்நிய முகமூடி கிழித்து தமிழ் முகம் காட்டுவாயா?
                
பொறுத்தது போதும் தமிழா!
அந்நிய எலும்பு துண்டுக்கு ஆசைபடாதே தமிழா!
தமிழ் மொழிக்கு 'நன்றி' செழித்திடு தமிழா!
தமிழ் நாட்டில் தமிழ் பேசி தமிழனாய் வாழ் தமிழா!

வளமான தமிழ் மொழிக்கு பலமான அடித்தளம் போடு தமிழா!
உன்னத  தமிழ் மொழி உயர்வுக்கு தனித்தமிழ் பேசிடு தமிழா!
தமிழ் நாட்டில் நடக்கும் தமிழ் கொலைகளைத் தடுத்திடு தமிழா!
தமிழ் நாட்டில் சுத்த தமிழ் பேசி அசத்திடு தமிழா!
               
ஓங்குக தமிழ் மொழி!
வளர்க தமிழ் மக்கள்!
வாழ்க தமிழ்நாடு!
ஒளிர்க இந்தியா ! 
########################################################################