Pages

Showing posts with label நீயும் நானும் அழியும் காலம் YOU AND I CAN LIVE!. Show all posts
Showing posts with label நீயும் நானும் அழியும் காலம் YOU AND I CAN LIVE!. Show all posts

Sunday, 21 December 2014

நீயும் நானும் அழியும் காலம் - YOU AND I CAN LIVE!

நீயும் நானும் அழியும் காலம்

       YOU AND I CAN LIVE!
                      புதுக்கவிதை
          மதுரை கங்காதரன்
           
ஆசையால் அழியலாம்
ஆசை பேராசையாய் மாறும் போது

அன்பால் அழியலாம்
அன்பு அம்பாய் மாறும் போது

பாசத்தால் அழியலாம்
பாசம் வேசமாய் மாறும் போது

நட்பால் அழியலாம்
நட்பு நடிப்பாய் மாறும் போது
    
விதியால் அழியலாம்
விதி சதியாய் மாறும் போது

குடியால் அழியலாம்
குடி குடியாய் மாறும் போது

பொறுமையால் அழியலாம்
பொறுமை பொறாமையாய் மாறும் போது

புகையால் அழியலாம்
புகை பகையாய் மாறும் போது

அமிழ்தத்தினால அழியலாம்
அமிழ்தம் அதிகமாய் மாறும் போது

ஏழையினால் அழியலாம்
ஏழை கோழையாய் மாறும் போது
    
உறவால் அழியலாம்
உறவு துறவாய் மாறும் போது

மலையும் அழியலாம்
மலை எரிமலையாய் மாறும் போது

மிதவாதமும் அழியலாம்
மிதவாதம் தீவிரமாய் மாறும் போது

இஷ்டமும் அழியலாம்
இஷ்டம் கஷ்டமாய் மாறும் போது

உடலும் அழியலாம்
உடல் உயிராய் மாறும் போது

நம்பிக்கையும் அழியலாம்
நம்பிக்கை அவநம்பிக்கையாய் மாறும் போது

நல்லது அழியலாம்
நல்லது பொல்லாததாய் மாறும் போது

      

நீயும் நானும் அழியலாம்
நீயும் நானும் எதிரிகளாய் மாறும் போது

நீயும் நானும் வாழலாம்
நீயும் நானும் நண்பர்களாய் மாறும் போது

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^