Pages

Showing posts with label புதுமையான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் HAPPY NEW YEAR GREETINGS - புதுக்கவிதை. Show all posts
Showing posts with label புதுமையான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் HAPPY NEW YEAR GREETINGS - புதுக்கவிதை. Show all posts

Sunday, 23 December 2012

புதுமையான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் HAPPY NEW YEAR GREETINGS - புதுக்கவிதை


புதுமையான (2013) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
HAPPY NEW YEAR GREETINGS 



புதுக்கவிதை 



மதுரை கங்காதரன் 




இன்று வாழ்க்கை பயணம் 
தொடரும் வருடத்தில் புது நாள் 
ஒரு மைல் கல் கடந்த நாள்

மகிழ்ச்சியை அனுபவிக்க 
ஆரம்ப நாள்..

உங்கள்  வாழ்வில் இன்ப மலர் 
பூத்துக் குலுங்கும் நாள்.
இந்த இனிய நன்னாளில் 


உங்கள்  நிழலாய் மகிழ்ச்சிகள்  
என்றும் தொடரட்டும்.


நிறைமதி போல் சந்தோசம் 
எப்பொழுதும் பொங்கட்டும்.


வண்ணப் பூக்களாய் எண்ணங்கள் 
நிறைவுடன் விளங்கட்டும்.

கடலலையாய் உறவுகள்  உங்களை 

என்றென்றும்  வாழ்த்தட்டும்.

தென்றல் உங்கள்  வாழ்க்கைப் பயணத்திற்கு 
தொடர்ந்து வழிகாட்டட்டும்.

கண்ணாடி மன மழலை போல் கவலைகள் 
மனதிலிருந்து களையட்டும்.

குயில்கள் உன் செவியில் கானம் 

இனிமையாய் இசைக்கட்டும்.

நட்சத்திரங்கள் உங்கள் இதயத்தில் 
மல்லிகை பூச்சரம் சூடட்டும்.

முத்தென வீழும் மழைத்துளிகள் உங்கள் 

மென் மனதை நனைக்கட்டும்.

வசந்தகால மலர்கள் முகம் மலர்ந்து மணம் 
நறுமணம் வீசட்டும்.


வானவில்லின் ஏழு வண்ணங்கள் இதய வாசலில் 

தோரணமாய் அணிவிக்கட்டும்.

காலை வான மேகங்கள் புத்தாடை ஆடையாய் 

இருந்து அலங்கரிக்கட்டும் 

வானத்து தேவர்களாய் பெரியவர்கள் உங்களை  
உள்ளன்புடன் வாழ்த்தட்டும்.

கார்த்திகை விளக்காய் இனிவரும் நாளும் 
என்றும் வாழ்க்கை பிரகாசிக்கட்டும்.




புத்தாண்டு பயணத்தில் 
நீங்கள் நினைத்தது  நடக்கும் 

நீங்கள் விட்டது தேடி வரும் 
நீங்கள் கொண்ட லட்சியம் கை கூடும் 
நீங்கள் நம்பிக்கை வையுங்கள் 

எல்லாம் இனிதே நடக்கும்.