Pages

Showing posts with label 25.2.18 கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை - தமிழ்சிதைந்தால்.... Show all posts
Showing posts with label 25.2.18 கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை - தமிழ்சிதைந்தால்.... Show all posts

Monday, 26 February 2018

25.2.18 கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை - தமிழ்சிதைந்தால்...


கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை - தமிழ்சிதைந்தால்...


தமிழ்சிதைந்தால் தமிழினமே சிதைந்து போகும்
புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 
                                    
உடல் உறுப்புக் குறையுள்ளவர்களை  
உலகில் மாற்றுத்திறனாளி என்பார்
தமிழைச் சிதைத்துப் பேசுபவர்களை 
தரணியில் மாற்றுத்தமிழாளி என்பாரா?

கசடறக் கற்காதத் திருக்குறள்
கோயிலில் இசைக்காதத் திருவாசகம்
ஐந்தில் பயிலாத ஆத்திச்சூடி
அறிவில் ஏற்றாத ஐம்பெரும்காப்பியம்

இயற்றமிழ் மெல்ல அழிகின்றது
இசைத்தமிழ் ஏதோ இருக்கின்றது 
நாடகத்தமிழ் நலிந்து போகின்றது
நாவிழந்து நற்றமிழ் துடிக்கின்றது.

இலை உதிர்ந்த மரம் மீண்டும் செழிக்கும்
இளம்பிறை நிலவு மீண்டும் முழுநிலவாகும்
சிரமிழந்தால் உயிர் மீண்டும் எழுமா?
சிதைந்தால் தமிழ் மீண்டும் சிறக்குமா?   

தமிழ் இனமே தமிழைச் சிதைக்கின்றது
தமிழ் மானம் இழப்பதை சிரிக்கின்றது  .
மறத்தமிழர்கள் மரத்த தமிழர்களா?
முதன்மை மொழி மறந்த தமிழர்களா

                     *********************
மின்படங்கள் 





























































%%%%%%%%%%%%%