Pages

Showing posts with label HAPPINESS WAYS - மகிழ்ச்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம். Show all posts
Showing posts with label HAPPINESS WAYS - மகிழ்ச்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம். Show all posts

Wednesday, 20 November 2013

HAPPINESS WAYS - மகிழ்ச்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்

மகிழ்ச்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம் 
புதுக்கவிதை 

மதுரை கங்காதரன் 

தாய் குழந்தைக்கும் கொடுப்பது ஒரு வித மகிழ்ச்சி 
குழந்தை பேசும் மழலை தாய்க்கு மகிழ்ச்சி 

விரும்பிய பொருள் வாங்குவதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சுற்றுலா இடங்களுக்கு செல்லுவதில் மகிழ்ச்சி 

சிலருக்கு படிப்பதில் அலாதியான மகிழ்ச்சி 
சிலருக்கு பேசுவதில் ஒருவகையான மகிழ்ச்சி 

நினைத்த குறிக்கோளை அடைந்ததில் மகிழ்ச்சி 
வேண்டிய நபரை சந்தித்தலில் மகிழ்ச்சி 
ஒரு சிலருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி 
அதுபோல் சிலருக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி 

தெரிந்ததை இலவசமாக சொல்லித் தருவதில் மகிழ்ச்சி 
தெரியாததை கற்றுக்கொள்வதில் சிலருக்கு மகிழ்ச்சி 

இறைவனை பாடுவதில் வணங்குவதில் மகிழ்ச்சி 
பதவி வகிப்பதில் பலருக்கு மகிழ்ச்சி 

கோடி கோடியாய் சம்பாதிப்பதில் மகிழ்ச்சி 
ஏமாற்றுவதில் சிலருக்கு மகிழ்ச்சி 

வியர்வை சிந்தி உழைப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சோம்பேறியாய் சுற்றுவதில் ஒரு சிலருக்கு மகிழ்ச்சி 

பிடித்தவர்களிடம் அன்பு காட்டுவதில் சிலருக்கு மகிழ்ச்சி  
செல்லப்பிராணிகளிடம் பழகுவதில் மகிழ்ச்சி 
பிறரை சிரிக்க வைப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
மற்றவர்களை அழவைப்பதில் ஒரு சிலருக்கு மகிழ்ச்சி 

மக்களை அல்லாட வைப்பத்தில் சிலருக்கு மகிழ்ச்சி 
கலைகளை கற்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 

விளையாட்டு விளையாடுவது பலருக்கு மகிழ்ச்சி 
எழுதுவதில் சிலருக்கு மகிழ்ச்சி 

வலைதளத்தில் நட்பை வளர்ப்பதில் மகிழ்ச்சி 
பிடித்த நடிகர் படத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி 

விரும்பிய நபர்களுடன் மொபைலில் பேசுவது மகிழ்ச்சி 
நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதில் மகிழ்ச்சி 

பகிர்ந்து கொள்வதில் சிலருக்கு மகிழ்ச்சி 
அதிசயங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி 
இனிய சொற்களை, பாடல்களை கேட்பதில் மகிழ்ச்சி 
நறுமணத்தை நுகருவதில் மகிழ்ச்சி 

ருசியாக சாப்பிடுவதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சிலருக்கு ருசியாக சமைப்பதில் மகிழ்ச்சி 
அரட்டை அடிப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சிலருக்கு தூங்குவதில் மகிழ்ச்சி 

கனவு காண்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
வண்ண உடைகளை அணிவதில் மகிழ்ச்சி   

என்றும் மகிழ்ச்சியாய் இருங்கள் 
மகிழ்ச்சியை பிறருக்குத் தாருங்கள் ..

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))