Pages

Showing posts with label KAMARAJ – THE KING MAKER - பச்சைத் தமிழன் காமராசர். Show all posts
Showing posts with label KAMARAJ – THE KING MAKER - பச்சைத் தமிழன் காமராசர். Show all posts

Monday, 20 July 2015

KAMARAJ – THE KING MAKER - பச்சைத் தமிழன் காமராசர்!


   KAMARAJ – THE KING MAKER
 பச்சைத் தமிழன் காமராசர்
           புதுக்கவிதை
      மதுரை கங்காதரன் 

தன்னம்பிக்கையின் இமயமாய் நிற்பவர்
தன்மானத்தில் கவரிமானாய் கருதுபவர்
தன்னலம் கருதா மாணிக்கமாய் ஒளிர்பவர்
தர்மத்தில் கொடைவள்ளலாய் விளங்குபவர்.

அரசியலுக்கு புது இலக்கணம் தந்தவர்
அறிவுக் கல்வியை ஏழைகளுக்கு அளித்தவர்
அனைத்திற்கும் அருகதை கொண்டவர்
அவரே ஏழைப் பங்காளன் நம்ம காமராசர்!

தென்னக காந்தியாம் நம்ம காமராசர்
செயல் வீரராம் நம்ம காமராசர்
படிக்காத மேதையாம் நம்ம காமராசர்
அரசியலின் அரசராம்  நம்ம காமராசர்.

செயலில் பச்சைத் தமிழர்
திடத்தில் கறுப்பு வைரம்
இரக்கத்தில் வெள்ளை குணம்
சிந்தனையில் நீலவானம்.

நிலையான ஆட்சிக்கு உதவிய வீரத் தமிழர்
தொழிற்சாலைகளை உருவாக்கிய புரட்சித் தமிழர்
அணைகளைக் கட்டி நீர்வளம் பெருக்கிய பாமரத் தமிழர்
தமிழகத்தை தலை நிமிரச் செய்த பச்சைத் தமிழர்.

சொல்லும் செயலும் ஒன்றாய் கொண்டவர்
வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டிலே கழித்தவர்
பொதுவாழ்விற்காக திருமணத்தை தவிர்த்தவர்
உயர்ந்த பண்பில் உத்தமராய் திகழ்ந்தவர் காமராசர்.

படியுங்கள் காமராசர் வாழ்க்கை வரலாற்றை
நல்வழி காட்டுமே இளைஞர் சமுதாயத்தை
அழிக்கலாமே அரசியல் தரித்திரங்களை
படைக்கலாமே புதியதோர் சரித்திரத்தை!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$