Pages

Friday 15 September 2023

27 .8.2023 மாதுரைக் கவிஞர் பேரவை -14 - தாய்மொழிக் கெல்லாம் தாய்மொழி தமிழே! - முனைவர் இரா.வரதராசன் - புத்தக வெளியீடு

 






நாள் 27 .8.2023. மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம்,துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துனைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் 'தாய்மொழிக் கெல்லாம் தாய்மொழி தமிழே!' "என்ற தலைப்பில், மணியம்மை பள்ளியில் கவியரங்கம்.நடந்தது . பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் இரா .இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி .கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், அஞ்சூரியா க .செயராமன், மு .இதயத்துல்லா, புலவர் .முருகுபாரதி, பெரி .கரு .சம .சமயக்கண்ணு ,சாந்தி திருநாவுக்கரசு, இராம.பாண்டியன், நா .குருசாமி, எம் .வேல்பாண்டியன் ஆகியோர் கவிதை படித்தனர். . துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன் எழுதிய 'மணக்கும் கவிதை பூக்கள்' நூல் வெளியிடப்பட்டது . புதுவை கவியரங்கில் " கலைஞர்" பற்றிய கவிதை பாடி நூலும், பாராட்டு சான்றிதழும் பெற்ற மாமதுரை கவிஞர் பேரவையைச் சேர்ந்த கவிஞர்பேராசிரியர் சக்திவேல் ,கவிதாயினி ச .லிங்கம்மாள், கவிஞர்மு .இதயத்துல்லா, கவிஞர்அஞ்சூரியா க .செயராமன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர் .ஊடகத்துறையில் தமிழ் விருது பெற்ற கவிதாயினி சாந்தி திருநாவுக்கரசும் பாராட்டுப் பெற்றார் .படங்கள்: நன்றி புகைப்படக் கலைஞர்,ரெ.கார்த்திகேயன் .



தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே!
- கவிஞர் இரா. இரவி
*****
தாயின் வயிற்றிலிருக்கும்போதே கற்கும் மொழி
தாய்மொழி போல் மற்ற மொழி புரிவதில்லை!
தாய்மொழியில் சிந்தித்தால் சாதனைகள் புரியலாம்
தாய்மொழியில் படித்தவர்கள்தான் சாதனையாளர்கள்!

மயில்சாமி அண்ணாத்துரை படித்தது தாய்மொழியில்
மட்டற்ற அறிவியலாளர் சிவன் பயின்றதும் தாய்மொழியே!
மாமனிதர் அப்துல்கலாம் பயின்றது தாய்மொழியில்
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் தமிழ் பயின்றால் !

உலகமொழிகளில் அனைத்திலும் தமிழ்சொற்கள்
உலகிற்கு சொற்கள் தானம் தந்த மொழி தமிழ்மொழி!
ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள்
அந்நிய மொழிகள் அனைத்திலும் தமிழ்ச்சொற்கள்!

சந்திரயான்களின் சாதனையாளர்கள் பயின்றது தாய்மொழி
சாதிக்க உற்றுளி உதவியது உன்னத தாய்மொழி!
வனிதா சுப்பையா, அருணன். வீர.முத்துவேலன்
வழிவழியாக பயின்றது ஆரம்பக்கல்வி தமிழில் !

சந்திரயான் சாதனைகளுக்கு காரணம் தமிழ்மொழி
சகலரும் அறிந்திடுங்கள் அற்புத மொழி தமிழ்மொழி!
உலகில் எல்லா மூலையிலும் ஒலிப்பது தமிழ்மொழி
ஒரு நாடு கூட தமிழ் ஒலிக்காத நாடே இல்லை!

உலகம் முழுவதும் பரந்து விரிந்தது தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலமாக விளங்குவது தமிழ்மொழி!
தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே முதன்மை
தாயைப்போல காத்திடுவோம் நம் செம்மொழி தமிழை!

*****************













தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழே!
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்

நதிகளுக்கெல்லாம் தாய்நதி யாதென
நாம் யாவரும் அறியார் 
தாய்மொழிக்கெல்லாம் தாய்மொழி தமிழென
தரணியில் யாவரும் அறிவர்.

நடைபெறும் தொல்பொருள் அகழ்வாய்வு
நற்றமிழே தொன்மைக்கு ஆதாரம் 
அறிஞர்களின் பன்மொழிக்கூறு ஆய்வில்
அருந்தமிழின் வேற்சொற்கள் ஏராளம் .

ஆதித்தமிழ் அர்த்தமுள்ள மொழி
எளிய உச்சரிப்புள்ள எளிய மொழி
அழகு வடிவமுள்ள அழகு மொழி
இனிமை ஒலியுள்ள இனிய மொழி

செம்மொழி தரத்தில் வளர்ந்த தமிழ்
சிறப்பு இழந்து தேய்ந்து வருகின்றதே 
தமிழின் உச்சரிப்பும் கலப்பும் கேலியாகுதே 
தமிழுக்குத் தமிழனே எதிரி ஆகலாமா? 

கண்டுகொள்ளாத மொழிகள் பற்பல
காலாவதியாகி காலத்தில் புதைந்தனவே
கவனித்தில் கொண்டு தமிழைக் காப்பாற்று
கொஞ்சமேனும் தமிழின்பால் அக்கறை செலுத்து...
                                           ***************