Pages

Monday 29 October 2018

28.10.18 கட்டமைப்புத் தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே! - புதுக்கவிதை



    கட்டமைப்புத் தமிழ்மொழியின்
   கவசத்தை உடைக்காதே!
         புதுக்கவிதை 
         மதுரை கங்காதரன் 

அடித்தளம் ஆட்டம் கண்டால்
உயர்தளம் உறுதியாய் நிற்குமா?
அருந்தமிழ் கவசம் உடைந்தால்
அதனின் கட்டமைப்பு நிலைக்குமா?

தமிழினிது சொல்லினிது பொருளினிது
தேனமுது தெள்ளமுது சுவையமுது
அடுக்குமொழியில் அழகாய் அலங்கரிப்பார்
அல்லல்படும் தமிழை கண்டுகொள்ளார்.

வீட்டுநாயை வீதியில் விட்டு விட்டால்
வீணர்களும் கல்லா லடிக்கத் தயங்குவாரோ
கட்டமைப்புத் தமிழின் கவசத்தை உடைத்தால்
கடன் வாங்கிய மொழிகளும் கலந்துவிடுமே.

முன்வாசலில் தமிழெங்கள் உயிரென்பார்
பின்வாசலில் ஆங்கிலமே உயர்வென்பார்
மேடையில் எழுப்பிய தமிழ் முழக்கம்
நடைமுறையில் தந்திட ஏனோ தயக்கம்.

சரிக்குச்சமமாய் கலக்கும் பிறமொழிகள்
சரிவுக்கு வித்திடுமே தமிழ்மொழிக்கு
கனியோடு கல்லைக் கலப்பதால்
கனியின் சுவை வந்திடுமா கல்லுக்கு?
            ********************


Monday 22 October 2018

21.10.18 மின்படங்கள் - தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை - 10வது கிளை - புதுக்கோட்டை



21.10.18 மின்படங்கள் - தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை - 
10வது கிளை - புதுக்கோட்டை 


தனித்தமிழைப் போற்றுவோம் -
தமிழ்மொழியை அரியனையில் ஏற்றுவோம்
மதுரை கங்காதரன் 
புதுக்கவிதை

உனைத் தாங்குவது தமிழ் தமிழா
அதை காப்பது கடமை தமிழா
பிறமொழி கலப்பது மடமை தமிழா
பிறழாமல் பேசுவது தூய்மை தமிழா.

தனித்தமிழ் தங்கமென அறிவாய் தமிழா
தரத்தில் அங்கமென உணர்வாய் தமிழா
தனித்தமிழ் சங்கமெனப் பதித்தாய் தமிழா
தடுத்தால் சிங்கமெனப் பாய்வாய் தமிழா.

எம்மொழியும் நன்மொழி அன்றோ தமிழா
நம்மொழியும் செம்மொழி அன்றோ தமிழா
எம்மொழியிலும் மூத்தமொழி அன்றோ தமிழா
தம்மொழியும் தமிழ்மொழி அன்றோ தமிழா.
 
காணும் காட்சியெல்லாம் காட்சியாகாது தமிழா
கலப்பு மொழியெல்லாம் மொழியாகாது தமிழா
பேசும் பேச்செல்லாம் பெருமையாகாது தமிழா
பிறமொழி எல்லாம் தாய்மொழியாகாது தமிழா.

தமிழின் பெருமையினை உயர்த்திடு தமிழா
தரணியில் சிறப்பினை நிலைத்திடு தமிழா
தனித்தமிழ் மதிப்பினை பரப்பிடு தமிழா
தாய்மொழி சிந்தனை வளர்த்திடு தமிழா.




நல்லாசிரியர்    கவிஞர்    பேராசிரியர்.மு.க.பரமசிவம்
1-1-921  கருப்பணசாமி  கோவில்தெரு,  
பேரையூர்  நகர் பேரையூர்  அஞ்சல், பேரையூர்  வட்டம்,  
மதுரை  மாவட்டம் 
தமிழ்நாடு  -  625703  
அலைப்பேசி  எண்  :  9786519558
  
புதுக்கோட்டை     தமிழ்ப்பட்டறை    இலக்கியப்  பேரவை     கிளை       துவக்கவிழா       கவியரங்கம்

             தாய்த்தமிழை   அரியணையில்  ஏற்றுவோமே
  
அமுதமொழித் தமிழினையே அமைப்பினிலே உயர்ந்ததையே
இமயமென இருப்பதையே இயங்கிவரும் உயிர்ப்பதையே! தமிழினத்தின் மூச்சதையே தன்மானப் பேச்சதையே
எமதுநாட்டின் அரியணையில் ஏற்றிடுவோம் ஒருங்கிணைந்தே!

உருவாகிச் சிறந்திருக்கும் உருப்படியாய் மலர்ந்திருக்கும்
பெருவாரித் தமிழினத்தின் பிறப்பினிலே கலந்திருக்கும்!
மருவற்ற தனித்தமிழாய் மாண்புடனே எழுந்திருக்கும்
அருந்தமிழை நம்தாயை அரியனையில் ஏற்றிடுவோம்!
  
புலவர்தம் நாவினிலே புனிதர்தம் மனதினிலே
இலக்கியத்தின் வடிவினிலே இசைத்தமிழின் ஒலியினிலே! வலம்புரியாய் பிறந்தெழுந்த வனப்பான தமிழ்த்தாயை
நிலம்புகழ அரியணையில் நிறுத்திவைத்துத் தொழுவோமே!
  
பிறர்நாட்டார் போற்றுகிற பழகுதமிழ் இலக்கியங்கள்
சிறப்பாலே சிலிர்த்திருக்கும் செம்மொழியாய் நிறைந்திருக்கும்! உறவான தமிழ்மொழியை உயிரான தமிழ்மொழியை
அறிவுடனே வணங்கிடுவோம் அரியணையில் ஏற்றுவோமே!
  
தேமதுரத் தமிழாகி திகட்டாத தேனாகி
பாமரரும் படித்தவரும் பருகுகிற அமுதாகி!
மாமதுரைத் தமிழ்ச்சங்கம் முடியரசி எனஇருந்த
ஆம்இன்றே ஒருங்கிணைவோம் அரியணையில் ஏற்றுவோமே!

                                                                       ****************
மின்படங்கள் ....



 





 


 





   
























































 









































































































 நன்றி