'தேர்தல்' ஒரு விளையாட்டா? மக்களின் இரட்சகனா ?
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
விளையாட்டில் நடப்பது !

விளையாடும் அணிகள் வீறுகொண்டு விளையாடுவார்கள்
ஆடுகளத்தில் நடுவர்(கள்) தீர்ப்பு சொல்லுவார்(கள்)
ரசிகர்களைப் பற்றி விளையாடுபவர்கள் கவலை கொள்கிறார்களா?
ரசிகர்கள் தான் விளையாட்டு வீரர்களைப் பற்றி விமர்சிக்கிறார்கள்!
மக்களுக்காகவா விளையாடுகிறார்களா?
தனக்காகத் தானே விளையாடுகிறார்கள் !

பணத்திற்காகத் தானே விளையாடுகிறார்கள் !
விளம்பரத்திற்க்காகத் தானே விளையாடுகிறார்கள்!
விளம்பரம் , எண்கள் கொண்ட கால் கை உடைகள்
கண்களைக் கவரும் ரசிகர்களின் கும்மாளங்கள்
அவர்கள் வெற்றியடைந்தால் பிடிக்க முடிவதில்லை!
தோல்வியடைந்தாலும் கவலை படுவதில்லை!

மீண்டும் களத்தில் பலருடன் ஆடுகிறார்கள் !
முடிவுகளைப் பொறுத்தே புகழும் பெறுகின்றார்கள்!
அணியின் வீரர்கள் நன்றாக ஆடினாலும்
அதன் தலைவருக்குத் தான் புகழும் பெருமைகளும்!
மக்களுக்கு இது ஒரு வெட்டிப் பொழுதுபோக்குச் செலவு
ஏதாவது மக்களுக்கு பயன் படியாக இருக்கின்றதா?

வாழ்க்கைத் தரம் உயர்த்துவதாக இருக்கின்றதா?
மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றதா?
தேர்தலில் நடப்பது ?

வேட்பாளர்கள் பணம் கொடுத்து தொகுதியை பெறுகின்றனர்
கட்சிகள் வீறுகொண்டு பிரச்சாரம் செய்வார்கள்
தேர்தல் ஆணையம் தீர்ப்பு விதிமுறைகள் விதிக்கும்
அதற்கு மதிப்பு கொடுக்காமல் கட்சிகள் வேலை செய்யும்
மக்களைப் பற்றி கட்சிகள் கவலை கொள்கிறார்களா?
மக்கள் தான் கட்சிகளைப் பற்றி விமர்சிகிறார்கள்!
மக்களுக்கு சேவை செய்யவா கட்சிகள் இருக்கின்றது ?
பின் ஏன் விலைவாசிகள் வானத்தைத் தொடுகின்றது?
விவசாயிகள் ஏன் தற்கொலைகள் செய்து கொள்கிறார்கள்?
ஏழைகளின் வாழ்வு கேள்விக்குறியாய் இருக்கின்றது?
லஞ்சம் ஊழல் ஏன் தலை விரித்து ஆடுகின்றது ?
பிடிபட்டாலும் சிறை சென்று வெளியில் வந்துவிடுகிறார்கள் !
பணத்திற்காகத் கட்சிகள் நடத்துகிறார்கலா ?
சுயநலத்திற்குத் தானே கட்சிகள் ஆட்சி செய்கின்றன !
பரப்பரப்பாக செய்திகளைக் கொடுத்து காசாக்குகிறார்கள் !
கூட்டணிக்காக பேரம் நடத்துகிறார்கள்
அள்ளி வீசும் வாக்குறுதிகள் வாரிக்கொடுக்கும் இலவசங்கள்
பணத்தால் தங்கள் சின்னத்தில் குத்தும் ஓட்டுகள்
கட்சி வெற்றியடைந்தால் பிடிக்க முடிவதில்லை!
தோல்வியடைந்தால் கவலை படுவதில்லை!
மீண்டும் தேர்தல் களத்தில் புதிய கூட்டணிகளுடன் !
முடிவுகளைப் பொறுத்தே புகழும் பெறுகின்றார்கள்!
கட்சி தொண்டர்கள் நன்றாக உழைத்தாலும்
கட்சித் தலைவருக்குத் தான் புகழும் பெருமைகளும்!
மக்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காக ஆக்கிவிட்டார்கள்
மக்களின் குறைகளுக்கு நிரந்தரமான தீர்வு கொடுக்கிறார்களா?
வாழ்க்கைத் தரம் உயர்த்துவதாக இருக்கின்றதா?
மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க அலசி ஆராய்கின்றார்களா?
இப்போது சொல்லுங்கள் 'தேர்தல்' ஒரு விளையாட்டா?
ஆமாவா? இல்லையா?என்று !

****************************** ****************************** **********************
நன்றி...
வணக்கம்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& &&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment