Pages

Friday, 19 January 2018

Energy Executor Vitamin E (In Tamil & English)


Energy Executor Vitamin E

ஆற்றலை அதிகரிக்கும் வைட்டமின் ஈ 




Nature has given us a great variety of food related things to maintain our body well and protect us from illness by providing healthy and energy. For that, Vitamins are the most important. The reason behinds the name Vitamin, it denote as Vital + Amine. This means, the 'Amine' chemical is very important to accelerate our body growth in all aspects. Let's see how the Vitamin E helps us in many ways to create positive effect on our health? It is not true that all Vitamin E related foods are high in price. Through this article we will come to conclusion that in our everyday life there are many foods containing Vitamin E are cheap in cost too. Let us see, which ways are the Vitamin E in the foods supported our body to keep healthy.  



          Skin is the essential one to our body because it saves our body in many ways. Very first one, out of our six senses the source of emotional intelligence works through the skin only. Vitamin E keeps our skin soft and shining. Second gift is our hair! Can we able to take it easy about our hair growth? The beauty hair is the lighthouse of our body. Also it is not only showed the beauty but also youth too.   Perhaps if an aged or adult man has black hair, then no one judge his real age. Is it not? Such a wonderful effort is given by the Vitamin E. Next blood intensification! If the blood is hygienic, then the working of heart will be fine. In addition, our life span will be increased because it saves from cancer like disease. Vitamin E is supported to reduce the suffering caused during the natural death incident. 


             If you want to live and stay healthy, Vitamin E is the most essential one. Will you know in which are the foods such Vitamin E available? It is common; in the development of science it serves Vitamin E in the form of medication. This type is applicable for old age or adult because they can’t have sufficient biting and digestion capacity. But youngster can take it as such as the natural form of foods; so that naturally their body will become full of health and blossom. Let we see what Vitamin E contain in natural foods? Don’t think that I'm going to say something new. After you read this article, let's see without our knowledge how our body does get Vitamin E from our daily consumed foods. Be aware and understand this clearly and share it with others without fail.

Now we will see, how do we take natural foods?

Almond
Many of us have started to use this. Eat three or four nuts daily. For aged people, soak three or four almond in the drinking water and eat it in the next day morning after remove the outer brown coat.  If you can’t bite, powder it by using mixer. Take it as small amount as such or adds two or three spoon in the milk and drinks it.


Greens
After pick the leaves from greens, wash is thoroughly with water. Boil and make it as soup by adding pepper slightly. Or combine with some ingredients and make it as Subji or Gravy.


Peanut
You can eat as such simple as peanut or in the form of powder. Eat ten nuts enough per day.


Butter
Apply it on hot idly, dosai, bun or even chappathi.  You may eat it as such a spoon.

Wheat germs
It can be eaten as roti, chappathi or poori if you fry in groundnut or sunflower oil.


Papaya
First remove the outer coat by knife carefully. Then cut it half. Now remove all seeds which are in the middle portion. Next cut it in slice. Eat one or two pieces.

Bell pepper
Most of this food stuff will probably be used in daily routine. It has used by making subji, gravy etc.  

Groundnut or sunflower oil
If you use this oil in the cooking, your body will acquire fresh, energetic and healthy.

       One thing you must always remember, It is not necessary that all of above things have not to be eaten in a day. It is enough any one or two things may be used daily. Then only you will not get bore during eating. 

*********************

         ஆற்றலை அதிகரிக்கும் வைட்டமின் ஈ



         இயற்கை நமது உடலை நல்லமுறையில் பேணவும் நோயிலிருந்து நம்மை காக்கவும் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலைத் தருவதற்காகவே நமக்கு அளப்பரிய உணவு வகைகளைத் தந்துள்ளது. அவற்றில் வைட்டமின்கள்  முக்கியமானதாகும்.  வைட்டமின் என்கிற பெயர் வந்ததிற்கான காரணம், வைடல் (Vital) + அமைன் ( Amine) ஆகும். அதாவது நமது வளர்ச்சிக்கான உந்துசக்திக்கு 'அமைன்' வேதிப்பொருள் மிக இன்றியமையானது. பலவகையான வைட்டமின்களில் வைட்டமின் - ஈ (Vitamin - E ) நமக்குப் பலவழிகளில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாய் எவ்வாறு இருக்கின்றது என்பதைப் பார்ப்போம். இந்த வைட்டமின் - ஈ சத்தானது, விலை உயர்ந்த உணவு வகைகளில்தான் இருக்கின்றது என்கிற கூற்று உண்மை அல்ல. நாம் அன்றாடம் பயன்படுத்தும் விலை குறைந்த உணவு வகைகளிலும் அவை இருக்கின்றது என்பதை இந்த கட்டுரையின் வாயிலாகத் தெரிந்துகொள்வோம்.



       இயற்கை அளிக்கும்  உணவுவகைகளில் வைட்டமின் - ஈ நமக்கு எவ்வகைகளில் துணைபுரிகின்றது என்பதை அறிவோமா?. நமது உடலில் தோல் மிகவும் அவசியமானது. ஏனென்றால் அவைதான் நமது உடலைப் பலவழிகளில் காக்கின்றது. ஆறறிவுகளில் உணர்வு அறிவானது தோல் மூலமே வேலை நடைபெறுகின்றது. அந்த தோலுக்கு மென்மையும், பளபளப்பும் இந்த வைட்டமின் - ஈ தான் தருகின்றது. அடுத்து தலை முடி! தலைமுடி தானே, என்று நம்மால் அசட்டையாக இருக்க முடிகின்றதா? நம் உடல் அழகுக்குத் தலைமுடி ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கின்றது. அது அழகையும், இளமையும் காட்டும் நட்சத்திரமாக நிலாவாகவும் இருக்கின்றது. ஒருவேளை வயதானவருக்குக் கருகருவென்றுக் கறுப்பாகத் தலைமுடி இருந்துவிட்டால் அவரின் உண்மை வயதினைச்  சொன்னாலும் நம்ப மாட்டார்கள். இது உண்மை  தானே ! அத்தகைய அழகைக் கொடுப்பது இந்த வைட்டமின் - ஈ தான். அடுத்து இரத்த விருத்தி! இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் இருதயம் நன்றாக இயங்கும். அதோடு புற்றுநோயிலிருந்து நமது உடல் காக்கப்பட்டால் நமது ஆயுள் நீண்டு இருக்கும். இதனால் இயற்கை  மரணத்தில் ஏற்படும் உடல் அவஸ்த்தைகள் வெகுவாகத் தவிர்க்கலாம். அதற்கு துணைபுரிகின்றது இந்த வைட்டமின் - ஈ.


          வாழ்க்கை வளமுடனும் நலமுடனும் இருக்கவேண்டுமானால் இந்த வைட்டமின் - ஈ மிக அவசியம். அப்படிப்பட்ட வைட்டமின் - ஈ எந்த வகை உணவுகளில் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வோமா? பொதுவாக என்னதான் அறிவியல் வளர்ச்சி மருந்து வடிவில் வைட்டமின் - ஈ யைக்  கொடுத்தாலும் இயற்கையில் கிடைக்கும் உணவுவைகளை நாம் உட்கொண்டால்தான் நமது உடல் முழு ஆரோக்கியத்துடனும் பூரிப்புடனும் இருக்கும். வயதானவர்கள் மருந்து வடிவில் உட்கொள்ளலாம். அதுவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி! அப்படி இயற்கையான உணவுகளில் வைட்டமின் - ஈ எதில் உள்ளது என்பதைப் பார்ப்போம். நான் ஏதோ புதிதாக சொல்லப்போகிறேன் என்று நீங்கள் நினைக்கவேண்டாம். இக்கட்டுரையினைப் படித்த பிறகு உங்களை அறியாமல் நீங்கள் உட்கொள்ளும் உணவு வகைகளில் எவ்வாறு வைட்டமின் - ஈ சத்து உங்கள் உடலில் சேருகின்றது என்பதை அறிந்துகொள்ளலாம். இதனைப் புரிந்துகொண்ட பின்னே மற்றவர்களிடத்தில் அதன் அருமையையும் ஆற்றல்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்போது வைட்டமின் - ஈ கொண்ட இயற்கை உணவுகளை எப்படி உட்கொள்ளலாம் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

பாதாம் பருப்பு 
சமீப காலமாக இதனை பலர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். தினமும் மூன்று அல்லது நான்கு பருப்புகளை நன்றாக வாயால் மென்று சாப்பிடலாம். அல்லது முதல்நாள் இரவு குடிக்கும் நீரில் ஊறவைத்து மறுநாள் அதன் தோல் உரித்துச் சாப்பிடலாம். கடிக்க முடியாவிட்டால் மிக்ஸியில் அரைத்து மாவுபோன்று பண்ணி அதை இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவு சாப்பிடலாம். அல்லது பாலில் கலந்தும் குடிக்கலாம்.

கீரைகள் 
கீரையில் உள்ள காம்புகளை நீக்கிவிட்டபின் அதன் பச்சை இலைகளைக் கழுவி வேகவைத்து மிளகு சீராகப் பொடி போட்டு சூப் செய்து குடிக்கலாம். அல்லது கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம். 

வேர்க்கடலை 
சாதாரண வேர்க்கடலை அப்படியே வாயால் மென்று அல்லது பொடி செய்து சாப்பிடலாம். ஒரு நாளைக்கு பத்து எண்ணம் போதுமானது. 

வெண்ணெய்
இதை சூடான இட்லி, சப்பாத்தி, தோசைகளில் தடவிச் சாப்பிடலாம். அல்லது சூடான பன்ரொட்டியில் தடவிச் சாப்பிடலாம். வேண்டுமென்றால் ஒரு ஸ்பூன் அளவு அப்படியே கூட சாப்பிடலாம்.  

கோதுமை 
இதை தோசையாகவோ ரொட்டியாகவோ சுட்டு அல்லது கடலை எண்ணையில் பொரித்துப் பூரியாகவோ சாப்பிடலாம்.

பப்பாளி 
இதில் உள்ள தோலைச் சீவிவிட்டு, நடுவில் உள்ள விதைகளை எடுத்துவிட்டு ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடலாம்.

குடை மிளகாய் 
அநேகமாக இந்த உணவு பொருள் எல்லாவற்றிலும் பயன்படுத்துவார்கள். இதனை கூட்டு, பொரியலில் சிறிதளவு பொடியாய் நறுக்கி எண்ணையில் வதக்கியபின் அதில் போட்டுச் சாப்பிடலாம்.
 
கடலை எண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் 
பொரிப்பதற்கு இந்த எண்ணெய் பயன்படுத்தினால் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் ஆற்றலும் கிடைக்கும்.

        மேற்கூறிய அனைத்தும் ஒரேநாளில் சாப்பிடவேண்டும் என்பது இல்லை. ஏதாவது ஒன்று அல்லது இரண்டு வகையினை பயன்படுத்தலாம். அப்போதுதான் சாப்பிடும்போது சலிப்பு ஏற்படாது. 

****************************

1 comment: