Pages

Thursday, 16 August 2018

15.8.18 நேதாஜி தேசிய இயக்கம் தங்க மயில் ஜுவல்லரி இரத்ததான முகாம் மின்படங்கள்



15.8.18  நேதாஜி தேசிய இயக்கம் - தங்க மயில் ஜுவல்லரி - இரத்ததான முகாம்  - மின்படங்கள் 
நேற்று 15.8.18 மதுரை குஜராத்தி சமாஜத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு  நேதாஜி தேசிய இயக்கம் மற்றும்  தங்க மயில் ஜுவல்லரி பி லிட் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் இனிதே நடந்தது. சுமார் 150 குருதி கொடையார்கள் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனை மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை அருமையாக ஏற்பாடு செய்திருந்தனர். பலர் ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தார்கள்.
அத்துடன் மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் நடந்தது.  அன்று பலதரப்பில் பல சேவைகள் செய்தனர். வருபவர்களுக்கு காலை, மதியம் சுவையான உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

  
அன்று நான் வாசித்த புதுக்கவிதை 
சுதந்திர வானில் ...

ஏன்? என்றால் சிறைவாசம் 
எதிர்த்து நின்றால் சிரச்சேதம் 
ஆங்கிலேயர் அதிகார ஆட்சி 
அஞ்சாத தியாகிகளால் ஓடிபோச்சு.

சுதந்திரம் பெற்ற இந்நாடு 
சுகமானச் சொர்க்கமாய் இல்லை
சொந்த நாட்டிலே நம்மக்கள் 
சோடை போவது தெரியவில்லை

ஊழல் இல்லாத ஆட்சி மலருமா?
இலஞ்சம் வாங்காத அரசு திகழுமா?
விலைவாசி ஏற்றத்தைத்  தடுக்குமா?
விவசாய உற்பத்தியைப் பெருக்குமா ? 

நீர் மேலாண்மை பெருக்க ஆசை
நில ஆகாய மாசு குறைக்க ஆசை
தொழில் கட்டமைப்பு விரிவாக்க ஆசை
தோழர்களுக்கு  வேலைவாய்ப்புத் தர ஆசை.  

ஏழையின் கனவு பலிக்கவேண்டும் 
எளியோர் வாழ்வு சிறக்கவேண்டும் 
இலவசங்கள் கொடுத்து ஏமாற்றுவதை 
இனிமேல் இல்லாமல் ஆக்கவேண்டும். 

சாதி மதம் ஒற்றுமை பேண வேண்டும்
மொழி இனம் வேற்றுமை களைய வேண்டும்  
ஆண் பெண் உரிமை சமமாக வேண்டும் 
நாடு வீடு மேன்மை அடைந்திட வேண்டும்.

நாட்டுப்பற்றை நன்றாய் வளர்த்திடுவோம்
'நம்நாடு இந்தியா' என முழங்கிடுவோம்
நாட்டைக்காக்க வீரம் விதைத்திடுவோம் 
நல்லநாடென்று உலகம் போற்றச் செய்திடுவோம்.

வாழ்க சுதந்திரம்!
வெல்க இந்தியா!!







































































































































































வணக்கம் 

No comments:

Post a Comment