Pages

Saturday 9 October 2021

கு.கி.கங்காதரனின் தமிழைக் காக்க வந்த ‘உமாசுக்’ (UMASK) கட்டுரை By ப.பிரியதர்ஷினி M.E (சுற்றுச்சூழல் மேலாண்மை)

கு.கி.கங்காதரனின் தமிழைக் காக்க வந்த

‘உமாசுக்’ (UMASK)  

கட்டுரை  By ப.பிரியதர்ஷினி M.E (சுற்றுச்சூழல் மேலாண்மை) 



3.10.2021 அன்று அதிதியின் 60வது பரிசீலனை நிகழ்ச்சியின்போது இப்புத்தக வெளியீடு நடந்தது 





























































கு.கி.கங்காதரனின் தமிழைக் காக்க வந்த உமாசுக்’ (UMASK)

கட்டுரை  By 

.பிரியதர்ஷினி M.E (சுற்றுச்சூழல் மேலாண்மை)



கவிபாரதி கு.கி.கங்காதரன்  

வயதில் சிறியவளான நான், இவரைப் பற்றி எழுதுவது மிகையானாலும் 'அதுதான் சரி' என்றே கருதுகிறேன். ஏனென்றால், இவருடைய வாழ்க்கையில் இவர் மேற்கொண்ட அசராத முயற்சிகளும், அதனால் அடைந்த வெற்றிகளையும் நாம் படிக்கும்போது, நமக்குள் ஒரு உத்வேகம் எழுவதோடு, நம் உடலில் தெம்பையும், மனதிற்குப் புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவர், அன்பு காட்டுவதில் அன்னையாகவும், அறிவு வழங்குவதில் தந்தையாகவும், என்னைப்போல் பல இளைஞர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆசானாக இருந்து நல்வழி காட்டுபவராகவும் திகழ்ந்து வருகிறார் என்பதை நன்றியுடன் பதிவு செய்கிறேன். இவரது குறிக்கோள், 'வாழும்போது வாழைமரமாய் மக்களுக்கு உதவ வேண்டும். வீழும்போது விதையாய் விழுந்து வரும் காலத்திலும் உதவிட வேண்டும்' என்பதே! முக்கியமாக அவருடைய உமாசுக்’ (UMASK) கண்டுபிடிப்பு, இக்காலத்திற்கும், வருங்கால சந்ததியினருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். அதன் ஆக்கத்தைப் பற்றி எழுதுவதில் நான் பெருமைபடுகிறேன்.

எனக்கு, கவிபாரதி கு.கி.கங்காதரன் அவர்களின் அறிமுகம் மாமதுரைக் கவிஞர் பேரவையில் கிடைத்தாலும், இவரைப் பற்றிய கூடுதல் விவரங்களை கணினித்தமிழ்- உமாசுக்’ (UMASK) நூல்,  மற்றும் இவரது வலைப்பூ மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அன்று உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த கவியரங்க  நிகழ்ச்சி எனக்கு நன்கு நினைவில் இருக்கின்றது. அவர் என்னிடத்தில் சில கேள்விகளைக் கேட்டார். அதாவது உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” என்று கேட்டார். நானோ நன்றாகத் தெரியும்!என்றேன். அப்படியென்றால், “உங்களுக்குக் கணினியில் தமிழ்த்தட்டச்சு (Tamil typing) செய்யத் தெரியுமா?” என்று கேட்டார். அந்த கேள்விக்கு நான் இவ்வாறு விளக்கமாகப்  பதிலளித்தேன். நான் தமிழ்த்தட்டச்சு பழகுவதற்குப் பெரும் முயற்சி எடுத்தேன். ஆனால் என்னால் முடியவில்லைஎன்றேன். அதற்குப் பல காரணங்களைச் சொன்னேன். கணினி விசைப்பலகையில் ஆங்கில எழுத்துகள்தான் நம் கண்களுக்குத் தெரியும்படி இருக்கின்றன. அதுவும் அகர வரிசையில் இல்லை. ஆகையால் எந்தெந்த ஆங்கில எழுத்துகளுக்கு  எந்தெந்த தமிழ் எழுத்துகள் வரும்? என்று ஞாபகம் வைத்துக் கொள்வது மிகமிகக் கடினமாக உள்ளது. ஏனென்றால் கணினித்தமிழில் உள்ள தமிழ் எழுத்துகள் ஆங்கில எழுத்துகளைப்போல அகர வரிசையில் இல்லாமல் அமைத்திருக்கிறார்கள்என்றேன்.

 

      அதன் பிறகு கவிபாரதி கு.கி.கங்காதரன் அவர்கள் என்னிடத்தில், ‘உமாசுக்இல் உள்ள கணினித்தமிழ்எழுத்துப்பலகையினைக் (Keyboard) காட்டினார். அதனைக் கண்டவுடன், எனது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. எனது மனமோ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அதற்கு காரணம் அதில் உள்ள தமிழ் எழுத்துகள் அகரவரிசையில் (Alphabet order) இருந்தன. உடனே எனது கை விரல்கள் தானாக தமிழ்த்தட்டச்சு செய்தது. ஆஹா! எவ்வளவு எளிமையாக இருக்கின்றது! யார் தயவும் இல்லாமல் பழகவும் முடிகின்றதே!என்று எண்ணி வியந்து போனேன்.


       இந்த உமாசுக்படைப்பின் பின்னனியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. அதனை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அதோடு அவரைப் பற்றிய சில குறிப்புகளையும் கொடுத்தால் கூடுதல் சுவையும் உண்டாகும் என்று நம்புகிறேன்.
 


       இவரது பெயர் கு.கி.கங்காதரன், ஊர் மதுரை, மாநிலம் தமிழ்நாடு,
 நாடு இந்தியா. இவரது தந்தை கு.நா.கிருஷ்ணமூர்த்தி, இவரது தாயின் பெயர் கு.கி.கல்பலதா. படிப்பு M.Sc வேதியியல். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் M.Sc வேதியியல் படித்துக் கொண்டிருக்கும் போது, தூத்துக்குடியில் இருக்கும் 'டாக்' (TAC) என்ற உரத்தொழிற்சாலையில் இவருடைய படிப்புக்குத் தகுந்த துறையிலே வேலை கிடைத்ததாலும், இவரது குடும்ப சூழ்நிலை காரணமாகவும் இவரால் தொடர்ந்து படிக்க முடியாமல், இவரது படிப்பைப் பாதியில் விட்டுவிட வேண்டியதாயிற்று. இவர் மதுரை, சௌராஷ்டிரா கல்லூரியில் B.Sc வேதியியல் பட்டப் படிப்பை முடித்தார். அப்பிரிவில், மூன்றாம் பகுதியில் (Part III) இருந்த பாடங்களில் அதாவது வேதியியல், இயற்பியல், தாவரவியல் ஆகியவற்றில் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் எடுத்ததால் இவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் அங்கு சேரவில்லை. ஏனென்றால், இவருக்கு வேதியியலில் 'முனைவர்' (Ph.D) பட்டம் வாங்க வேண்டும் என்கிற கனவும், குறிக்கோளும் இருந்தது. இருந்தாலும் இன்றளவில் இவரது புதுமையான கண்டுபிடிப்புக்காக உமாசுக்உட்பட இரண்டு பதிப்புரிமைகளும் (Copyright), இவரது புதல்வருடன் சேர்ந்து வடிவமைப்பில் நான்கு காப்புரிமை (Design patent) களும் பெற்றிருக்கிறார்.

         இவர் ஒரு பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், தர நிர்வாக தணிக்கையாளர் (ISO 9001 Lead Auditor), தன்னம்பிக்கை மற்றும் ஊக்குவிப்பு தரும் பயிற்சியாளர், தொழில் நிர்வாக ஆலோசகர், ‘அதிதிதொண்டு நிறுவனத்தில் ஒரு டிரஸ்டி, வலைப்பூ எழுத்தாளர், அதன் முகவரி:
 easyhappylifemaker.com. இதில் இவர் இதுவரையில் சுமார் 700ம் மேற்பட்ட தலைப்புகளில் எழுதியதை, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நான்கு லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்துள்ளனர்.

       கவிபாரதி கு.கி.கங்காதரன் அவர்களுக்கு தன் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்புமுனை, மதுரையில் இரு தினங்கள் நடைப்பெற்ற எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதே! அங்குதான் அவர் அறியாமலே அவருக்கு உமாசுக்கான தீப்பொறி உருவானது என்று சொல்ல வேண்டும். அம்மாநாட்டில் எழுத்தாளர்கள் பலர் பேசும்போது இன்றைய காலகட்டத்தில் புத்தகப் படைப்புகளைச் சந்தைபடுத்துவது மிகப்பெரிய சவாலாக இருகின்றதுஎன்றும், “பேரும் புகழுமிக்க எழுத்தாளர்கள்,
  தாங்கள் படைத்து அச்சிட்ட ஆயிரம் புத்தகங்களில் நூறு புத்தகங்களைக் கூட அவர்களால் விற்க முடியவில்லை என்பதே இன்றைய  யதார்ததம்" என்பதைத் தெரிவித்தனர். இது இவருக்குப் பெருத்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் உண்டாக்கியது என்றே சொல்ல வேண்டும்.


          ஆனால், அதே மாநாட்டில் ஓரிரு எழுத்தாளர்கள் பேசும் போது, “இன்றைய வாசகர்கள், குறிப்பாக இளைஞர்கள், அச்சிட்ட புத்தகங்களைப் படிப்பதற்குப் பதிலாக, கணினி மற்றும் கைபேசியில் படிப்பதையையே விரும்புகிறார்கள்என்று பதிவு செய்ததை இவர் கவனிக்கத் தவறவில்லை. அவ்வெழுத்தாளர்கள், “காலத்திற்குத் தக்கவாறு படைப்பாளர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும், இது கணினி காலத்தின் கட்டாயம்! என்றும், எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை இணையதளத்தின் வழியாக வலைத்தளத்திலும் (Website), வலைப்பூவிலும் (Blog) மக்களுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமானப் பதிவுகள் தரும்போது  அது எளிதாக, வேகமாக, உலகம் முழுதும் சென்றடைகிறதுஎன்கிற கருத்தை பகிர்ந்து கொண்டபோது அதில் 'இவருக்கும் உடன்பாடு இருந்தது' என்றே சொல்ல வேண்டும்.

  
          பள்ளிப்பருவத்திலிருந்தே அவ்வப்போது இவருக்குத் தோன்றும் கதைகள், கட்டுரைகள் பலவற்றை எழுதுவதும், இவரைக் கவர்ந்தவற்றைக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்வதையும் வழக்கமாகவே கொண்டிருந்தார். இவர் அம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன் அவைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வலைதளத்தில் பதிவிடலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் மாநாட்டுக்குப்பின் இவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அதாவது, பணம் செலுத்தி
 வலைத்தளத்தில் (Website) வெளியிடுவதை விட, இலவசமாகக் கிடைக்கும் வலைப்பூவில் (blog) வெளியிட முடிவு செய்தார்.


         அதோடு உலகம் முழுவதும் ஆங்கிலம் படித்தவர்கள் பலர் இருப்பதனாலும், அவர்களே மிகஅதிகமாக இணையதளத்தினைப் (Internet) பயன்படுத்துவதனாலும், இவருடைய தமிழ்க்கட்டுரை ஒன்றை மிகவும் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் மொழி மொழிபெயர்த்தார். அதனை பலரிடத்தில் காட்டி, தனது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டபோது, அவர்களது பார்வை
  வேறுவிதமாக இருந்தது இவரை மேலும் சிந்திக்க வைத்தது. அதாவது ஆங்கிலத்தில் இது போன்ற கட்டுரைகள் நிறையவே வலைத்தளத்தில் இருக்கின்றது என்றும், ஆனால் தமிழில் இது போன்ற கட்டுரைகள் இலவசமாக கிடைப்பது அரிதுஎன்றும் தெரிவித்தனர். அதோடு தமிழில் எழுதினால்தான் இயல்பான அழகும், உணர்வும் கலந்து தர முடியும்என்று அவர்கள் தங்களுடைய கருத்தை அறிவுரையாகச் சொல்ல, ‘அதுவும் சரியேஎன்று இவருக்குத் தோன்றியது.


           வலைத்தளத்தில் (website), வலைப்பூவில் (blog) தமிழில் படைப்புகளை வெளியிட வேண்டுமென்றால் கணினியில் தமிழ்த்தட்டச்சு (Tamil typing) செய்யத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் படைப்பாளர்களே கணினியில் தங்கள் படைப்புகளை தமிழ்த்தட்டச்சு செய்து, அதை நேரடியாகப் பதிவு செய்யும்போது, பல நன்மைகள்
 கிடைக்கும்  என்று இவர் ஊகிக்கத் தவறவில்லை. அதாவது படைப்பின் கருத்து, எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க உதவுவதோடு, காலம் மற்றும் பணவிரயமும் குறையும். அதோடு உலகின் எந்த ஒரு மூலைமுடுக்குகளில் கூட எவ்விதத் தங்குதடையுமில்லாமல் தங்கள் படைப்புகளை வெகுவிரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். அதுமட்டுமில்லாமல் படைப்பின் தாக்கத்தை உடனுக்குடன் அறியலாம் என்றும் இவர் கணித்தார். ஆனால், அச்சமயத்தில்  இவருக்குத தமிழ்த்தட்டச்சு செய்யத் தெரியாது. என்ன செய்வது? என்று இவர் திகைத்தார்.

       இவரது சிங்கபூர் நண்பரிடம் தமிழுக்கு எத்தனை எழுத்துப்பலகை (Keyboard) இருக்கிறது?’ என்று கேட்டபோது, அவர் சுமார் இருபதிற்கும் மேல் இருக்கும்என்று  சொன்ன பதில் இவரது தலையை சுற்ற வைத்தது. அதில் எது தனக்கு எளிதானது? என்று இவர் ஆராய்ந்தபோது அவை  அனைத்தும் எளிதாகவும் விரைவாகவும் கற்கக் கூடியதாக இல்லை என்பது இவருக்குத் தெரியவந்தது.    இதெல்லாம்    தனக்கு  ரிப்பட்டு வராதுஎன்று ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி தமிழ் வார்த்தைகள் கொடுக்கும் முறையினைக் கற்றுக் கொண்டார். அதாவது  'ammaa' என்று ஆங்கில எழுத்துகளைத் தட்டச்சு செய்தால் 'அம்மா' என்று தமிழில் மாறும். அது ஓரளவிற்கு இவருக்குக் கை கொடுத்தது. ஒரு வழியாக இவரது ஆன்மீகக் கட்டுரையின் முதல் பாகத்தை தமிழில் இவரது வலைப்பூவிலேயே வெளியிட்டார். இப்படியாக இவரது பதிவுகள் தொடர்ந்தன. அதன் பலனாக வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் உள்ளூரிலிருந்தும் சிலர் இவரது படைப்புகளைப் படித்துப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தனர்.


         தான் ஒரு சௌராஷ்டிரராக இருந்தாலும் இவருக்குத் தமிழ் வேட்கைஉண்டான விதமும், ‘உமாசுக்பிறந்த விதமும் பார்த்தால், படிப்பவர்கள் மெய் சிலிர்த்து போவார்கள் என்பது உறுதி. இவருக்கு, கவிதை எழுதுவதற்குக் கிரியாஊக்கியாக இருந்ததற்கும், தமிழ்மொழி மேல் பற்று வருவதற்குக் காரணமாக இருந்தது எது? என்று கேட்டால், அது மதுரையில் உலகத் தமிழாய்வுக் கழகம் மற்றும் மாமதுரைக் கவிஞர் பேரவையும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டி என்கிற செய்திதான்.
 அன்றைய தினத்தில் இவர் கவிஞர் இல்லை. ஏதோ எழுதுவார் அவ்வளவுதான்.  இருந்தாலும் அக்கவிதைப் போட்டியில் இவர் கலந்து கொண்டார்.

      அக்கவியரங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த கவிதைமாமணி வீரபாண்டியத் தென்னவரின் துடிப்பான தமிழ் பேச்சும், சரளமாகத் தருகின்ற கவிதைகளின் முழக்கமும், அனைவரையும் கவர்ந்திழுக்கும் தமிழ் உச்சரிப்பும், கவிதையினை எழுதத் தூண்டும் மற்றும்  ஆர்வமூட்டும் பாங்கும் இவரைத் தமிழின்பால் இழுத்தது என்றே சொல்ல வேண்டும்.

          அன்று முதல் அவர் மனதில், தமிழின் மேல் நாட்டம் அதிகமானது. அக்கவியரங்கத்தில் இவருக்குப் பரிசு கிடைக்கவில்லை என்பதை இவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அக்கவியரங்கத்தில் வாசித்தக்  கவிதையை இவரது வலைப்பூவில் வெளியிட்டார். என்ன விந்தை! உலகெங்கும் பலர் அதைப் படித்துப் பாராட்டியது இவருக்கு வியப்பையும் பெருமையும் தந்தது. இந்த உந்துசக்தி காரணமாக, இவர் மாதாமாதம் மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவியரங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு கவிதை பாடி வந்ததோடு அக்கவிதைகளை இவரது வலைப்பூவில் பதிவிட ஆரம்பித்தார். அதன் விளைவு ஏராளமானோர் அக்கவிதைகளைப் படித்து ரசிக்க ஆரம்பித்தனர்.

           மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் கவிதைமாமணி வீரபாண்டியத் தென்னவன் அவர்கள், தன் தலைமையில் பல இடங்களில் நடைபெற்ற கவியரங்குகளில் இவரைப் போன்ற பல புதிய கவிஞர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் கவிதைகள் பாட வாய்ப்பளித்ததோடு  பல விருதுகளையும், பட்டங்களையும் கொடுத்துக் கௌரவப்படுத்தினார் என்பதுதான் சிறப்பு. அத்துடன் நின்றுவிடவில்லை.

           மதுரையில் உள்ள உலகத் தமிழ் சங்கத்திலும்இவரைப் போன்ற பலருக்குக் கவிதைகளைப் பாடுவதற்கும், பல புதிய நூல்கள் வெளியிடுவதற்கும் துணைபுரிந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். கவிதைமாமணி வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தலைமையில் நடக்கும் கவியரங்குகளில் பெரும்பாலான கவிதைகளின் தலைப்புகள்,  தாய்மொழியான தமிழ்மொழியை அழியாமல் காப்பது எப்படி?, தாய்மொழித் தமிழில் அந்நிய மொழி கலக்கலாமா?, தாய்மொழித் தமிழை வளர்ப்பது எப்படி? என்பது போன்று தமிழைச் சுற்றியே அதன் தலைப்புகள் இருக்கும்.

      அக்கவியரங்குகளில் பல தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் பேசும்போது  தமிழ்மொழியானது இன்று,  மக்களிடையே காணப்படும் அந்நியமொழி மோகத்தாலும், அந்நியமொழிகளின் ஆதிக்கத்தாலும் அழிந்து கொண்டு வருகின்றன என்றும், இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்மொழி போன்று உலகத்தில் உள்ள பல மொழிகள் அழிந்துவிடும் அபாயம் உள்ளதுஎன்ற அதிர்ச்சிச் செய்தியைச் சொன்னபோது இவரது மனம் துடிதுடித்தது. அதோடு தமிழுக்கு உண்டான இந்த நிலைமையைத் எவ்வாறு தடுக்கலாம்? என்பதைப் பல கோணங்களில் சிந்தித்தது.


          கடைசியில் இவருக்கு ஒரு பதில் கிடைத்தது. அதனை அக்கவியரங்கில் பகிர்ந்து கொண்டார். அதாவது தமிழ்மொழி அழிவிலிருந்து காக்கப்பட வேண்டுமென்றால்
 தமிழ்ப்படைப்புகள் அனைத்தும் இணையதளத்தில் வலம் வரவேண்டும் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதனை ஏற்றுக் கொண்ட தமிழ்ப்பெருமக்கள்
அதெல்லாம் சரிதான், ஆனால், எல்லோருக்கும் கணினியில் 'தமிழ்த்தட்டச்சு' செய்யத் தெரிய வேண்டுமே! அது மிகவும் கடினமாயிற்றே! மேலும் உங்களைப் போல் ஆங்கில எழுத்துகளின் துணை கொண்டு தட்டச்சு செய்து தமிழ் வார்த்தைகளைப் பெறுவது கூடத் தவறு. ஏனென்றால் நீங்கள் மறைமுகமாக ஒவ்வொரு தமிழனும் ஆங்கிலமும் கற்க வேண்டும் என்றல்லவா சொல்கிறீர்கள். அதோடு ஆங்கிலமொழி எழுத்துகளைக் கொண்டு தமிழ்மொழி உச்சரிப்பில் தட்டச்சு செய்து தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருப்பது அதைவிடத் தவறு. அவ்வாறு செய்வதால் விரைவில் தமிழ்மொழி அழியும் வாய்ப்பு உள்ளது. இதனைக் கட்டாயம் தடுத்தே ஆகவேண்டும்" என்று முழங்கியபோது இவரது இதயம் சற்று கணத்தது.


          அன்று இவர் மனதில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டதோடு தான் எப்பாடு பட்டாவது
 கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்தே தீர வேண்டும்  என்றும்   கங்கணம் கட்டிக் கொண்டார். அந்த ஆராய்ச்சியில் ஈடுபடும்போது இவருக்கு ஒரு உண்மை புலப்பட்டது. அதாவது உலக மக்களில் பெரும்பாலானோர் தங்கள் தாய்மொழியைக் கணினியில் தட்டச்சு செய்யத் தெரியாதவர்கள் என்று!’. இவரது கணினி எழுத்துப் பலகைகளின் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. வருடங்கள் கடந்தன. இறுதியில் இவர் ஒரு முடிவுக்கு வந்தார்.


         அதாவது கணினி எழுத்துப்பலகையில் உள்ள அனைத்து எழுத்துகளும் எளிதாய் நினைவில் வைத்துக் கொள்ள, கற்கும் முறையில் அதாவது அகரவரிசையில் இருக்க வேண்டும் என்கிற உறுதியோடு உமாசுக்உருவாக்கினார். கையோடு அதற்கான பதிப்புரிமையும் வாங்கிவிட்டார். அதனை ஒரு நாள் மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கத்தில் உமாசுக்இல் தமிழ்த்தட்டச்சு செய்து காட்டியதில் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். மேலும் பல அமைப்புகளில் உமாசுக்ஐ அறிமுகப்படுத்தினார். அனைவரும் இதனைப் பாராட்டத் தவறவில்லை என்றாலும் இன்றளவும் அரசு அல்லது கணினித்துறை அங்கீகாரத்திற்காக எதிர்நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கிறார்.


           இவரது இந்த உமாசுக்நூல், பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, தேனி மாவட்டம், கம்பம் நடத்தியப் போட்டியில் பதக்கப் பரிசு பெற்றது. அதோடு வாசிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக் கழகத்தில், சிறந்த நூலுக்கான விருது உமாசுக்நூலுக்கு கிடைத்திருக்கின்றது என்பதையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அனைத்திற்கும் மகுடம் சூட்டும் விதமாக கவிதைமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன்,தலைவர், மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை அவர்கள் இந்நூலுக்கு அளித்த அணிந்துரையில், இவரது மகத்துவமும் நூலின் சிறப்பையும் நறுக்கென்று சில வரிகளில் சொல்லி இருக்கிறார். அரும்பாடுபட்டு, நம்பிக்கையை விட்டுவிடாமல், எடுத்த பணி முடிக்கும் துடிப்புடனே இயங்கி வெற்றிக்கனியைப் பெற்று உள்ளார். கொட்டும் பனியை விட, கோடை வெயிலை விட, வாட்டும் குளிரை விட, வாடைக் காற்றை விடக் கொடுமை மிக்க நிகழ்வுகளை எதிர்நோக்கிய பின்னரும், புறமுதுகு காட்டாமல் இலக்கை எட்டிப் பிடித்திருக்கின்றார். அவர் உழைப்பில் விளைந்த கரும்பு, உலகைக் கவர்ந்திழுக்கும் அரும்பு, பலர் தாய்மொழிகளைப் பிழைத்திட வைக்கும் விருந்து!


          உமா மென் தொடு எழுத்துப்பலகை (UMASK), உண்மையில் தொடக்கக் கல்வியைக் கற்றுத் தரும் பள்ளிக்கூடமாகக் குழந்தைகளுக்கும், கல்லூரிகளாக இளையோர்களுக்கும், பல்கலைக்கழகங்களாகப் பெரியோர்க்கும் பயன்படும். உலகம் இன்று ஓடும் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஓடிக்கொண்டுள்ள தமிழினம், தங்களின் தாய்மொழித் தமிழை அதன் எழுத்துகளை மறந்துவிடாமல் நினைவில் நிலைநிறுத்தி வைத்துக் கொள்ளவும், நேரடியாக அகரவரிசைத் துணையுடன் களமிறங்கிக்
 கணினியில்  தமிழ்மொழியைக் கற்றிடவும் உதவும்என்று கூறியுள்ளார்.

           ‘வாழ்வியல் முன்னேற்றம்மாத இதழில் ந.நாகராசன் அவர்கள் உமாசுக்’ (UMASK) நூலைப் பற்றிய மதிப்புரையில் உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவைக் கல்லால் அடித்தே கொன்றார்கள். கண்டுபிடிப்பாளர்கள் முதன்முதலில் சோகத்தைச் சுமந்து, உலகிற்கு ஆக்கத்தைத் தந்ததைப் போல, கணினி உலகில் கணினியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும், அதை தாய்மொழி சிறக்க வைக்கும் பாதையை உருவாக்கித் தந்த பெருமை நூலாசிரியர் கவிபாரதி கு.கி.கங்காதரன் அவர்களுக்கு உண்டு. போட்டி உலகில் ஒரு வெற்றியாளர் யார்? எனக் கேட்டால் அவர் ஆசிரியர் கு.கி.கங்காதரன் என்றால் மிகையாகாதுஎன்றும், “என்ன சொல்லி அவரைப் புகழ்ந்தாலும் தகும்என்றும், “பயனுள்ள பணிக்கு என் பாராட்டுகள்என்பதையும் தெரிவித்துள்ளார்.
   


            கண்டுபிடிப்பாளர்கள் காலத்தைக் கடந்து சிந்தனை செய்வதால், அவர்கள் உலகுக்குத் தர நினைக்கும் ஆக்கப்பூர்வமான செயலை முதன்முதலில் நடைமுறைமுறைக்குக் கொண்டுவருவதில் பல இடர்பாடுகளையும் சோகத்தையும் சந்திக்க நேரிடுகிறது. அத்தகைய நிலைதான் கவிபாரதி கு.கி.கங்காதரன் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. ஆம், கணினி உலகில் சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை கணினியைத் தயக்கமில்லாமல் எவ்வாறு எளிதாக இயக்கலாம்? என்பதோடு உலகளாவியத் தாய்மொழிகளில் அழிந்து கொண்டிருக்கும் பல மொழிகளைக் காக்கும் வழியை அவர் கண்டுபிடித்த உமாசுக்
 (UMASK – Uniform Multi-lingual Alphabets Soft Keyboard) அவர் தனது புத்தகத்தின் மூலம் விரிவாக எழுதி அருமையாக வெளியிட்டுள்ளார்.

 

           இத்தருணத்தில் அவர் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், போட்டிகள் நிறைந்த இந்தக் கணினி அறிவியல் உலகில், பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் அந்நிய மொழிகளிலிருந்து தமிழ்மொழி அழியாமல் காக்கப்பட வேண்டுமென்றால், அதனைப் புதுவழிகளில் இக்காலமாற்றத்திற்கேற்ப தமிழ்ப் படைப்புகளை இணையதளத்தில் வாயிலாக வலைதளங்களிலும், வலைப்பூவிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் உலக மக்கள் அனைவரும் தமிழின் பெருமையினை அறியும் அரிய பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று அதிநம்பிக்கையுடன் கூறுகிறார். அதற்கு அடிப்படையாக, எல்லோரும் எளிய முறையில் விரைவாகப் பழகும்படி கணினியில் தமிழ்த்தட்டச்சு விசைப் பலகை’ (Tamil keyboard layout) இருக்க வேண்டும். அந்தச் செயலை உமாசுக்செய்துள்ளது என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


        இந்த உமாசுக்’, உலகத் தாய்மொழிகளைக் காக்கப் பெற்ற வரம். அறிவில் சிரம். மிகச் சிறந்த தரம். ஆக்கத்திற்கு என்றும் நிரந்தரம் என்றே கூறலாம்.


காகிதத்தால் எழுதும் எழுத்துகள்

கரையானால் அழிந்து விடும்

கணினியால் எழுதும் எழுத்துகள்

காலத்தால் நிலைத்து நிற்கும்.


இதுதான் உமாசுக்நமக்கு நேரடியாகக் கொடுக்கும் விழிப்புணர்வுச் செய்திஎன்று நான் நம்புகிறேன். வெளிநாட்டவர்கள் தங்கள் இஷ்டப்படி அறிமுகப்படுத்திய கணினி எழுத்துப் பலகைகளைத்தான் (Computer Keyboard) நாம் பயன்படுத்தி வருகிறோம். அவைகளைத் தவிர மற்ற எழுத்துப் பலகைகளை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்என்கிற மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் தேவைக்கேற்ப அவர்கள் விரைவாகப் புரிந்துகொண்டு, எளிதாக பயன்படுத்தக் கூடிய உமாசுக்கு தமிழ்நாட்டில் தமிழ் மக்களாகிய நாம் அமோக ஆதரவு தந்து, அதனை விரைவாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதே எனது
 விருப்பம். 

       ‘தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும்!என்கிற வாசகம் கேட்பதற்குத் தேனாக இருந்தாலும், ‘உமாசுக்விஷயத்தில் கவிபாரதி கு.கி.கங்காதரன் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்ததாகவே நினைக்கிறேன். அவர், தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னையில் நடந்த முதலமைச்சர் கணினித் தமிழ் விருது -2015’ மூலம் உமாசுக்ஐ அறிமுகப்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உட்பட அனைத்துத்
 துறையில் உள்ள தமிழ் மக்களிடத்தில் விரைவாகக் கொண்டு செல்ல முடியும்என்கிற நோக்கத்தில் அதற்கு விண்ணப்பித்தார்.


          அதுமட்டுமில்லாமல் சென்னையில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், விருது தேர்வுக் குழு முன்னிலையில் நேரடியாக உமாசுக்தமிழ்த்தட்டச்சின் செயல்முறையை விளக்கவும் செய்துள்ளார். ஆனாலும்
 அப்பொழுது அந்த விருதுக்கு உமாசுக்தேர்வாகவில்லை. இப்படி ஒரு முறையல்ல, இரு முறையல்ல, மூன்று முறை! விண்ணப்பித்தும், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னைக்கு நேரடியாகச் சென்று உமாசுக்ஐ விளக்கிய பின்னரும் அதன் பலன் கவிபாரதி கு.கி.கங்காதரன் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.


           நிறைவாக, காலம் கடந்து தெரிகின்ற உண்மையும், கிடைக்கின்ற தீர்ப்பும், வருகின்ற ஞானமும், பெறுகின்ற அறிவும், விதைத்த விதையும், பெய்கின்ற மழையும் வீணே. அதற்கு இடம் தராமல் உமாசுக்ஐ எவ்வளவு விரைவாக உலக மக்களுக்குத் தெரியப்படுத்துவதோடு அதனை பயன்படுத்தச் செய்கின்றோமோ அவ்வளவு விரைவாக தமிழ்மொழி உட்பட அனைத்துத் தாய்மொழிகளும் காக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமில்லை. அதற்கு உத்தரவாதம் அளிக்கிறது இவரது உமாசுக். உமாசுக் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் இவரது வலைப்பூ மூலம் அறிந்துகொள்ளலாம்.


**************************



No comments:

Post a Comment