உள்விதி மனிதன்
சம மனித கொள்கை
பாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்
I AM A POWER MACHINE WITHIN YOU
மேன்மை மனிதா ! உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். உனக்குள் இருக்கும் எனக்கு என்ன வேலை என்று சொல்கிறேன் கேள்!
அன்பு மனிதா! உனக்குள் பல சக்தி இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது கல்வி இயந்திரம், செல்வ சக்தி இயந்திரம், ஞாபக சக்தி இயந்திரம், ஆக்க சக்தி இயந்திரம் , அறிவு சக்தி இயந்திரம், இச்சை சக்தி இயந்திரம், அழிவு சக்தி இயந்திரம், ஆற்றல் சக்தி இயந்திரம், பேச்சு, எழுத்து, ஆரோக்கியம், பலம் போன்ற சக்தி இயந்திரங்கள் இயங்கிக் கொண்டுயிருக்கின்றன. அவற்றில் நீ எது விருப்பப்படுகின்றாயோ அதை என்னிடம் சொன்னால் அதை இயக்கி அதன் சக்தியை உனக்கு கொடுப்பது தான் எனது வேலை. அதாவது நீ நினைக்கும் எண்ணங்கள் பலமானதாக இருந்தால் ஆற்றல் மிக்கதாக நம்பிக்கையுள்ளதாக இருந்தால் அதற்கு ஆற்றல் கொடுத்து செயல் வடிவம் கொடுப்பேன்.
மென்மையான மனிதா! நீ நல்லது நினைக்கும் ஒவ்வொரு செயலையும் அதற்குரிய சக்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்து உன்னை பலவழிகளில் வளர்ச்சியைக் கொடுத்து உன்னை முன்னோக்கி செல்ல உதவிடுவேன். உனது வாழ்வு எப்போதும் மலரும்.
அதேநேரத்தில் ஏதாவது தீய செயல்களை என்னைச் செய்யத் தூண்டினால் அதை செய்யவிடமாட்டேன். மேலும் அதற்கு ஒத்துழைக்கமாட்டேன். அதை நீயாகத் தான் இயக்கவேண்டும். அந்த இயக்கம் பின்னோக்கி இருப்பதோடு அது உன்னை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும். ஆகையால் எக்காரணம் கொண்டும் எனது அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய எண்ணாதே! அது உனக்கு ஆபத்தைக் கொடுக்கும்.
இனிய மனிதா! பல மனிதர்களை உனது வாழ்க்கையில் சந்தித்திருப்பாய். அதில் மிகமிகச் சிலரே உனது வாழ்க்கையில் அக்கறை கொண்டிருப்பார்கள். பலர் உன்னை துரோகம் செய்ய எண்ணுவார்கள். 'அதை எப்படி நான் தெரிந்து கொள்வது?' என்று என்னிடத்தில் கேட்பது தெரிகின்றது.
அதாவது யார் ஒருவர் உனது வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றை ஒரு குறைவில்லாமல் சந்தோஷமாக தொடர்ந்து கொடுக்கிறார்களோ அவர்களே உண்மையான மனிதர்கள். அவர்களே உனது குரு. அவர்களே உனது தெய்வம். அவர்களே உனது நண்பர்கள். அவர்களே வழிகாட்டிகள். அவர்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும்.
மேன்மையான மனிதா! உன் வயதிற்கேற்ப அறிவையும் ஆற்றலையும் கொடுத்து வருகிறேன். அதாவது சிறு வயதில் அறிவு குறைந்தும், ஆற்றல் அதிகமாகவும், வயது ஏற ஏற அறிவு பெருக்கி ஆற்றலையும் பெருக்குகிறேன். ஒரு குறிப்பிட்ட வயதில் இரண்டும் சமமாகவும், பிறகு அறிவு அதிகரித்து ஆற்றல் குறைத்தும் , முடிவில் இரண்டும் மிக மிகக் குறைத்தும் (ஒரு குழந்தையைப் போல) செய்து இருக்கிறேன்.
அதாவது இந்த உலகம் புதுப்புது மனிதர்களால் புதுப்புது விதத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு தான் உனக்கு புதுப்புது வடிவத்தை, எண்ணங்களை நான் உனக்கு அளித்துவருகிறேன். உன்னிடத்தில் பல புதுமைகளை உருவாக்கும் சக்தியை அளித்துவருகிறேன். அதை வைத்துக்கொண்டு இந்த பூமியை புதுமையாக்கி இனிமையான முறையில் மகிழ்ச்சியாக அனுபவிக்கவேண்டும். ஆனால் அதில் எள்ளளவும் கெடுதல் அல்லது தீயவை இருக்ககூடாது என்பதே எனது இலட்சியம்.
இரக்கமுள்ள மனிதா! உனது அறிவு மற்றும் ஆற்றல் இயந்திரம் கொண்டு பல ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்தினால் நீ வெற்றி பல காண்பாய். அன்றி அதை அழிவுப்பாதையில் இயக்கினால் நீ அழிந்து போவாய்!
மதிப்புமிக்க மனிதா! எல்லோரிடத்திலும் நான் அறிவும் ஆற்றலும் கொடுத்திருக்கிறேன். நான் தீமை செய்பவர்களுக்கு எதிரியாகவும், நன்மை செயபவர்களுக்கு நான் நண்பனாகவும் இருந்து வருகிறேன். ஆக என் பேச்சைக் கேட்காமல் என்னை மதியாமல் தீய செயல்களை செய்தால் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும். நான் நன்மை செய்பவர்களுக்கு 1000 கைகளைத் தந்து உதவி செய்தும், தீமையின்போது முடமாகத் தடுத்தும் வருகிறேன்.
தீமையை நினைகாதே , தீமையை செய்யாதே! நான் உனக்கு நன்மையே நினைக்கச் செய்கிறேன். நன்மையே செய்யச்சொல்கிறேன். என் பின் நீ வந்தால் உன் பின் 1000 பேர்கள் வருவார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்.
இனிமை மனிதா! நீ என்னிடத்தில் காட்டும் உண்மையான விசுவாசத்தைப் பொறுத்தும், நல்ல எண்ணங்களை பொறுத்தும் உன் பக்கத்திலே இருப்பேன்.
உன் நல்ல செயல்களை ஊருக்குச் சொல்லலாம்!
ஆனால் தீய செயல்களைச் சொல்லமுடியுமா?
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com