Pages

Friday, 22 November 2013

70. MANY WAYS TO LOOSE YOUR MONEY - 70. பணத்தை இழப்பதற்கு பலவழிகள் :

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
70. MANY WAYS TO LOOSE YOUR MONEY 

*   The many ways to lose money in spite of the few ways are

* Gambling , stock market , on-line trading, rampant speculation , lottery
* Drink , cigarette ect., bad habits
* Lending money with high interest 

* People are changing their commitment before getting money and after getting money. So you want to give money to other think twice.
* Many success , achievement holding person are having the below characteristics :

* He never afraid of people with high strength .
* He never loose his policies and aim at any situation.
* He is more interested to create new things / ideas.
* He is listening closely in small things. He takes right decision for big things.
* He never be idle after his goal is reached.

* A systematic , quality , perfect  works are never be reworked.
* If you want a great achievement then your presentation should be highlighted whether it is words or any matter.

Success steps continuous next..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

70. பணத்தை இழப்பதற்கு பலவழிகள் :
* மனிதன் பணம் அளவுக்கு மீறி இழக்கும் பல வழிகளில்  சில வழிகள் 

* சூதாட்டம், பங்குச்சந்தை, ஊகவணிகம், லாட்டரி 
* குடி , சிகரெட்  போன்ற கெட்டபழக்கங்கள் 
* அதிக வட்டிக்கு ஆசைபடுதல் 
* பிறர் உன்னிடம் பணம் வாங்கும்போது ஒரு பேச்சும் , பணம் வாங்கிய பின் ஒரு பேச்சும் பேசுவர். ஆகவே பணம் கொடுக்கும்போது யோசித்து கொடுக்கவேண்டும்.
* பல வெற்றிக்கும் , சாதனைக்கும் உரியவர்களின் குணாதிசயங்கள்:

* அவர் தன்னைவிட அதிக பலம் கொண்டவர்களைப் பார்த்து எப்போதும் பயப்படுவதில்லை.
* தன் கொள்கைகளையும் , குறிக்கோளையும் விட்டுக்கொடுப்பதில்லை.
* புதியவை புகுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
* சிறு சிறு விசயங்களையும் உன்னிப்பாக கவனிப்பார்கள். பெரிய விசயங்களை உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்.
* வெற்றி அடைந்துவிட்டோம் என்று ஒருபோதும் 'சும்மா, இருக்கமாட்டார்கள்.

* ஒரு முறையான, தரமான, நேர்த்தியான எந்த ஒரு வேலையும் திரும்பச் செய்யவேண்டிய அவசியம் இருக்காது.

* நீங்கள் மிகப்பெரிய சாதனை படைக்கவேண்டுமெனில் நீங்கள் பேசும் வார்த்தைகள் அல்லது செயல்கள் நல்ல முறையில் எடுத்து இயம்ப வேண்டும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Wednesday, 20 November 2013

69. ARE YOU LOYAL TO MONEY RATHER THAN HUMAN BEING? - 69. நீங்கள் பணத்திற்கு விசுவாசமானவர்களா?

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

69. ARE YOU LOYAL TO MONEY RATHER THAN HUMAN BEING?
* Many people are loyal to the money rather  than human being . 
* In a growing company some people to be willing to work even with less salary. This is due to some reasons which are :
1 . Good guiding ( department head) boss / leader
2 . Induce to work creatively with compete
3 . Many opportunities for learning and growing
4 . Skilled people work around him.
* Some important things in your life that you should know :

1 . Nobody will help you without benefit
2 . Nobody will sell anything without profit
3 . If a person appraise you or speaking sweet words means he expect  jewelry , money , property or something deceived from you .

* In general, most of the 'love story' films are having a question mark regarding Hero's job, his salary and how to lead his life ? His only aim to achieve his love! whether it is correct? 

* Some people who want to appreciate others. Others prefer to speak in praise of himself. People want to give importance others . Let it go! Do they know how many famous people? How many famous people' life story have they studied?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரைகங்காதரன் 

69. நீங்கள் பணத்திற்கு விசுவாசமானவர்களா?

* பலர் மனிதர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ இல்லையோ பணத்திற்கு பன்மடங்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

* வளரும் நிறுவனத்தில் பலர் அங்கு சம்பளம் குறைவாக இருந்தாலும் விருப்பமாக வேலை செய்வதன் காரணங்களில் சில:

1. நல்ல வழி காட்டும் (துறை) தலைவர் 
2. ஆக்கப்பூர்வமாக போட்டிபோட வைக்கும் வேலை 
3. வளருவதற்கும் , கற்பதற்கும் நிறைய வாய்ப்புகள் 
4. சுற்றிலும் திறமையானவர்கள் வேலை செய்வது 

* வாழ்கையில் நீ தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமானவைகளில் சில:

1. ஆதாயமில்லாமல் உனக்கு யாரும் உதவி செய்யமாட்டார்கள்
2. லாபமில்லாமல் யாரும் ஒரு பொருளை விற்கமாட்டாட்கள் 
3. ஆசை வார்த்தைகள், பாராட்டி பேசுபவர்கள் பெரும்பாலும் தந்திரமாக உங்களிடம் நகை, பணம், சொத்து முதலியவைகளை உங்களிடமிருந்து ஏமாற்றி வாங்கிவிடுவார்.  
* பொதுவாக எல்லா 'காதல் திரைப்படங்களிலும்' காதல் ஒன்றே குறிக்கோளாய் இருப்பதோடு அவர் என்ன வேலை செய்கிறார்? எவ்வளவு சம்பாதிக்கிறார் ?எப்படி குடும்பத்தை நடத்துவார் என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது!
*  மனிதர்களில் சிலர் தன்னை மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென்று விரும்புகிறார்கள். தன்னை மற்றவர்கள் புகழ்ந்து பேசவேண்டுமென்று விரும்புகிறார்கள். மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற விரும்புகிறார்கள். அது போகட்டும்! இவ்வாறு புகழ்பெற்ற மனிதர்களை எத்தனை பேர்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? எத்தனை பேர்களின் சரித்திரம் படித்திருக்கிறார்கள்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

HAPPINESS WAYS - மகிழ்ச்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்

மகிழ்ச்சிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம் 
புதுக்கவிதை 

மதுரை கங்காதரன் 

தாய் குழந்தைக்கும் கொடுப்பது ஒரு வித மகிழ்ச்சி 
குழந்தை பேசும் மழலை தாய்க்கு மகிழ்ச்சி 

விரும்பிய பொருள் வாங்குவதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சுற்றுலா இடங்களுக்கு செல்லுவதில் மகிழ்ச்சி 

சிலருக்கு படிப்பதில் அலாதியான மகிழ்ச்சி 
சிலருக்கு பேசுவதில் ஒருவகையான மகிழ்ச்சி 

நினைத்த குறிக்கோளை அடைந்ததில் மகிழ்ச்சி 
வேண்டிய நபரை சந்தித்தலில் மகிழ்ச்சி 
ஒரு சிலருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி 
அதுபோல் சிலருக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி 

தெரிந்ததை இலவசமாக சொல்லித் தருவதில் மகிழ்ச்சி 
தெரியாததை கற்றுக்கொள்வதில் சிலருக்கு மகிழ்ச்சி 

இறைவனை பாடுவதில் வணங்குவதில் மகிழ்ச்சி 
பதவி வகிப்பதில் பலருக்கு மகிழ்ச்சி 

கோடி கோடியாய் சம்பாதிப்பதில் மகிழ்ச்சி 
ஏமாற்றுவதில் சிலருக்கு மகிழ்ச்சி 

வியர்வை சிந்தி உழைப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சோம்பேறியாய் சுற்றுவதில் ஒரு சிலருக்கு மகிழ்ச்சி 

பிடித்தவர்களிடம் அன்பு காட்டுவதில் சிலருக்கு மகிழ்ச்சி  
செல்லப்பிராணிகளிடம் பழகுவதில் மகிழ்ச்சி 
பிறரை சிரிக்க வைப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
மற்றவர்களை அழவைப்பதில் ஒரு சிலருக்கு மகிழ்ச்சி 

மக்களை அல்லாட வைப்பத்தில் சிலருக்கு மகிழ்ச்சி 
கலைகளை கற்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 

விளையாட்டு விளையாடுவது பலருக்கு மகிழ்ச்சி 
எழுதுவதில் சிலருக்கு மகிழ்ச்சி 

வலைதளத்தில் நட்பை வளர்ப்பதில் மகிழ்ச்சி 
பிடித்த நடிகர் படத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி 

விரும்பிய நபர்களுடன் மொபைலில் பேசுவது மகிழ்ச்சி 
நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதில் மகிழ்ச்சி 

பகிர்ந்து கொள்வதில் சிலருக்கு மகிழ்ச்சி 
அதிசயங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி 
இனிய சொற்களை, பாடல்களை கேட்பதில் மகிழ்ச்சி 
நறுமணத்தை நுகருவதில் மகிழ்ச்சி 

ருசியாக சாப்பிடுவதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சிலருக்கு ருசியாக சமைப்பதில் மகிழ்ச்சி 
அரட்டை அடிப்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
சிலருக்கு தூங்குவதில் மகிழ்ச்சி 

கனவு காண்பதில் சிலருக்கு மகிழ்ச்சி 
வண்ண உடைகளை அணிவதில் மகிழ்ச்சி   

என்றும் மகிழ்ச்சியாய் இருங்கள் 
மகிழ்ச்சியை பிறருக்குத் தாருங்கள் ..

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

DEEPAVALI SPECIAL - SHORT STORY - ஏமாளிகள் (தீபாவளி) ஸ்பெஷல்

ஏமாளிகள் (தீபாவளி) ஸ்பெஷல் 
சிறுகதை 
மதுரை கங்காதரன் 
 
எந்த தீபாவளிக்கும் இல்லாத திருப்தி இந்த ஆண்டு தீபாவளி 'ராசிஇல்லத்தில்    இருக்கும்  ரகுஅவன் மனைவி ராதைமகன் ரவி மற்றும் மகள் ரதி ஆகியோருக்கு   நிறைவைத் தந்ததுதீபாவளி அன்று பூஜை செய்துகார இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டுவெடி மத்தாப்பு கொளுத்தி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
 
அவர்களின் தீபாவளி கொண்டாட்டங்கள்  அன்றோடு முடிந்துவிடவில்லைஅந்த திருநாளில் பிரபலமான கடைவீதியில் விளம்பரத்தின் மூலம் அதிக பேரும் புகழும் பெற்ற அந்த குளு குளு கடையில் தாங்கள் தீபாவளிக்கு எடுத்த விலை உயர்ந்த ஆடைகளை   ரகு தனது அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும்ரவி,ரதி தங்கள் பள்ளிகல்லூரி நண்பர்களுக்கும் காட்டி அதன் பெருமைகளையும் வாங்கிய விலையும் சொல்லி    அவர்கள் வாய் பிளக்கும் காட்சியினை கண் குளிர பார்த்தும் அவர்கள் படும்   பொறாமையும் கண்டு ரசிக்கவேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருந்தது.  பொறுமையாக இருக்க முடியாமல் இருந்தாலும் அவர்கள் கட்டளையிட்டா நாளும் பொழுதும் நகர்கிறதுஅதற்கு வேண்டிய காலமும் நேரமும் வந்தால் தானே பொழுது   விடியும்?
 
ஆம்பொழுது விடிந்ததுஎன்றைக்குமில்லாமல் கொஞ்சம் அதிக அக்கறையுடன்   அலங்கரித்து தீபாவளி உடைகளை அழகாக உடுத்தி ரகு பள்ளிக்கும்ரதி  கல்லூரிக்கும் போகத் தயாரானார்கள்.ரவி 'பென்சில் பிட்ஜீன்ஸுடன் சற்று சிறிய அளவில்   கண்களைப் பறிக்கும் நிறத்தில் சட்டை அணிந்து அடிக்கடி தன் உடையினை தானே    பார்த்துக்கொண்டதோடு வேறு யாரேனும் பார்க்கிறார்களாஎன்று மற்றவர்களைப்    பார்த்துக்கொண்டே பள்ளிக்கு நடந்தான்அதேபோல் ரதி பெயருக்குத் தகுந்தாற்ப்   போல் அழகிய கூந்தலுடன்லேட்டஸ்டாக 'நெட்
டிஸைனில் சுடிதார் அணிந்து ஒய்யாரமாய் கல்லூரி செல்ல  தயாரானாள்.    இருவரும் அவர்களின் பேருந்துகளில் ஏறிச் சென்ற பிறகு ரகு தனக்காக தீபாவளிக்கு   எடுத்த பேன்ட்சர்ட் போட்டுச் சென்று  ஆபிசில் வேலை பார்ப்பவர்களிடம் காட்டி   அசத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை உதைத்து   விரைந்து சென்றான்.
 
மீதம் இருப்பது ராதை பாவம் அவள் எங்கு  யாரிடம் சென்று தான் தீபாவளிக்காக எடுத்த விலை உயர்ந்த சேலை வகைகளைக் காண்பிப்பது என்று தெரியாமல் பரபரப்பாக   சமையல் வேலைகள் செய்தது முடித்தாள்.

அப்பாடா என்று ராதை உட்கார்வதற்கும் அவளின் வீட்டு காலிங் பெல்லை பக்கத்து   வீட்டு பங்கஜம் அழுத்துவதற்கும் சரியாக இருந்தது.

"யாரு ?" என்று கேட்டுக்கொண்டே கதைவைத் திறந்தாள்.

"நான் தானம்மா பக்கத்து வீட்டு பங்கஜம்!" என்று குரல் வந்த அதே நேரத்தில் ராதை   கதவை திறந்தாள் ராதை.

"வாங்க பங்கஜம் அக்காதீபாவளி எல்லாம் எப்படி கொண்டாடுனீங்கஊர்லேயிருந்து   உங்க மகன்மகள் வந்தார்களா?" என்று விசாரித்தாள்.
 
"ஆமாம்மாஇந்த தீபாவளி வெகு நல்லாவே இருந்ததுஎல்லோரும் ஒன்று  சேர்ந்து ஒரு குடும்ப பண்டிகையாய் கொண்டாடும்போது மனசு இதமா இருக்குதுஎல்லாக்   கவலைகளும் பறந்து போயிடுச்சிவீடு முழுசும் சந்தோசம் நிறைஞ்சு காணப்படுதுஅது சரி உங்க வீட்டிலே எப்படி?"

இந்த வார்த்தை எப்போது தான் கேட்பாள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ராதை   இங்கேயும் அப்படித்தான்ஆனால் இந்த தீபாவளி இருக்கே எங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தீபாவளிசொன்னா அவ்வளவு சுவையாய் இருக்காதுஆனால் நான் காட்டுறது   பாருங்க.பிறகு புரிஞ்சுக்குவீங்கநாங்க எப்படியெல்லாம் மகிழ்ச்சி அடைஞ்சிருப்போம்ன்னு ! கொஞ்சம் இருங்க இதோ வந்துடுறேன்என்று பீரோவினைத்  திறந்து தங்கத்தை விட மதிப்போடு வைத்திருந்த இந்த தீபாவளிக்கு எடுத்த சேலையை மற்றும் இத்தியாதிகளை எடுத்து அவளின் முன்னால் வைத்து திறந்து காட்டினாள்.

அதைப் பார்த்த உடனே முகம் மலர்ந்தவளாய் இரு கண்களை அகல விரித்து   'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையினைபார்ப்பது போல் அவைகளைப் பார்த்தாள்   பங்கஜம்.
 
"என்ன இப்படி வச்ச கண்ணு மாறாம அசந்து பார்க்கீறீங்கபார்க்கிறபோதே இவ்வளவு  அதியப்படுறீங்களே ! இதோட விலையைக் கேட்டா இன்னும் ஆச்சரிப்படுவீங்க." என்று  பேசிக்கொண்டே போவதை 'நிறுத்துஎன்று சொல்லாமல் சொல்வது போல் 
 
"இதோட விலை தானே ! எனக்குத் தெரியுமேஇந்த சேலை அறுநூறு ரூபாய்மற்ற   வகையறா இருநூறு ரூபாஆக எல்லாம் சேர்ந்து எண்ணூறு தானே?" என்று பங்கஜம்   சொன்னதை கேட்ட ராதை 'என்று வாயை பிளந்தாள்.

"என்னம்மா இப்படி வாயை பிளந்து நிக்கிறேஎன்ன நீ சுய நினைவோடு இருக்கேயா?"  என்று சற்று உசுப்பினாள்.

கொஞ்ச நேரத்தில் சுதாரித்தவளாய் "என்னக்கா சொல்றீங்கஎண்ணூறு ரூபாயாநாங்க இவை எல்லாமே சேர்த்து மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினோம்நீங்க எங்கே   வாங்குனீங்க?"

நம்ம கைராசிக்கடையியிலே தான்"

"நாங்களும் அங்கு தான் வாங்கினோம்ஆமா நீங்க எப்போ வாங்குனீங்க?"

"தீபாவளிக்கு ஒரு மாசம் முன்னாடித் தான்!"

"நீங்க எப்போ வாங்குனீங்க?"

"தீபாவளிக்கு முந்தின நாள் தான்அந்தக் கடைக்காரன் இது புதுசா தீபாவளிக்கு   வந்திருக்கின்ற டிசைன்னு சொன்னான்அதில்லாம  நேத்து தான் வந்திறங்கி யிருக்குன்னும் சொன்னான்நீங்க தான் முதல்லே வாங்குறீங்க என்று அப்படி எப்படின்னு ஏதேதோ சொன்னான்அதோடு நிக்காம தீபாவளிக்காகத் தான் இந்த விலை!அதுக்கப்பறம் வந்தா இதோட விலையே தனின்னு அளந்தான்மனுஷன் எங்களை   ரொம்பவே ஏமாளியாக்கி விட்டானேஎன்று ஆதங்கப்பட்டாள்.

இருந்தாலும் மனசு ஒப்புக்கொள்ளாமல் "நல்ல பாருங்கஒரு வேளை துணியின் தரம்   இது மாதிரி இருந்ததா?" என்றாள் ராதை.

"சாட்சாத் இதே தரம்அசல் இதே துணி தான்.பொதுவா தீபாவளி சமயத்திலே   எல்லோரும் போனஸ் வாங்கி அவங்ககிட்டே கை நிறைய பணம் இருக்கும்அது   எக்ஸ்ட்ராவாக கிடைச்ச பணம்அதை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம   எல்லாத்தையும் தீபாவளி அன்னைக்கே செலவழிக்கனும்ன்னு நினைப்பாங்க.அதையே ஒரு பிளஸ் பாயிண்டாக எடுத்துக்கொண்டு பெரிய பெரிய கடைக்காரங்க மக்களுக்கு   பிடித்த கண்ணைக் கவரும் ஆடைகளுக்கு எக்கு தப்பா விலையை அவங்க இஷ்டப்படி  எழுதி விற்றுத் தள்றாங்க.அதை வெட்டி அந்தஸ்துக்காக அதிக விலை கொடுத்து   வாங்குறவங்க தான் ஏமாளிங்கமேலும் பேரம் பேச முடியாதுஅதில் போட்டுயிருக்கிற விலையை வாய் மூடி ரூபாயை எண்ணிக்கொடுத்து வந்துட்டே இருக்கணும்பேரம்   பேசுறது ஒரு கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறாங்கஇந்த மாதிரி ஏமாத்து வேலை ஜவுளிக் கடைகள்ளே மட்டுமில்லேஎல்லாக் கடைக்காரங்களும் அப்படித் தான்   இருக்காங்ககுறிப்பா பண்டிகைவிசேஷம் நாள்லே அவங்க வச்சது தான் விலை.  அதிலேயும் இந்த மாதிரி பெரிய கடைகளிலே ரொம்ப சாதாரணமாக நடக்குதுஅப்பறம் நீ இந்த மாதிரி வாங்கி ஏமாந்த விஷயம் வேறு யார்கிட்டேயும் சொல்லிடாதேயம்மாஅப்பறம் உன்னை சரியான 'ஏமாந்த சோனகிரின்னு முத்திரை குத்திடுவாங்கஎன்று   எச்சரித்து நடையைக் கட்டினாள்.
 
பக்கத்து வீட்டு பங்கஜம் பேசியதை இன்னமும் ஜீரணிக்க முடியாமல் அல்லாடிக்  கொண்டிருந்தாள் ராதைதீபாவளி அன்று இருந்த மகிழ்ச்சி கனவுகள் இப்போது   காற்றோடு காற்றாய் கரைந்ததுஏதோ பறி கொடுத்தவள்போல் வேறு எதிலும் கவனம் செலுத்த இயலாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அன்றைக்கு என்றைக்கும் இல்லாமல் சொல்லி வைத்தாற் போல் ரகுரவிரதி மூவரும் ஒரே நேரத்தில் வீட்டிற்கு நுழைந்தார்கள்அந்த மூவரின் முகத்தில் காலையில் இருந்த முகமலர்ச்சி இப்போது பூஜ்ஜியம் அளவில் இருந்ததுஅவர்கள் மூவரும் ஒருபக்கம்   உம்மனாம் மூஞ்சியாய் இருந்தார்கள்அவர்களின் எதிர்புறத்தில்  ராதை அதேபோல்   பேய் அறைந்தாற்போல் இருந்தாள்யார் எப்படி முதலில் ஆரம்பிப்பது என்று ஒருவர்   முகத்தை ஒருவர் பார்த்து கொண்ட இருந்தார்கள்சற்று நேரம் கழித்து ரகு தான்   முதலில் காலையில் தன்னுடைய அலுவலகத்தில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

"ராதாகாலையிலே ரொம்ப குஷியோட ஆபிசுக்குப் போனேனாஎனக்கு ஒரே ஷாக் !  எல்லோருக்கும் நான் ஷாக் கொடுக்கணும்ன்னு நினைச்சேன்ஆனா என்னை   முந்திக் கொண்டான் அந்த ஆபீஸ் பாய் மணி"

"அப்படி என்னங்க உங்களுக்கு ஷாக் கொடுத்தான்?"
 
"என்னவாஎன்ன நடந்ததுன்னு அப்படியே சொல்றேன்அந்த மணிப்பயல் என்னோட   சர்ட்பேன்ட் போலவே போட்டிருந்தான்என் கண்களை கசக்கி அது உண்மையான்னு   உத்துப் பார்த்தேன்ஏன்னா அவனுக்கு என்னோட ரேஞ்சுக்கு டிரஸ் எடுக்கிற அளவுக்கு வசதி இல்லைஎன்ன நடந்ததுன்னா....

"என்ன மணிஎன்னோட டிரஸ் போல..!"

"ஆமாம்  ரகு சார்நானும் அதைத் தான் கேட்கணும்ன்னு நினைச்சேன்!"

"மணிநீ எப்போதும் விலை கம்மியானத் தானே டிரஸ் எடுப்பேஇந்த டிரஸ்...." என்று  இழுத்தான் ரகு.

"ஆமாம் இந்த டிரஸ் விலை ரொம்பவே சீப் தான்சர்ட் ஜஸ்ட் இருநூறு ரூபாய்பேன்ட் முன்னூறு . மொத்தம் ஐநூறுஇதை எங்க மாமா ரொம்ப பிரியப் பட்டு வாங்கித் தந்தார்.

"என்ன மணி சொல்றே?"
 
நிஜம்மாத் தான் சொல்றேன்நான் எதுக்கு உங்ககிட்டே பொய் சொல்லணும்.அப்படி   பொய் சொல்றதா இருந்தா இதோட விலை மூவாயிரம்னு சொல்லியிருப்பேன்"

"ஆமா , நீங்க என்ன விலைக்கு வாங்குனீங்கஎப்பவும் நீங்க காஸ்ட்லி தானே எடுப்பீங்கநீங்க எப்படி இவ்வளவு சீப்பாக எடுத்தீங்க?"

"மணிநான் இதை நிஜம்மா மூவாயிரம் கொடுத்து தான் வாங்கினேன்.அந்த பிரபலமான கடையிலே தீபாவளிக்கு முந்தின நாள் வாங்கினது."

"அவ்வளவு கூட்டத்திலே நெரிசல் பட்டு இவ்வளவு விலை கொடுத்து ஏமாந்து    வாங்கியிருக்கீங்கங்களே!"

'உங்களை இந்த ஆண்டின் 'சிறந்த ஏமாளிஎன்கிற பட்டம் கொடுக்கலாம்என்று தன்   மனதிற்குள் சொல்லிக்கொண்ட்டான்.

"சரி.. சரி வேலையைப் பாருங்கஎன்று எல்லோரையும் அவரவர் சீட்டிற்கு அனுப்பி விட்டேன்அப்போது மணி சொன்னதிலிருந்து அன்னைக்குப் பூரா எனக்கு ஒரு வேலையும் ஓடலே.எப்போதுடா மணி ஆகும்வீட்டிற்கு போய்ச் சேரலாம்னு பறந்து   வந்துட்டேன்என்று காலையிலிருந்து அமுக்கி வைத்திருந்த மன அழுத்தத்தை   வெளியில் விட்டான்.

"அப்பாஉங்களுக்கு மட்டுமில்லேஎனக்கும் இதே கதி தான்என்று ரவி தன் பங்கிற்கு   புலம்பினான் .

"என்னடா சொல்றேகொஞ்சம் விவரமா சொல்லுஎன்றான் ரகு.
   
"அம்மா , அப்பா நீங்க எனக்காக ஆசையாய் எடுத்த இந்த டிரஸ் வெறும் அறுநூறு ரூபாய் தானாம்ஆனா நாம இதை ஆயிரத்து எண்ணூறு ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கோம்.
     
என்னோட பிரண்ட் ரஹீம் தன்னோட மாமா பையனுக்கு இந்த மாதிரி டிரஸ் தான்   அவங்க அப்பா ரம்ஜானுக்காக வாங்கித் தந்தாராம்.

அவன் சொல்லி முடிக்க 'உம்மென்று இருந்த ரதியை பார்த்து  

"ஏண்டி நீ சும்மா நிக்கிறேநீயும் ஏதாவது சங்கதி வச்சிருக்கிறியா?" என்று  கேட்டார் ரகு . 
 
மெல்ல தலையாட்டி "ஆமாம்பாநான் போட்டியிருக்கிற இந்த சுடிதார் செட் வெறும்   ஐநூறு ரூபா தானாம்ஆனா கடைக்காரர் நம்ம கிட்டே ஆயிரத்தி ஐநூறு வாங்கிட்டு    பெரிய நாமத்தை சாத்திட்டார்ஒரு மாசத்துக்கு முன்னாடி என்னோட பிரண்ட்   தன்னோட பிறந்தநாளுக்காக இதே டிரஸ் ஐந்நூறுக்கு வாங்கினாலாம்என்று   ஆளுக்காள் அவரவர் தங்களின் ஏமாளித் தனத்தை கூற கடைசியாக ராதையும்   காலையில் பங்கஜம் வந்து போனதையும் அவள் சொல்லிவிட்டுப் போனதையும்   விலாவாரியாக சொன்னாள்எல்லோரும் கோரோஸாக

"ஆஹா.. எங்கள் குடும்பத்திற்கு 'ஏமாளிகள் குடும்பம்னு  தான்னு பெயர்   வைக்கணும்ராசி இல்லம் பதிலா 'ஏமாளிகள்இல்லம் கூட வைக்கலாம் என்று அந்த  வருத்தத்திலும் ஆனந்தமாய் சொல்லிக் கொண்டனர்.

அது போதாதுநம்மளோட தீபாவளி ஸ்பெஷல் 'ஏமாளிகளின்  ஸ்பெஷல்என்று   சொல்லணும்.

சற்று அமைதிக்குப் பின்னர் இப்போது ரகு சற்று சீரியஸாக சொன்னான்.

"இப்போ பார்த்தீங்களாஅதிக ரூபாய் கொடுத்து வாங்கினாத் தான் நல்ல டிரஸ்னு   நினைக்கிறது ரொம்ப தப்பு.மேலும் தீபாவளி நெருங்க நெருங்கத் தான் லேட்டஸ்ட்   டிரஸ் கிடைக்கும்னு இனி நினைக்காம அடுத்த வருஷம் தீபாவளிக்கு ஒரு மாசம்   முன்னாடி கூட்ட நெரிசல் இல்லாம குறைந்த விலையிலே பிடிச்ச நல்ல டிரஸ்   எடுத்திடனும்.'போனஸ்கிடைக்கிற வரைக்கும் காத்திருக்காம ஒவ்வொரு மாசமும்   ஒரு கணிசமான தொகையை சேமிச்சு அதுலே எல்லாரும் டிரஸ் எடுத்து தீபாவளியை உண்மை மகிழ்ச்சியோடு கொண்டாடி அந்த 'ஏமாளிப் பட்டம்வராமே பார்த்துக்கணும்இதை நமக்கு தெரிஞ்ச உறவு மற்றும் நண்பர்களுக்கு சொல்லி புரிய வைக்கணும்."அதிக விலை கொடுத்து அவதி படவேண்டாம்இதை எப்போதும் நம்ம மனசிலே   வச்சிருக்கணும்சரி .அவங்க அவங்க வேலைகளைப் பாருங்கஎன்று   முற்றுப்புள்ளி வைத்தான் ரகு.
 
=================================================================

ஆக்கியோன் மதுரை கங்காதரன்.
வணக்கம்.

******************************************************************************************